Zenlp Counselling
ZENLP Counselling:
” எனக்கு ஏன் இப்படி ? ”
” இதிலிருந்து நான் எப்படி மீண்டு வருவது ? ”
” தவறுதான். செய்திருக்க கூடாதுதான். Guilt feel என்னை கொல்கிறது ”
” பேசாமல் இறந்துவிடலாம் என்று யோசித்தேன் ”
” என்னால் முடியாதா ? ”
” அவனால் முடியும். ஆனால் அவன் பார்வை மாறிவிட்டது ”
” அவளால் முடியும். தன்னை நம்ப மறுக்கிறாள் ”
” சிறந்த மாணவி. ஆனால் இப்போதெல்லாம் படிப்பதில்லை ”
பிரச்சினைகளின் வெளிப்பாடுகள் மேற்சொன்ன வார்த்தைகள். இவற்றினை எதிர்கொள்ள ஒரு ” மூன்றாவது பார்வை ” நமக்கு தேவை. பொதுவாக மூன்று வகை உண்மை உண்டு. A பார்வையில் உண்மை, B பார்வையில் உண்மை மற்றும் உண்மை! ( நாலாவது உண்மையும் உண்டு. ஆம். அது மனசாட்சிக்கு மட்டும் தெரிந்த உண்மை.) அந்த மூன்றாவது உண்மையை NLP counselling கொண்டு வரும். இந்த உண்மை அநேகமாய் முதலில் கசக்கும். ஆனால் இதுவே முது நெல்லிக்காய் போல் பின் இனிக்கும்.
என்னுடைய Counselling style நிச்சயம் வித்தியாசமானது. நான் மனிதர்களிடம் counselling செய்வது போல் தோன்றும். ஆனால் நான் அவர்களின் useless நம்பிக்கைகளுடன் ஒரு போரை நடத்தி கொண்டிருப்பேன்,ஆம்,சிரித்த முகத்துடன்
Counselling ல் ஒருவர் கேட்டார் .. ‘ சிரித்து கொண்டே அறைகிறீர்கள். எண்ணங்கள் உள்ளே சீரமைக்கப்படுவதை உணர்கிறேன். ஆனால் வலிக்கிறது ‘. வலிக்கும். கண்டிப்பாக வலிக்கும். Comfort zone ல் counselling செய்ய இது பொழுது போக்கு அல்ல. ஒரு fashion statement ம் அல்ல.
மனித வாழ்க்கை !

பிரச்சினைகளின் போது மட்டும் counselling செய்ய வேண்டுமா ? தவறு. அப்படியெல்லாம் இல்லை.
*ஒரு இலக்கினை அடைய ஒருவர் எடுத்துக்கொண்ட counselling,
*இலக்கினை அடைந்த பின்,
*புது உயரம் தொட மீண்டும் ஒரு counselling,
*Just ஒரு சில மணி நேர உரையாடல் counselling, *புதுப்பழக்கம் ஏற்படுத்த தேவையான counselling… என்றும் உண்டு. எந்த பிரச்சினையும் இல்லை எனில் இலக்கு இன்னும் சரியாக நிர்ணயிக்கப்படவில்லை – என்பது என் பார்வை. ( தேவையற்று எதையாவது செய்து கொண்டிருக்கும்போதும் இந்த பார்வை பொருந்தும் ). அங்கே counselling நிச்சயம் ஒரு திருப்பு முனையை கொண்டு வரும்.
இருபது வருட அனுபவம் இருப்பினும், அடுத்த counselling தான் என்னுடைய முதல் counselling என்று பயணிப்பதால், கற்றல் மட்டுமே என் அனுபவமாய். உங்களுக்கு ‘இதமாய்’ ஒரு counselling session எல்லாம் வாய்ப்பில்லை. உங்களின் ego வை நீங்களே கொஞ்சம் தட்டிவிட்டு, நேர்மறை விளையாடல்களில், அடுத்த best நோக்கி பயணிக்க தயார் எனில் .. நாம் சந்திப்போம். அப்படி அடுத்த best ஐ சந்திப்பவர்கள், பல வருடங்களாக, இன்னும் என்னுடன் வாழ்க்கை பயணங்களில். ( அப்படி சந்திக்க முடியாமல் காரணம் கண்டுபிடிப்பவர்கள் என்னுடன் பயணிக்க வாய்ப்பில்லை. வாய்ப்பே இல்லை. )
‘ நீ இதுவரை சாதித்த அனைத்தையும் விட நீ மிகப்பெரியவன் ‘ என்கிற ஒற்றை வரியில், உன்னை கண்டுபிடித்துவிட்டு, அதைவிட பெரியது இயற்கை என்று அதில் இருந்து dissociate ஆகி,விலகி, அடுத்த இலக்கை நோக்கி நகர்கிற, மகிழ்கிற வாழ்க்கை நோக்கி பயணிக்க தயார் எனில் .. நாம் நிச்சயம் சந்திப்போம்.
உங்களுக்கு என் முன் வாழ்த்துக்கள்.





