தெரிந்ததும் தெரியாததும் 007
மதுரையில் / சேலத்தில் இருந்து வருகிறீர்கள். OMR செல்ல வேண்டும் என்றால் .. பொதுவாக நாம் தேர்ந்தெடுக்கும் பாதை தாம்பரம் – வேளச்சேரி – OMR வழி. ஆனால் இனி .. அப்படி தேவை இல்லை. செங்கல்பட்டில் இருந்து, திருப்போரூர் செல்லும் வழியை தேர்ந்தெடுத்தால் …ஒரு 40 நிமிடங்களில் OMR செல்ல முடியும். ஆம். நம்ப முடியவில்லையா ? இன்னும் சொல்கிறேன். குறிப்பாக traffic என்ற ஒன்று இல்லாமல் !
வழியெங்கும் சாலையின் இருபுறமும் வயல்கள். ஆங்காங்கு ஏரிகள். சென்னைக்கு parallel ஆக பயணிக்கும் சாலை இது. சுத்தமான oxygen விஸ்தாரமான வடிவத்துடன் நாசியை தொட .. கிள்ளிப் பார்க்கிறேன் .. இது சென்னை செல்லும் வழி தானா ?
வயதான ஒருவருடன் தேநீர் அருந்திக்கொண்டே பேசினேன் .. ” ஆமாம். இந்த வழி எங்கும் நீர் ஆதாரம் அருமையாக இருப்பதால், பச்சையாய் எதையும் எங்கும் பார்க்க முடியும். இரவில் பனிப்புகை ( mist ) இருக்கும். ஆள் அரவமற்று இருப்பதால் உங்களுக்கு பயம் வரலாம். ஆனால் பயம் தேவை இல்லை. 5 km க்கு ஒரு கிராமம் இருந்துகொண்டே இருப்பதால் அங்கும் இங்குமாக மக்கள் இருப்பார்கள் ” என்று சிரித்தார். எப்பேர்ப்பட்ட ஒரு சாலையை இவ்வளவு நாட்கள் miss செய்திருக்கிறேன் !
உதாரணத்திற்கு வேளச்சேரியில் இருக்கும் ஒருவர் திருச்சி செல்ல வேண்டும் எனில் … தாம்பரம் வந்து செங்கல்பட்டு அடைவதற்கு பதில்… திருப்போரூர் வழியாக செங்கல்பட்டை அடையலாம். Km கூட குறைய என்பதெல்லாம் அப்புறம் ! இப்படி ஒரு பச்சை சாலையை traffic இல்லாமல் கடக்க எப்படி வேண்டுமானாலும் வரலாம் !
Google map இல் செங்கல்பட்டு நெருங்கியதும், OMR என்று type செய்தால் திருப்போரூர் சாலையை காண்பிக்கும். தாம்பரம் வழியாக சாலையை கிழித்து, clutch gear மாற்றி ட்ராபிக் எதிர்கொண்டு செல்வதற்க்கு பதில் … வழியில் நிறுத்தி, கொஞ்சம் oxygen சுவாசித்து, புகைப்படம் எடுத்து, மலை, ஏரி, வயல், மாடுகள், சிரிக்கும் மனிதர்கள் ரசித்து .. செல்லலாம். OMR இல் இருந்து சென்னைக்குள் நாம் செல்ல வேண்டிய பகுதிக்கும் செல்லலாம்.
புகைப்படம் எடுக்கும்போது அந்த பக்கம் சென்ற சிறுவன் நின்று பார்த்தான்.
” என்னையும் எடுக்கறீங்களா ? ” என்று சிரித்தான்.
சரி என்று தயாரானேன்.
” இல்லை வேண்டாம். அம்மா திட்டுவாங்க ” என்று ஓடினான்.
ஆம். சென்னையின் போலி நாகரிகம் இன்னும் இவர்களை தொடவில்லை. அப்படி ஒரு உலகில் நாமும் போலிகளை தவிர்த்து, மனிதர்களுடன் பேசி … சென்னையை அடையலாம்.
இன்னொன்று .. செங்கல்பட்டில் இருந்து OMR வரை .. நான் ac உபயோக்கிக்கவில்லை. அவ்வளவு இதமான தென்றல் !!
பயணிப்போம். கற்போம். பகிர்வோம்.