மனங்களின் மறுபக்கம் – 003
மற்றவர்களை ஏமாற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும். நம்மை நாம் ஏமாற்றிக்கொள்கிறோமே .. இதை என்றாவது யோசிக்கிறோமா ?
” நான் அப்படி எல்லாம் இல்லவே இல்லை ” என்று வெளியே சொல்லிக்கொண்டு இருக்கும்போதே உள்ளே ஒரு குரல் கேட்குமே .. ” ஏய் .. நீ அப்படித்தான். ஏன் பொய் சொல்கிறாய் ? “. அந்த குரலையும் தாண்டி பேச வேண்டி இருப்பதால் தான் ” சத்தமாக ” – நான் அப்படி எல்லாம் இல்லவே இல்லை – என்று சொல்கிறோமோ ?
Self Deception – நமக்கு மட்டுமே தெரிந்த வியாதி. தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்களை போல நடிப்பவர்களை ? .. இந்த பழமொழி அங்கே தான் வருகிறது. ஏன் நம்மை நாம் ஏமாற்றி கொள்ள முயல்கிறோம் ? சமூக வலைதளங்களில் நாம் ஏன் நம்மை ” நல்லவன்/நல்லவள் ” என்று promote செய்ய முனைகிறோம் ? நம் தவறுகளுடன் ஏன் நம்மை அறிமுகம் செய்து கொள்ள முடிவதில்லை ? ” இப்போதான் கடைசியா ஒரு தப்பு பண்ணினேன் ” என்று ஏன் நம்மை intro செய்துகொள்ளும் தையிரியம் நமக்கு வருவதில்லை ? ஒரே ஒரு காரணம் மட்டுமே. நான் Perfection ஆன மனிதன் என்று காண்பிக்க நினைப்பதே அந்த காரணம்.
Ego Defence Mechanism – இதுதான் நான் என்று நம்மை காட்டிக்கொள்ள வேண்டும் என்பது அழகு. ஆனால் ” இதுதான் நான் என்று அவர்கள் நினைக்க வேண்டும் ” என்று நம்மை காட்ட முயல்கிறோமே அங்கே வருகிறது இந்த defence mechanism. யார் இந்த அவர்கள் ? அவர்கள் ஏன் நம்மை பற்றி ” நல்லபடியாக ” நினைக்க வேண்டும் ? ஒருவேளை அவர்கள் தவறாக நினைத்தால் என்ன நடந்துவிடும் ? ஏன் இந்த அவர்கள் நம்முடன் ” pressure cooker effect ” இலேயே வருகிறார்கள் ? ஏதோ ஒரு கட்டத்தில் நாம் அவர்களுக்கு எதிராகவே கத்த ஆரம்பிப்பது Pressure leaks action தானோ ? நம்மை சுற்றி ஒரு ” அவர்களை ” நாம் உருவாக்க நினைக்கும்போது .. வருகிறது இந்த Ego Defence Mechanism.
நீ யாராக வேண்டுமானாலும் இரு – அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் – ஆம் – இதுதான் நான் – தவறும் சரியும் கலந்த மனிதன் – ஆங்காங்கே வழுக்கி விழுந்து எழுகிறேன் – எப்போதும் நேராக நிற்க முடியாததால் ஆங்காங்கே கொஞ்சம் வளைகிறேன், குழைகிறேன், அமர்கிறேன், சாய்கிறேன், உறங்குகிறேன், பின் .. மீண்டும் நடக்கிறேன்.. அதில் உன் பிரச்சினை என்ன ? என்று உங்களால் கேட்க முடிந்தால் நீங்கள் இந்த preessure குக்கர் effect இல் இருந்து வெளியே வருகிறீர்கள்.
பொய் சொல்லுதல் முதலில் தன் ” image “ஐ காப்பாற்றவே நாம் செய்கிற தவறு – என்கிற புரிதல் வந்துவிட்டால் .. self deception இல் இருந்து வெளிவருவது மிகவும் எளிது. தவறுதல் இயல்பு – என்கிற இன்னொரு புரிதல் வந்துவிட்டால் .. அவர்கள் பற்றி நாம் கவலை கொள்ள போவதில்லை. முகமூடிகள் போல ஒரு கேவல முகம் இந்த உலகில் இல்லை. புறம் பேசுதல் போல கோழைத்தனம் இந்த உலகில் இல்லை. பொய் போல ஒரு போலி முகவரி இல்லை … போன்ற புரிதல்கள் நம் image ஐ இன்னும் செழுமையாக்கும்.
” அக்குள் பகுதியில் அடிக்கடி நம நம என்று சொரிய சொல்கிறது. இதோ இங்கே ” என்று சொல்ல முடிந்தால் …
” அந்த பெண்ணை பார்த்தால் தனியாக பேசவேண்டும் என்று தோன்றுகிறது. நீ கொஞ்சம் வெளியே நில் ” என்று சொல்ல முடிந்தால் ..
” நீ பொய் சொல்கிறாய். ஆனாலும் உன்னை எனக்கு பிடிக்கிறது ” என்று சொல்ல முடிந்தால் ..
” அந்த சொத்து எனக்கு வேண்டும். எனக்கே கொடுங்கள் ” என்று சொல்ல முடிந்தால் ..
” கொஞ்சம் ஏமாற்றினால் இன்னும் 10% அடிக்கலாம். என்ன ஏமாற்றலாமா ? ” என்று கேட்க முடிந்தால் ..
” அவன் எனக்கு வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன் ” என்று சொல்ல முடிந்தால் ..
” துவைத்த துணி இல்லை. ஆகையால் அதே dress ” என்று சிரிக்க முடிந்தால் ..
முகமூடிகள் வானில் பறக்கின்றன என்று அர்த்தம்.
நம்மை நாம் ஏமாற்றாமல் வாழ ஆரம்பிக்கிறோம் என்றும் அர்த்தம் !
என்ன .. யோசனையாக இருக்கிறதா ?