நகரும் புல்வெளி : 006
” Hair cut செய்துக்கலாமா ? ”
” அப்பா வரணும் சார். ”
” ஏம்பா .. நீ செய்ய மாட்டியா ? ”
” செய்வேன். நீங்க புது customer. அப்பான்னா சரியா இருக்கும் ” – முகம் முழுக்க உற்சாகம், புன்னகையுடன் ஹரிஹரன். 08 ஆம் வகுப்பு முடித்து 09 ஆம் வகுப்பு செல்லும் இந்த நாட்டின் எதிர்கால மாணவன்.
” அட.. நீயே செய்யப்பா. உன் திறமை மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா ? ”
கேள்வி ஹரிஹரனை positive ஆக பாதித்திருக்க வேண்டும். தீர்க்கமான யோசனையுடன், ஆனாலும் அதே சிரித்த முகத்துடன் .. ” சொல்லுங்க சார் .. பண்ணிடலாம் ”
அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்தேன்.
” நேற்று வந்திருந்தால் AC போட்டிருப்பேன். இன்னைக்கு power cut. அதனால தான் Fan மட்டும் ” என்று சிரித்து விட்டு கேட்டான் ..
” சொல்லுங்க சார்.
சொன்னேன்.
வடிவேலு ஆதித்யா வில் பாத்ரூமில் அடிவாங்கி கொண்டும், ‘ என்ன கைய புடிச்சி இழுத்தியா ‘ ன்னு கேட்டுக்கொண்டிருந்தும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்.
” வடிவேலு தான் சார் பெஸ்ட். அவர் பையன் வந்தாலே அவரை beat செய்ய முடியாது ” ஹரிஹரன் சிரித்து கொண்டே சொன்னார். ( சிறு பையன் தான் .. ஆனால் திறமை என்று வந்தால் ‘ அவர் ‘ தான் என் choice )
Hair cut அழகாய் வந்தது அவருக்கு. Shave இன்னும் அழகாய். ஒவ்வொரு முறையும் பார்த்து, கேட்டு, கவனித்து ..
” நல்லா வரணும்ல சார். நம்பும்போது இன்னும் நல்லா செய்யணும் ”
” உன்னுடைய பாடங்களில் எது ரொம்ப பிடிக்கும் ? ”
கொஞ்சமும் யோசிக்காமல் ஹரிஹரன் சொன்னார் ..
” கணக்கு சார். ”
” அதுல மார்க் எவ்வளவு வரும் ? ”
” சொன்னா நம்புவீர்களா ? ”
“கண்டிப்பா”
” 100 மார்க் எடுக்கறேன் சார் ” என்று சிரித்தவாறே சொன்னார்.
( எனக்கு ராமானுஜன் ஞாபகத்தில் வந்தார். இந்த திறமை நல்லா வரணும் என்று ஆழ் குரல் ஒலித்தது )
” ஏன் ‘ நம்புவீங்களா’ ன்னு கேட்டே ? ”
” இல்லே சார். என்னை பார்த்தா அப்படி தோணாது. இங்கே இருக்கேன்ல ”
” எங்க இருந்தா என்ன ? திறமை திறமை தான் ” நான் சொல்லிவிட்டு கண்களை நேரடியாக கவனித்தேன். அமைதியாக உள்வாங்கி கொண்டு ” நன்றி சார் ” என்றார்.
” head massage ” செய்வியாப்பா ? ‘
‘ செய்வேன் சார் ‘
Head massage சுமார். இன்னும் கற்க வேண்டும்.
எல்லாம் முடித்து கிளம்பும்போது கேட்டேன் ..
‘ ஒரு selfi எடுத்துக்குவோமா ? ‘
எடுக்கொண்டோம்.
” சார். ரொம்ப thanks சார். ஒரு தையிரியம் வந்திருக்கு சார். இனி யாரோட hair cut ஐயும் துணிஞ்சு பண்ண முடியும் சார் ”
நான் சிரித்து வெளியேறினேன்.
என்னை பொறுத்தவரை .. riskகே அல்ல அது. சரியாகவே இல்லை எனினும் ஒரு 20 நாளில் சரியாகிவிடும். ஆனால் ஹரிஹரனுக்கு அது ஒரு முக்கிய நிகழ்வு. நமக்கு சாதாரணமாக படும் நிறைய விடயங்கள் அது சார்ந்த யாரோ ஒருவருக்கு நம்பிக்கை அளிக்கும் திருப்பு முனையாக மாறக்கூடும். வாழ்க்கையின் நிகழ்வுகளில் யாருக்கோ என்ன காரணத்தாலோ திருப்பு முனை என்று ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது. உங்களுக்கு திருப்பு முனை ஏற்படுத்திய அந்த நிகழ்வை, அந்த நிகழ்வு நடக்க காரணமான மனிதரை இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்களா ? அப்படி எனில் .. அவருக்கு உங்களின் நன்றியை மீண்டும் தெரிவிப்பதை உங்களின் ‘எது’ தடுக்கிறது அல்லது தாமதிக்கிறது ? அப்படி இல்லை எனில் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்வதை இப்போதே செய்வோமா ? உங்களின் நன்றி யாரோ ஒரு ஹரிஹரனை அவனின் திறமையை அவனுக்கே அறிமுகப்படுத்தகூடும்.
யோசிப்போம்.