அவனும் அவளும் : 013
சரி. அவனுக்கும் அவளுக்கும் சரி வரவில்லை. என்ன செய்யலாம் ? முதலில் அவன் செய்வது என்ன என்று கவனிப்போம்.
அவளை எதிரியாக பார்க்க ஆரம்பிப்பான். 10 /15 / 20 வருடங்கள் உடன் இருந்தவள் என்பது எல்லாம் திடீர் என்று மரத்து, மறந்து போகும் அந்த அவனுக்கு. அவளை வீட்டிற்குள் முடக்கும் அத்தனை செயல்களையும் செய்ய ஆரம்பிப்பான். சொந்த பந்தங்களிடம் பெயரை கெடுக்க முயற்சிப்பான். அவளுக்கு financial ஆக கைக்கு எதுவும் போகக்கூடாது என்று எல்லா வரவுகளையும் வேரில் இருந்து அறுப்பான். ஆடு புலி ஆட்டத்தை தொடங்குவான். அதில் புலி எப்போதும் அவனே !!
இதெல்லாவற்றையும் வீட்டில் உள்ளவர்கள் முன் செய்ய மாட்டான். வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு அவன் எப்போதும் நல்ல பிள்ளை. அவர்களின் முன் அவனின் பேச்சும் செயலும் அவ்வளவு அழகாக மெச்சும்படி இருக்கும். நடிகர்கள் எல்லாம் தோற்றுப்போவார்கள் அவனின் நடிப்பிற்கு முன். ” எனக்கு பொதுவா நடிச்சா பிடிக்காதுங்க ” என்று சிரித்து சொல்லும் அவனின் நடிப்புக்கு குடும்ப oscar உறுதி. எல்லாவற்றையும் அவள் பார்த்து சிரித்து கொண்டிருப்பாள்.
அவளை அவளின் mind இலேயே arrest செய்ய அவன் தேர்ந்தெடுக்கும் முதல் வார்த்தை ” தே **யா “. 20 வருஷம் வாழ்ந்தவனுக்கு அப்போதுதான் அவள் ” தே ***யா ” என்று தெரியுமாம். பலருடன் படுத்திருந்தாள் என்பதை 5 / 10 / 20 வருடங்கள் கழித்து தெரிந்துகொள்ளும் அவன் புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது ? இவ்வளவும் சொல்லிவிட்டு அவள் கையால் சாப்பிட வீட்டிற்கு வரும் அவனுக்கு அநேகமாக சிலை ஒன்று வைக்கலாம். அது கூட பரவாயில்லை. இவ்வளவுக்கும் பிறகு இளித்துக்கொண்டே இரவில் அவளுக்கு பக்கத்தில் வந்து படுக்கும் அவனுக்குள் .. “நானும் இன்னொரு customer” என்ற குரல் கேட்குமோ கேட்காதோ ? அப்படிக் கேட்டும் வழிந்துகொண்டு சிரிக்கும் அவனை என்னவென்று பெயரிடலாம் ? அவள் மேல் தவறில்லாத போது, அடுத்த முறை ” தே ” வார்த்தையை பயன்படுத்தும் அவனிடம் என்ன சொல்லலாம் ?
பொருளாதார தடை தான் அவன் ஏற்படுத்தும் மிகப்பெரும் பாதிப்பு. பைசா கொடுக்காமல் அவளை வைத்திருந்தால் தன் ” வழிக்கு ” வருவாள் என்று அவன் போடும் திட்டம் அரதப்பழசு. 80 களில் வேண்டுமானால் இது சரியாக வரும். இப்போது தன் திறமை மேல் நம்பிக்கை வைக்கும் பெண்கள் ” bye ” சொல்லிவிட்டு வெளியே செல்வது சில நொடிகளில் நடந்துவிடும். யாரை நம்பியும் யாரும் இல்லை என்பது சில மாதங்களில் அவனுக்கு புரிந்துவிடும். அதற்கு பின் அவன் அடிக்கும் U turn .. அவனின் நடிப்புகளில் மிகச் சிறந்தது !! ” நீ நல்லா வரணும். குடும்பம் நல்லா இருக்கணும் ” என்று .. அப்பப்ப்பா.
அவளை அடித்தல் – அவனின் அடுத்த ஆயுதம். கன்னத்தில் அறைவான். தலை முடியை பிடித்து இழுப்பான். சத்தமாக பேசுவான். பக்கத்து வீட்டுக்கு அவள் சரியில்லை என்று தெரியவேண்டும். அடிப்பவன் சரியானவன் என்று நம்புவதை இந்த உலகம் எப்போது நிறுத்தப்போகிறது ? அடித்து விட்டு தன்னை அடிக்க வந்ததாக பொய் சொல்வான். ” ஆம்பளையை ” எப்படி அடிக்கலாம் ? என்று வீரம் பேசுவான்.
தெரியாமல் தான் கேட்கிறேன் .. ” உனக்கும் எனக்கும் சரிவரவில்லை. நாம் கொஞ்ச நாள் பிரிந்து வாழ்வோம். தேவை எனில் மீண்டும் இணைவோம். ” என்று ஏன் அவன் 6th sense சொல்ல மறுக்கிறது?. அதை விட்டுவிட்டு ஏன் 5 senses வன்முறையில் இறங்குகிறான் ? மிக எளிமையான பதில் ஒன்று இருக்கிறது. ” அவள் மீண்டும் வராமல் போய்விட்டால் என்ன செய்வது ? ” என்கிற நம்பிக்கை இன்மை / பயம் தான் அவன் பிரச்சினை. அவள் தனியாக வாழ்ந்து பழக்கப்பட்டால் இவனை நோக்கி வரவே மாட்டாள் என்கிற பயம் அவனுக்கு. பயத்தை மறைக்க அவன் கையில் எடுக்கும் ஆயுதமே … நடிப்பு, verbal abuse, பொருளாதார தடை, physical abuse .. !!
அவனிடம் பணம் இருக்கிறது. சொத்து இருக்கிறது. தொழில் இருக்கிறது. அவளிடம் ‘அவள்‘ மட்டுமே இருக்கிறாள். ஆனால் அவளையும், அவளிடத்தில் இருந்து பிடுங்கி விட்டு .. அவளை போருக்கு அழைக்கும் அவன் வீரத்தை என்னவென்று சொல்வது ? இதில் அவளுக்கு ‘தே ***யா‘ பட்டமும் கொடுத்து விட்டு equal சண்டைக்கு அழைக்கும் அந்த dash க்கு ஆண் என்கிற கவுரவ பெயர் வேறு !! வெட்கமில்லாது திரியும் ஒருவன் உண்டெனில் அது அந்த … dash அவனே !!
“என் கணவர் இப்படி இல்லை” என்று சொல்லும் பெண்களுக்கு வாழ்த்துக்கள். என் மகன் இப்படி இல்லவே இல்லை என்று சொல்லும் அம்மாக்களுக்கு வாழ்த்துக்கள். என் மாப்பிள்ளை இப்படி எல்லாம் இல்லை என்று சொல்லும் மாமியார்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களின் கருத்துப்படி 98 % ஆண்கள் நல்லவர்கள். 2 % மட்டுமே இப்படி. அந்த 2 % பற்றி தான் இங்கு எழுதுகிறேன் என்று இருக்கட்டுமே ! Court இல் வந்து அடித்துக்கொள்பவர்கள் அந்த 2 % மட்டுமே. இல்லையா மக்களே ? ஏன் பெண்கள் பக்கம் தவறே இல்லையா ? என்று புத்திசாலித்தனமாக கேட்ப்பவர்களுக்கு .. முதலில் ‘ அவனை ‘ பார்ப்போம். பின்பு அவளிடம் வருவோம்.
மீண்டும் சந்திப்போம்.