நான் எனப்படும் நான் : 011
ஆம். மீண்டும் மீண்டும் இந்த கேள்வி inbox ல் வருவதால்…
கொஞ்சம் என்னைப்பற்றி:
NLP TRainer. கார்ப்பரேட் உலகின், தொழிற்சாலைகளின், குடும்பங்களின், தனி மனித உலகின் .. பயிற்சிகளில் என் பெயர் ஆங்காங்கே ஒலிக்கக்கூடும். இருபது வருடங்கள் இந்தியா முழுக்க பயணம். ” ஓடும் நதியும், நிற்கும் குளமும் கொண்டிருப்பது வேறு வேறு நீர் ” என்று எங்கோ படித்ததை பகிர்கிறேன். பிரயாணங்களின் காதலன் என்று ஒரு article வந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. Radio Mirchi யில் ஒரு interview Ahmedabad ல் நடந்தது நினைவிருக்கிறது. பெரும் நிறுவனங்களுக்கு என் பயிற்சி வகுப்புகளும், அதன் result ஐயும் வரலாறு சொல்லும். அல்லது வழக்கம்போல் மறைக்கப்படும். மறக்கப்படும்.
புகைப்படங்கள் என் உயிர். ( என் படங்களை தவிர எந்த ஒரு படத்தையும் நான் என் எழுத்திற்காக உபயோகப்படுத்துவது இல்லை. அப்படி இருந்தால் அவர் அவள் பெயர் அனுமதியுடன் எழுதுவது என் பழக்கம். இந்த புகைப்படம் ஒரு பெண் நட்பால் எடுக்கப்பட்டது. ). வாசிப்பு என் பலம். என்னுடன் இருப்பவர்களுக்கு என் வாசிப்பின் பலம் புரியும். எழுத்து உலகில் ஒரு entry நான். சிறு புள்ளி. யதார்த்தம் எழுத விரும்புவதால் சிறு புள்ளி சில நேரங்களில் உளியின் வலியை கொடுக்கும். Soul of a Wanderer – என் முதல் ஆங்கில புத்தகம். AMazon ல் கிடைக்கும். தமிழில் என் முதல் புத்தகம் இந்த பிறந்த நாளில் அநேகமாக வெளிவரும். நமது நம்பிக்கையில் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களாக எழுதுகிறேன்.
தரையில் நடப்பது என் பலம். யதார்த்த உலகில் பயணிப்பதால் முகமூடிகளை வீசி எறிந்து விட்டு, நீ நான் நாம் .. என்ற பார்வையில் பயணிப்பவன். என்னுடன் பேச ‘Appointment Formalities ‘ எல்லாம் வைத்துக்கொள்வதில்லை. ( அப்படி வைக்க சொல்லி சொன்னவர்கள் என் நட்பு வட்டத்தில் இல்லை ). ஒருவரை அறிமுகப்படுத்தும்போது .. அவருக்கு வீடு இருக்கிறது, car இருக்கிறது, land இருக்கிறது என்றெலாம் அறிமுகப்படுத்துவது இல்லை. அவரின் அவளின் அவர்களின் பண்புகளை வைத்து அறிமுகப்படுத்தும் பழக்கம் என்னிடம் உண்டு.
உதவுதல் என் இயல்பு. பாத்திரம் அறிந்து பிச்சை இடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. திறமை அறிந்து உதவி செய் – என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. நான் செய்யும் உதவிகளை வெளிசொல்ல விரும்பவில்லை.
உடல் சார் உறவுகள் எனக்கு ஒப்பாதவை. புத்தன் t shirt க்கு மேல் மட்டும் நிற்கிறார் என்று நினைத்தால் தவறு உங்களுடையது. ” ‘Jeans TShirt – நடைமுறை குடும்ப வாழ்க்கை ” என்று பயணிக்கும் monk என்று ஒருவர் கொடுத்த feedback இன்னும் நெஞ்சில் இருக்கிறது. யதார்த்த உலகில் monk வாழ்க்கை possible இல்லையோ என்று கேட்பவர்கள், அநேகமாக என்னுடன் பேச முயற்சிக்கலாம். ஆகையால்… உடல் கடந்த உறவுகளை மிகவும் நேசிக்கிறேன். மதிக்கிறேன். ஜீரணிக்கிறேன். Conscience என்ற ஒன்றில் என்னை ‘வலை’க்கும் பயணியாக பார்ப்பதே என் தரப்பு பார்வை. உடல் கடந்த உறவுகள் என்ற ஒரு உலகத்தை கவனிக்காதவர்களுக்கு நான் பேசும் மொழி புரியாது திணறக்கூடும். அவர்களை நானும் ” ஐயோ பாவமாக ” பார்க்கக்கூடும்.
நேரிடையாக பேசுதல் என் அடையாளம். புறம் பேசுதல் என் பகுதி அன்று. என்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு மனம் சார் பதில்களை அளிக்கிறேன். வாழ்கிறேன். எதையும் கொண்டு போவதில்லை என்பதில் தெளிவு இருப்பதால், எதையும் carry over செய்வதில்லை – அழகான நினைவுகளை தவிர. இதுவரை நல்ல மனிதர்களை சம்பாதித்து இருக்கிறேன் என்பதை தவிர பெரிய சம்பாத்தியம் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. FB யில் நல் நட்புகள் என் வரம்.
திறமை உண்டெனில், வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது என் இயல்பு. அதற்கான முழு முயற்சி மனம் சாட்சியாக நான் செய்வதுண்டு. என்னை படித்தவர்களும் உண்டு. பயன்படுத்தியவர்களும் உண்டு. சிரித்து கடக்கிறேன். பயன்படுத்தியவர்கள் மீண்டும் வந்து மன்னிப்பு கேட்கும்போதும் சிரித்து கடக்கிறேன். உள்ளதை பேசுதல் என்று ஒன்று என்னுள் இருப்பதால், என் கோபத்திற்கு அர்த்தம் உண்டு. ஒரு நல்ல பயிற்சியாளன் முதலில் வில்லனாக பார்க்கப்படுவான் – என்பது இதுவரை நான் படித்த யதார்த்தம். கடைசியில் அவனுக்கு குரு, ஒளி, வெளி… என்றெல்லாம் பெயரிடப்படுவதையும் கவனிக்கிறேன். இது எதிலும் என்னை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. என்னை கொண்டு செல்லவும் முடியாது. அது என் பலம்.
இமயமலையும் நானும் வேறு வேறு அல்ல என்பது எனக்கான இமய புரிதல். வருடம் ஒருமுறை நிச்சயம். வாய்ப்பு இருப்பின் இரு முறை. அங்கே இந்த Jayasekaran ‘Zen’ ஐ அநேகமாக நீங்கள் பார்க்க கூடும்.
ஒருமுறை ஒரு 70 வயது பெரியவர் உஜ்ஜயினி யில் எனக்கொரு feedback கொடுத்தார். அதை உங்களிடம் பகிர விரும்புகிறேன். ” If someone tries to define you, tries to bring you inside his/her umbrella, they may miss you. If someone tries to Understand you, that one will travel with you forever – from inside out”.
இதுவே Who is Jay ? கான பதில்.
இவ்வளவையும் கடந்து நீங்கள் என்னை வழக்கமான fb whatsapp mask பொருத்திய நட்பாக பார்க்க முயற்சித்தால் .. என்னிடமிருந்து வரும் பதிலை இப்போதே இங்கே சமர்ப்பிக்கிறேன்.
‘ Thank you for being a Co-Traveler for a while. You have lost a Good Friend – Yes – Permanently ‘





