மனங்களின் மறுபக்கம் – 006
நீண்ட நேரம் அடுக்களையில் இருந்து ஒரு கேக் தயாரிக்கிறீர்கள். அக்கம்பக்க நட்புக்கள் வீட்டின் வரவேற்பறையில் பேசி சிரித்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு பெண் உங்களை அடுக்களையில் பார்க்க வருகிறார். ” வெளியே போ . இங்கே உனக்கு என்ன வேலை ? ” என்று சத்தமாக பேசுகிறீர்கள். அவர் அதிர்ந்து வெளியேறுகிறார். கேக் தயாரிக்கப்பட்டு நிற்கிறது. அழகாக அதை square square ஆக வெட்டுகிறீர்கள். எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு செல்கிறீர்கள். அனைவரும் உங்களையும், கேக்கையும் பார்க்கிறார்கள். நீங்கள் தனியாக அமர்கிறீர்கள். ஒவ்வொரு square கேக் காக எடுத்து உண்ண ஆரம்பிக்கிறீர்கள். அங்கே இருப்பவர்கள் அப்படியே அதிர்ந்து அமர்ந்து இருக்கிறார்கள். முழுவதுமாக உண்டு முடிக்கிறீர்கள்.
இப்போது உங்களுக்கு என்ன பெயர் ?
நீண்ட நேரம் அடுக்களையில் இருந்து ஒரு கேக் தயாரிக்கிறீர்கள். அக்கம்பக்க நட்புக்கள் வீட்டின் வரவேற்பறையில் பேசி சிரித்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு பெண் உங்களை அடுக்களையில் பார்க்க வருகிறார். ” வாருங்கள். இதோ இன்னும் சிறிது நேரத்தில் கேக் தயாராகிவிடும். எல்லோரும் சாப்பிடலாம் ” என்று மெதுவாக சிரித்த வண்ணம் பேசுகிறீர்கள். அவர் மகிழ்ந்து அருகில் நிற்கிறார். கேக் தயாரிக்கப்பட்டு நிற்கிறது. அழகாக அதை square square ஆக வெட்டுகிறீர்கள். அவரும் உதவுகிறார். எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு செல்கிறீர்கள். அனைவரும் உங்களையும், கேக்கையும் பார்க்கிறார்கள். நீங்கள் அவர்களுடன் அமர்கிறீர்கள். ஒவ்வொரு square கேக் காக எடுத்து மற்றவர்களுக்கு கொடுக்க ஆரம்பிக்கிறீர்கள். அங்கே இருப்பவர்கள் சுவைத்து, மகிழ்ந்து, பாராட்டி, முழுவதுமாக உண்டு முடிக்கிறார்கள். உங்களுக்கும் சில square கேக் குகளை ஊட்டுகிறார்கள்.
இப்போது உங்களுக்கு என்ன பெயர் ?
முதல் பகுதி படித்ததும் உங்களுக்குள் .. ” நாகரிகம் அற்ற, சுயநலம் மிக்க, மற்றவரை பார்க்க வைத்து உண்ணுகின்ற, மற்றவர் பற்றி கவலைப்படாத, குழந்தைகள் நலம் யோசிக்காத … ” இப்படியெல்லாம் உங்களின் மனதில் ஓடியதா ?. ஓடியிருக்க வேண்டும். நம்மில் பலர் அப்படித்தானே நடந்துகொள்கிறோம். எல்லாம் அழகாக செய்து, பார்க்க வைத்து, கடைசியில் ” நமக்கு மட்டுமே ” என்று மறைத்து வைக்கிறோம். அங்கே நாம் பெறுவது மேற்சொன்ன பெயர்களை மட்டும் அல்ல. நிறைய இழப்பதும் இருக்கிறது. ஆம். அதில் குறிப்பாக ஒன்று … Greatness. மனிதனின் Greatness இரண்டாம் பகுதியில், அதாவது பகிர்தலில் தான் வெளிவருகிறது. அந்த Greatness ஐத் தான் இழந்து நிற்கிறோம்.
நாம் அனைவருமே தனித்தன்மையுடன் படைக்கப்பட்டு இருப்பது, நம்மிடையே இருப்பவற்றை பகிர்ந்து கொள்ளவே. பாதுகாத்து வைத்துக்கொள்ள அல்ல. கொடுப்பதை போல ஒரு ” மனதை இலேசாக்கும் விடயம் ” உலகில் இல்லை. கொடுப்பதை போல ஒரு natural counselling இருக்க முடியாது. கொடுப்பதை போல ஒரு stress buster இருக்க வாய்ப்பில்லை. சமீபத்தில் ஒரு அனாதை ஆசிரமத்தில் குழந்தைகளுடன் சுமார் இரண்டு மணி நேரம் விளையாடி மகிழ்ந்ததில் பெற்ற inner balance வேறு எதிலும் கிடைக்காதது. கொடுத்தது இரண்டு மணி நேரம். பெற்றது வருடக்கணக்கான வாழ்க்கை பாடங்கள்.
உங்களின் Greatness ஐ வெளிக்கொண்டுவர நீங்கள் நினைத்தால், உங்கள் மனதின் இன்னொரு பக்கமான … பகிர்தலை அதிகப்படுத்த வேண்டி இருக்கும். பகிர்தலில் ஒரு தலைவன் உருவாகிறான். பகிர்தலில் உருவாகும் தலைவன் மேலும் பல தலைவன்களை உருவாக்குவான். அங்கே உருவாகும் Greatness யாராலும் அசைக்க முடியாதது. சுயநலத்திற்கு இவ்வுலகில் போட்டி உண்டு. Greatness க்கு போட்டியே இல்லை.
எதை தேர்ந்தெடுக்க போகிறீர்கள் ?
யோசிப்போம்.