கவிதையின் கண் – 005
காலைத்தேநீர் அருந்தும் துறவி
பூ மலர்வது போல்
அமைதி !
– ஜப்பானிய ஹைக்கூ
_______________________________________
நீங்கள் கவனித்தது உண்டா ?
காதில் Headphone வைத்தவுடன், மூச்சுக்காற்று அழகாக கேட்க ஆரம்பிக்கும்.
சிறு உடல் அசைவுகளும் அழகாய் உணர முடியும்.
நெட்டி முறிப்பது எல்லாம் backdrop effect music போல கேட்கும்.
கால் நகர்வதின் Rhythm கவனிக்க முடியும்.
திரும்பி பார்க்கும்போது கழுத்தின் திரும்புதலுக்கு ஏற்றவாறு .. ஒரு இயக்க மென் ஒலி உள்ளே கேட்கும்.
குடிக்கும் தேநீரின் ச் சத்தம் ஆரம்ப ச், நடு ச், முடித்தல் ச் வரை கேட்கும். துல்லியமாக.
அங்கிருந்து வயிற்றுக்குள் அது வழிந்து நகர்வது சொர்க்க சத்தம்.
அவ்வளவு ஏன்?
Headphone அசையும் ஒலி .. அவ்வளவு துல்லியமாக கேட்கும் !
ஆம். அமைதி என்ற உலகில் சிறு சத்தங்களின் அழகு ஆச்சரியமானது. சில விடயங்களை பகிர்கிறேன். அநேகமாய் உதவக்கூடும். என்னிடம் நீங்கள் ” தியானம் ” செய்வதுண்டா என்று கேட்பவர்களுக்கும் என் பதில்களில் இதுவும் ஒன்று !
001 :
ஜன்னல் இருக்கும் அறை ஒன்றை select செய்யலாம் . ஜன்னலும் கதவும் மூடப்படலாம். இருள் அறையில், தரையில் மெழுகு ஒன்று ஏற்றப்படலாம். அந்த மெழுகிற்க்கு அருகில் ( மார்பு தரையில் படும்படி ) நெடும் சாண் கிடையாக படுத்துக்கொள்ளாலாம். அது இலகுவான படுக்கும் நிகழ்வாக இருக்கட்டும். கண்கள் மெழுகுவர்த்தியை மிக அருகில் இருந்து பார்ப்பதாக இருக்கட்டும்.
தரைப்பகுதியில் ஒட்டி இருக்கும் மெழுகுவர்த்தியின் முழு நீள உடலை பார்த்தவாறு மேல் நோக்கினால், குறுகியதாய் ஆரம்பிக்கும் தீ, சிறிது விரிந்து, அகன்றதாகி, மீண்டும் குறுகி மேல்நோக்கி எழும். வண்ணம் மாறுவதை கவனிக்க ஆரம்பிக்கலாம். மஞ்சள், ஆரஞ்சு, கொஞ்சம் நீலம், நீலத்திற்கும் மஞ்சளுக்கும் இடையில் மெல்லிய கருப்பு என்று வண்ணங்கள் மலரும். அங்கே கிடைக்கும் ஒரு அமைதியில், அந்த அறைக்குள் கேட்க்கும் சில சத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் காதில் விழ ஆரம்பிக்கும். அந்த சத்தங்கள் கடைசியாய் மூச்சு காற்றில் வந்து முடியும்.
இதையெல்லாம்கொஞ்சம் கவனித்த பின், இப்போது ஜன்னலை திறந்து வைத்து மீண்டும் இலகுவான படுக்கைக்கு வரலாம்.
இப்போது ஜன்னல் திறந்ததன் impact மெழுகுவர்த்தியில் தெரியும். நேராய் நிமிர்ந்து நின்ற நெருப்பு இப்போது இடதும் வலதுமாய் அசையும். கிட்டத்தட்ட காற்றில் கொடிக்கம்பத்தில் அசையும் கொடியின் mini version இது. அப்படி அசையும்போது நெருப்பு எழுப்பும் ஒரு சத்தம் உங்களின் காதில் விழுகிறதா ? ஒரு மென் அலையாய் அது காதில் விழும். அப்படி விழும் எனில் … நீங்கள் பூ மலரும் சத்தம் கேட்க தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம். ஆம். காலைத் தேநீர் அருந்தும் துறவியின் மனநிலையும் அப்படியே ! உள்ளிழுப்பில், படர்தலில், சுவைத்தலில், தொண்டைக்கு கடத்தலில், மிடறு மிடறாய் விழுங்கலில், வயிறு நோக்கிய பயணத்தில் .. அவரால் அந்த அணு அணுவான சத்தத்தை கேட்க கூடும். அது வெறும் தேநீர் அல்ல. ஒரு சூடு இயக்க சுவையின் dissociated மென் தியானம்.
002 :
நீங்கள் விரும்பினால் எழுதுகிறேன்.