நம்பிக்கை மனிதர்கள் -001
அந்த மனிதரின் உடல் மட்டும் ஒரு இருக்கைக்குள் முடக்கப்பட்டிருக்கிறது. மனம் அல்ல. அந்த மனிதர் பொறுப்பேற்த்து நடத்தும் அமர் சேவா சங்கம் அமர்வதில்லை. நகர்ந்து கொண்டே இருக்கிறது. பல Physically Challenged மனித மனங்களுடன்.
SHankara அமர் சேவா சங்கம்… பற்றி சொல்லும்போது, மனதிற்குள் பார்க்க வேண்டும் என்று இருந்தது. பார்த்தவுடன் இதைப்பற்றி உலகிற்கு சொல்ல வேண்டும் என்று இருந்தது. முதலிலேயே இது உலகிற்கு தெரிந்திருந்தாலும், என் பார்வையும் இருக்கட்டும் என்று இங்கு இப்போது பார்வையை பதிகிறேன்.
ஒரு Naval Recruitment Exercise முகாம். அதில் ஒருவர் கயிறு பிடித்து உயரம் ஏறுதல் செய்கிறார். தவறி விழுகிறார். C3 C4 மற்றும் முதுகெலும்பில் ஏகப்பட்ட முறிவு. உணர்வு மரத்துப் போக.. மனிதர் இருக்கையில் செயல் இழக்கிறார். ஆனால் மனதில் செயல் படுத்திறார். அவரை சிறப்பாக கவனித்துக்கொண்ட Captain Amarjeeth Singh .. அவரின் நினைவாக, அமர் சேவா சங்கம் ஆரம்பிக்கிறார். நான் பேசுவது ராமகிருஷ்ணன் பற்றி. ( Zenlpian Masters உடன் நடுவில் பச்சை துண்டுடன் அமர்ந்திருப்பவர் )
இதற்கிடையில் Chartered Accountant ஷங்கர் ராமன் அவர்களுக்கு சென்னையில் Muscular Distrophy என்று ஒரு நோய் வருகிறது. அமர் சேவா சங்கம் வருகிறார். அங்கு கொடுக்கப்படும் உதவிகளை கவனிக்கும்போது, அமர் சேவா சங்கம் என்பது Valley for Disabled என்ற சிந்தனை வருகிறது. அதனுடன் இணைகிறார். ( சக்கர நாற்காலியில் இருப்பவர் )
இருவரும் இன்று இதே மாதிரி பிரச்சினை உடைய பலரின் நடை கனவுகளின் முன் மாதிரிகள். இங்கே உடலும் மனமும் உடைந்து வருபவர்கள், உடல் சரியாகி ஆனால் மனம் முழுமையாக எழும்பி செல்வதை பார்க்கும்போது, தென்காசி கோவில் ஒன்றும் இதைவிட பெரியதாய் தெரியவில்லை. அப்படி அந்த கோவில் இதைவிட பெரிது எனில், அமர் சேவா சங்கம் என்பது இயங்குவதை இந்த உலகில் யாராலும் நிறுத்த இயலாது.
ஒருமுறை ஆயக்குடி செல்லுங்கள். அமர் சேவா சங்கம் சென்று சிறிது நேரம் அமருங்கள். அநேகமாக உங்களின் கால்கள் கைகள் சிறப்பாக இருப்பதை உணர்ந்து முதன்முதலாக அதை கொடுத்த இயற்கைக்கு நீங்கள் நன்றி சொல்லக்கூடும். ஆம். நாமெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அப்படியானால் அவர்கள் ? நமக்கு முன்மாதிரிகள். கால், கை என்று பிரச்சினை இருந்தாலும் சிரித்து வாழும் மனிதர்கள் …
சிரிக்கும் ஷங்கர் ராமனிடம் … லக்ஷனா கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் .. நம் வாழ்க்கைக்கான பாடங்கள்.
” உங்களால் எப்படி சிரிக்க முடிகிறது ? ”
” பதினைந்து வயதில் நான் பிரச்சினைகளை சந்தித்த போது, ஒரு புத்தகத்தில் ஒரு வரி/சில வரிகள் படித்தேன். அதிலுருந்து பிரச்சினை மனநிலையில் இருந்து வெளிவந்துவிட்டேன்.
You have a problem ?
Yes.
You have a Solution for it ?
Yes.
Then .. Why you are Worried ?
———–
You have a problem ?
Yes.
You have a solution for it ?
No.
Then .. Why you are worried ?
என்ன ? உள்ளே ஏதோ செய்கிறதா ?