அவனும் அவளும் – 001
ஆம். உன்னை சுற்றி ஒரு கருப்பு பூனை வலம் வருகிறது. அதற்கு உன்னைப் பார்க்க வேண்டும். உன்னை என்றால் உன்னை அல்ல. உன் flesh ஐ – தோலை. உன் மறைக்கப்பட்ட பகுதிகளை. சிறு இடைவெளிகளில் தெரியும் உன் அங்கங்களை. நீ மறைத்த பின்னும் ‘அநேகமாக இப்படித்தான் இருக்கும் ‘ என்ற கற்பனையோடு உன்னை தொடரும் அந்த கருப்பு பூனைக்கு மணி கட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும். கொஞ்சம் சூடும் போடவேண்டும் நீ. இல்லை எனில் virtual ஆக நீ பார்வையால் scan செய்யப்படுவாய். ஆயிரம் புழுக்கள் உன் உடலில் ஊர்வதை போல அருவருப்பாக இருக்கும். அவன் அந்த புழுக்களில் ஒன்று அல்ல. அத்தனை புழுக்களும் அவனே ! அவன் எச்சங்கள் எப்படி உன் தோலில் விழுவதை நீ அனுமதிக்க முடியும் ?
ஏன் அவனுக்கு உன் தோலில் இவ்வளவு அக்கறை ? Flesh மேல் ஒரு பார்வை வெறி. நீ குனிந்தால், நிமிர்ந்தால், நகர்ந்தால், அமர்ந்தால்…. உன்னை நீ பார்க்காதபோது பார்வையால் விழுங்க அவன் முயற்சிப்பதன் மர்மம் என்ன ? நான் ஈர்ப்பை பற்றி பேசவில்லை. ஈர்ப்பு இயல்பு. ஈர்ப்பு அழகு. ஈர்ப்பு திருட்டுத்தனமாக பார்க்க சொல்லாது. ஆனால் வெறி அப்படி அல்ல. எலும்புக்கு நாய் காத்திருப்பதும், உன் flesh க்கு அவன் காத்திருப்பதும் ஒன்றே – நாய் எலும்பை சாப்பிடும்போது கவனித்ததுண்டா ?வாயின் ஓரம் அந்த எலும்பின் மிச்ச இரத்தம் வழியும். அப்படித்தான் அவன் பார்வையும்.
இரத்தம் அவன் வாயில் எச்சிலாக வழியும். அணு அணுவாக உன்னை அவன் கடித்து குதறுவான். நீ இரத்தமாய் வெளிவருவதை அவனுக்கு பார்க்க வேண்டும்.
Flesh மேல் ஏன் அவனுக்கு இவ்வளவு வெறி ? குறிப்பாக மறைக்கப்பட்ட பகுதிகள் மேல் ? பொதுவாக மனிதன் சுகம் தேடுதல் இயல்பு. ஆனால் கற்பனையில் சுகம் தேடுதல் ? அது ஒரு வியாதி. சமூகம் கட்டமைத்த ஒரு எல்லையை தாண்ட வேண்டும் அவனுக்கு. யதார்த்தத்தில் முடியாது. கற்பனையில் முடியும். கற்பனையில் அவனால் உன்னை துகில் உரிக்க முடியும். அவன் நினைத்த படி உன்னுடன் ஆடையற்று இருக்க முடியும். அவன் நினைத்தபடி நீ அவனுக்கு சேவகம் செய்வாய். அந்த சுதந்திரம் அவனுக்கு வேண்டும். அவன் மட்டுமே அங்கு ராஜா. மொத்த உலகப்பெண்களும் அங்கு அடிமைகள் – அவன் அம்மா, தங்கை உட்பட. இந்த அருவருப்பான மனதின் வளர்ச்சியே porn industry. அது, அந்த அருவருப்பை அவ்வப்போது அளித்து, அவனுக்குள் நெருப்பை ஏற்றிக் கொண்டே இருக்கிறது. உன்னிடம் சிரிப்பான். கொஞ்ச நேரம் முன் பார்த்த porn ல் இருக்கும் யாரோ ஒருவரை delete செய்து உன்னை cut copy paste…. அருவருப்பாக இல்லை ? ஆம். அப்படித்தான் உன்னை சுற்றி நடக்கிறது. ஆக கற்பனையில் வாழும் வியாதி அவனுக்கு. நடைமுறையில் மனைவி இருப்பாள். ஆனால் மனைவியையும் delete cut copy paste செய்ய துணிந்தவன் அவன்.
அவனுக்கோர் பெண் குழந்தை இருக்கும். ஆனால் யாரோ ஒருவரின் பெண் குழந்தையை அவன் இஷ்டம்போல் துகில் உரிப்பான். சமயத்தில், கற்பனையில், தன் குழந்தைக்கும் துகில் உரித்தல் ஒரு நொடி நேர்ந்தாலும் கவலைப்பட மாட்டான். அவனுக்கு தேவை கற்பனை சேவை. Subject எதுவாக இருந்தாலும். ஒரு உயிர் subject ஆக மாறும் கொடுமை அரங்கேறும்.
உனக்கு தெரியுமா ? உன் ‘வெளியில் தெரியும் பகுதிகள்‘ ( ஆம் பகுதிகள் … அது subject ஆக எப்பொழுதோ மாறி விட்டது ! ) அவனுக்கு ஆரம்பபுள்ளி. அங்கிருந்து கற்பனை குதிரைகளை அவன் தட்டி விட்டு ராஜாவாகிவிடுவான். ஆக… நீ செய்ய வேண்டியது ? தெரியும் பகுதிகளை மறைப்பதா ? **** ***t. ” உன் தோட்டத்தை பார்த்தால் எனக்கு அறுவடை ஞாபகம் வருகிறது.. ஆகையால் தோட்டத்தை மூடிவிடு” என்று ஒருவன் சொன்னால்… நீ செய்யவேண்டியது தோட்டம் மூடுதல் அல்ல. சொன்னவனின் கற்பனையில் ஒரு அறை கொடுத்தல். அந்த அறை எழுத்தால், செயலால், behaviour ஆல் இருக்க வேண்டும். குண்டூசி வைத்து உன்னருகில் வருபவனை குத்துகிறாயே … ஏன் என்று இப்போது புரிகிறதா ? அவனை கற்பனையில் இருந்து நிஜ உலகிற்கு கொண்டு வர நீ எடுக்கும் முயற்சி அது. உன் கோபமும் அதில் சேர, சேர்ந்தால், அவனுக்கு வேறு வழியே இல்லை. நிஜ உலகிற்கு வந்து விடுவான். Illusion என்று அவன் தப்பிக்க கூடாது. அவன் illusion க்கு நீ ஊறுகாய் அல்ல !
அவனை எப்படி கண்டுபிடிப்பது ? நீ கண்டெல்லாம் பிடிக்க வேண்டாம். உன் உள்ளுணர்வு பலமானது. இயற்கை இதை எல்லாம் முன்னமே யோசித்திருக்கும் போல. ஆகையால் உனக்கு உள்ளுணர்வை அவனை விட அதிகமாக வழங்கி இருக்கிறது. அவனின் கண்களை கவனி. அது நேராக பார்த்து பேசுவது ‘போல‘ முயற்சிக்கும். நீ பார்க்காத போது அவன் கண்களில் ஒரு relaxation தெரியும். எப்போதும் alert ல் இருக்கும் இடத்தில், யாரும் இல்லை எனில் ஒரு ‘ஹப்பா‘ வருகிறதே … அது மாதிரி அவன் behavior ல் ஒரு minute மாற்றம் வரும். உனக்கும் அவனுக்குமான இடைவெளியை ஒன்று அதிகப்படுத்துவான் – நல்ல பெயர் எடுக்க – அல்லது குறைப்பான் – அவன் வைத்த பொறியில் ஏதோ கிடைக்கப்போகும் தையிரியத்தில். ஒரு மெல்லிய எண்ணக்கீற்றில், கீரலில், வார்த்தை சிதரலில், பார்வை தவறலில் நீ அவனை கண்டுபிடிக்க முடியும். கண்டுபிடித்தால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அறை. ஒருவேளை நல்லவனாக இருந்து நீ அறைந்துவிட்டால், அவன் பெயர் கெட்டு விட்டால் …? ( இந்த if தான் அவனுக்கு தப்பித்தலுக்கு வழி ) … கெட்டு விட்டால் பிறகு பார்த்துக்கொள்ளலாம். தவறு உன்மேல் என்றால் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம். ஆனால் அவனுக்கு அந்த பயம் வேண்டும். தவறாக இருந்தால் அறை விழும் என்று அல்ல. சரியாக இருந்தாலும் கூட அறை விழும் என்கிற பயம். அப்போதுதான் அவன் விளங்குவான். விலகுவான். பார்வை கண்ணியம் வரும். வரும்வரை அறை. அவன் வாங்கும் முதல் அறை அவனின் எண்ண மாற்றம். யார் அந்த முதல் அறையை கொடுக்கிறார்களோ அங்கேயே அவன் திருந்துவான். அப்பா அறைய வேண்டும் அவனை. அதற்கு அப்பா சரியாக வாழவேண்டும். அப்பா சரியில்லாமல் அவனை சரிப்படுத்த முயற்சிப்பது ஒழுங்கு அல்ல. எண்ண வன்முறை. அது அந்த குடும்பத்தை எங்கு வேண்டுமானாலும் இழுத்து செல்லும். அப்பா சரியானால் போதும். அவன் சரியாகி விடுவான். நல்ல அப்பாக்கள் இருக்கிறார்களே என்று தானே தோன்றுகிறது உனக்கு. கிடையாது. அவன் சரியாகும் வரை அவர் நல்ல அப்பா கிடையாது. ஒன்றை பெற்று சமுதாயத்தில் விட்டுவிட்டு, அது செய்யும் தவறுகளுக்கு அதுவே பொறுப்பு என்று சொல்வது … விலங்குகளுக்கு சரி. அப்பாக்களுக்கு ? பெற்றவன் கொடுக்காத அறையை தான் நீ அறைகிறாய். நீ அறைவது அப்பாவுக்கும் சேர்த்தே. அந்த அறையில் இருக்கிறது அடுத்த தலைமுறையில் ஒரு சுதந்திரக் கோட்டினை ஏற்படுத்துவது !