மனங்களின் மறுபக்கம் – 005
FAKE ID – இந்த முகமூடியில் திரியும் மறுபக்க மனங்களை கொஞ்சம் கவனிப்போம். இவர்களின் நிலை பரிதாபமானது. தான் நினைப்பதை, நினைப்பவரிடம், தன் முகம் கொண்டு, சொல்ல முடியாதவரின் ஒரு நிலை போல பரிதாப நிலை உண்டா இந்த உலகில் ?
” எல்லாத்தையும் மறைச்சியே, அந்த கொண்டைய மறைச்சியா ? ” என்று கேட்கும் அளவிற்கு தான் FAKE ID க்கள் உலவுகின்றன. உளவும் செய்கின்றன. உலா வந்து தன்னை நன்றாகவே ” நான் ஒரு FAKE ID ” என்று காட்டிக்கொள்கின்றன. 1980 இல் ஆரம்பித்த ( அல்லது ஆரம்பித்ததாக காட்டிக்கொள்ளும் ) ஒரு account, சில posts update செய்துவிட்டு, உடனே சமீபத்திய post இல் comment செய்ய காட்டும் அவசரம் போல ஒரு ” கொண்டைய மறைக்க மறந்தியே மக்கா ” pattern உண்டா ?. இவ்வளவும் தாண்டி, negative ஆக யாருக்கு FAKE ID – comment போட்டதோ, அதே மனிதருக்கு அதே FAKE ID, ஒரு friend request அனுப்பிவிட்டு confirm க்கு காத்திருக்கும் நிலை
என்ன ஒரு பாவமான மனநிலை ! ஒரு பக்கம் வருத்தப்பட வைக்க வேண்டும். இன்னொரு பக்கம் நல்ல நட்பாய் நடந்து கொள்ள வேண்டும். இருதலை கொள்ளி வாழ்க்கை !!
FAKE ID மனிதர்களிடம் இருக்கும் ஒரு குரூரம் – மறைவில் இருந்து மனிதனை தாக்க விரும்பும், அப்படி தாக்கும்போது அந்த தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளை தூர நின்று, even அருகிலும் நின்று, ரசிக்கும் குரூரம். இது ஒரு வித மன நோய். இந்த நோய் முதலில் சமூக வலைதளங்களில் ஆரம்பித்து, பின் நட்புக்களின் அறைகளுக்குள் நுழைந்து, பின் குடும்பத்திற்குள்ளேயே புக ஆரம்பிக்கும். இப்போது FAKE ID மனிதர்களின் குரூர எண்ணம் வேவு பார்ப்பதிலும், வேவு மூலம் கிடைக்கும் தகவல்களை பகிர்வதிலும், அதன் பின் .. அது ஏற்படுத்தும் விளைவுகளை எச்சில் ஒழுக, ரத்தம் ஒழுக, எலும்பு துண்டுகளை தேடுவதிலும், ரசிப்பதிலும் வாழ ஆரம்பிக்கும்.
Voyeurism என்று சொல்லப்படும் ஒருவித ” தான் pictureஇல் இல்லாது, ஆனால் picture இல் நடப்பது அத்தனையும் தான் கவனிக்க ” விரும்பும் மனநிலை அது. குளிக்கும் பெண்ணை திரைக்கு பின் இருந்து கவனிக்கும், கவலைப்படும் ஆணை மறைந்து நின்று குரூரமாக பார்க்கும், எண்ணம் பழுக்கடைந்த வியாதி இது. இந்த வியாதிக்கு பசி என்பது மற்றவர் படும் கஷ்டத்தை முகமூடி அணிந்து பார்ப்பது மட்டுமே. அந்த முகமூடியில் இருக்கும் இரு துளைகள் வழி உலகம் பார்க்க விரும்பும் இந்த மனிதர்கள் – தங்களை – தங்களின் குழந்தைகள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று கவனிக்க மறந்துவிடுகிறார்கள். இந்த மனிதர்களுக்கு கீழெ இருக்கும் இரு எழுத்துக்கோர்வைகள் மனதில் இருக்கட்டும்.
” நீலப் புத்தகம் ஒன்றை
முழுவதுமாய் படித்து
யாரும் பார்க்கா…
உயரத்தில் ஒளித்து
வைக்க முயற்சிக்கையில் …
தன்னை விட
உயரமாய் வளர்ந்த
அவன் மகளின் கை
அவனுக்கு உதவி செய்ய முயற்சித்தது ”
” எறும்பை கொன்றுவிட்டு
நிமிர்ந்து பார்த்தேன் …
மகன் நிலைத்த பார்வையோடு பார்த்துக்கொண்டிருந்தான் ”
ஒருமுறை FAKE ID ஒருவர் counselling க்கிற்கு வந்தார். அவரின் பிரச்சினை இதுதான் ..
” முதலில் மகிழ்ச்சியாகவே இருந்தது இன்னொருவரின் முக வருத்தத்தை பார்க்கும்போது. ஆனால் ஒருவரின் வருத்தமான முகம் சலித்ததும், அடுத்த முகத்தை தேடினேன். இப்படியே தொடர்ந்தது என் வருத்தமான முக தேடல். கொஞ்ச காலத்திற்கு பின் வெளி வருத்த முகங்கள் சலித்ததும், வீட்டிற்குள் வருத்த முகங்கள் தேடினேன். முகமூடி அணிந்து அவர்களின் mobile, laptop மற்றும் அறையை கவனிக்க ஆரம்பித்தேன். அங்கே கிடைத்த தகவல்களை வைத்து அவர்களை வருத்தம் கொள்ள வைத்தேன். இப்போது இந்த தேடல் அடுத்த நிலையை அடைகிறது. சொந்த மகன் மகளை வேவு பார்க்க ஆரம்பித்தேன். என் மகன் மகளை பற்றி நானே புறம் பேசும் அளவிற்கு கீழ்த்தரமாக இருக்கிறேன். அவர்கள் வெறுக்கும் அப்பாவாக மாறிப்போயிருக்கிறேன். எனக்கு இதில் இருந்து வெளிவர வேண்டும். முகமூடி இல்லா வாழ்க்கை வேண்டும் ” என்று அழுதார். அவருக்கான சில மாத counselling க்கிற்கு பின் இப்போது அவர் சரியாகி இருக்கிறார்.
( அந்த counselling தேவைப்படும் FAKE ID க்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். ஆம். Original ID யில் -உங்களின் FAKE ID க்களின் details உடன் ! )
அப்புறம் கடைசியாக சில வரிகள் ..
” ஹலோ FAKE ID …
உன் Dash கள் யாரையும் காயப்படுத்தாது. மாறாக ..
நீயே உன்னை ஒரு மனவியாதிக்கு இழுத்து சென்று கொண்டு இருக்கிறாய்.
FAKE ID உன்னை ஒரு கட்டத்தில் மகிழ்வாக இருப்பவர்களை பார்த்தால் வருத்தப்பட வைக்கும். வருத்தப்படுபவர்களை பார்த்தால் மகிழ வைக்கும்.
திருந்த முடிவெடுத்து உன் குடும்பத்தை, உன்னை காப்பாற்றிக்கொள். ”