மனங்களின் மறுபக்கம் – 004
ஒரு பிரச்சினை வருகிறது. மனத்திற்குள்ளும் அது வரும். மனதிற்குள் வரும் பிரச்சினை, அது ஏற்படுத்தப்போகும் விளைவுகளை பட்டியல் இடும். பட்டியல் அனைத்தும் negative ஆகவே இருப்பது ஆச்சரியமே. இது ஒரு chain reaction. ஒரு விளைவு இன்னொரு விளைவை நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும்.
முதுகில் வலி. இது ஒரு பிரச்சினை.
” என்னமோ தெரியலை .. வலிக்குது. ” என்று ஆரம்பிக்கும் இந்த பிரச்சினை, மெதுவாக விளைவுகளை நோக்கி இழுக்கும்.
- முதுகு வலி வந்திடுச்சோ ? ( Pain related past experience plays a role here ! )
2. பக்கத்து தெரு இராமன் படுத்த படுக்கையா இருக்காரே – முதுகு வலி வந்த பின் – அப்படி ஆகிவிடுமோ ? ( People related Past experience )
3. செலவு அதிகம் ஆகும் என்பார்களே ? ( Finance related past experience )
4. மனைவியை நம்பி வாழ வேண்டுமோ ? ( Relationship related past reference )
5. மகன் கவனிப்பானா ? ( Relationship related past experience )
6. ஒரு படத்தில் பார்த்தோமே .. வலி வந்து படுத்தவுடன் அவரை எல்லோரும் படுத்தும் பாடு … ( SOCIETY related past reference )
இப்படி விளைவுகள் ஒவ்வொன்றாக உள்ளே மாய கட்டிடத்தை எழுப்பும். இந்த கட்டிடம் பெரிதாக ஆக, இதையும் தூக்கிக்கொண்டு நாம் நடக்க வேண்டி வர, நாம் தூக்க இயலாமல் சிரமப்படுவதை பார்த்து, கட்டிடம் ஒரு நாள் நம்மை அழகாக delete செய்யும். ஆம். Negligible எப்போதுமே to be deleted தானே ?
மனம் தேவையற்ற விடயங்களில், விளைவுகளை கையில் எடுத்து .. பிரம்மாண்டமாய் வளரும். வளர வளர நாம் இயல்பாகவே weakened state ஐ நோக்கி நகர்வோம். இன்னும் நடக்கவே நடக்காத ஒரு விளைவுக்கு, நாம், ஏற்கெனவே react செய்துகொண்டே இருப்போம். Energy என்ற ஒன்றை இழந்துகொண்டே இருப்போம். ஒரு கட்டத்தில் நம்மில் சிலர், நடக்காத ஒரு விளைவுக்கு, இறப்பை சந்தித்து விடை பெறுவதும் கண் முன்னே நடக்கும். மனத்திற்கு நல்லது எது கெட்டது எது என்று தெரியாது. கிடைத்த விடயத்தை அது develop செய்துகொண்டே இருக்கும். Cinema அதற்கு ஒரு சாட்சி. மனதின் development extension தான் cinema. இல்லாத ஒன்றை நடப்பதாக காட்டுவதில் cinema வெற்றி பெறுகிறது. நம் மனமும் நடக்காத ஒன்றை உள்ளே cinema காட்சிகளாக ஓட்டி நம்மை வேறு உலகத்தில் தள்ளுகிறது.
தீர்வுதான் என்ன இதற்கு ?
You are Bigger than whatever you have achieved.
You are Bigger than all your problems.
இந்த வரிகள் நமக்குள் ஏதோ செய்யும்.
ஆம். நாம் இதுவரை சாதித்தவைகளை விட மிகப்பெரியவர்கள்.
ஆம். நாம் இப்போது சந்திக்கும் பிரச்சினையை விட மிகப்பெரியவர்கள்.
நம்மை விட நம் சந்தோஷங்களையும் துக்கங்களையும் பெரிதாக்குவதில் தான் நாம் வீழ்கிறோம். அனைத்தையும் விட நாம் பெரியவர்கள் என்று ஒரு எண்ணம் உள்ளுக்குள் நங்கூரமாய் இருப்பின், அனைத்தையும் எதிர்கொள்ள முடியும். (நாம் சந்திக்கும் சந்தோஷ, துக்கங்களை விட நாம் பெரியவர்கள் என்று தான் சொல்லி இருக்கிறேன். நாம் சந்திப்பவர்களை விட நாம் பெரியவர்கள் என்று சொல்லவில்லை. அப்படி எடுத்தால் தேவை அற்ற ego வளரும் ! )
நஷ்டம் வந்திருக்கிறது. ( நான் இதை எல்லாம் விடப்பெரியவன். இதை எதிர்கொள்ள முடியும் )
மேடையில் பேச வேண்டும். பயமாக இருக்கிறது. ( நான் பயத்தை விட பெரியவள். என்னால் சிறப்பாக பேச முடியும் ! )
என் நிறுவனம் இந்த வருஷம் சிறப்பான சாதனைகளை செய்திருக்கிறது. ( இதெல்லாம் என் முன் ஒன்றுமே இல்லை. இன்னும் செய்ய முடியும் )
என்னை வசவு வார்த்தைகளால் திட்டி விட்டார்கள். ( இதை எல்லாம் விட நான் பெரியவள். இவை என்னை ஒன்னும் செய்ய வாய்ப்பில்லை )
உதாரணங்கள் இன்னும் சொல்லலாம்.
யோசிப்போம்.
I am bigger than whatever I achieved.
I am bigger than all the failures I faced.
ஆக ..
யோசித்து பயணிப்போம்.