நகரும் புல்வெளி : 012
கடைசியாக எப்போது புது வழிகளில் பயணித்தீர்கள் ? அதே தெரிந்த வழிகளில் எப்படி உங்களால் பயணிக்க முடிகிறது – மீண்டும் மீண்டும் ?
ஒவ்வொரு பயணத்திலும் ஒரு புது வழி ஒன்றை கண்டுபிடித்துக்கொண்டே இருக்க முடியும். ” Even for few kilometers, there waits a New World ” என்று எங்கேயோ படித்த ஞாபகம். Take a De-tour and you find a New Piece of Land என்றும் படித்திருக்கிறேன். இவை இரண்டும் சொல்வது என்ன?. சென்னை மதுரை என்பது மீண்டும் மீண்டும் அதே சாலையில் பயணிப்பது என்பது அல்ல. இடையில் எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஒரு இடத்தில் விலகி, இன்னோரு இடத்தில் சேர முடியும். அந்த dissociated பயணத்தில் ஒரு அழகு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்கு நாம் கொஞ்சம் advance ஆக கிளம்ப வேண்டி இருக்கும்.
இந்த மாதிரியான புது வழி பயணங்களில் நாம் சந்திக்கும் மனிதர்கள், அனுபவங்கள், ஆச்சர்யங்கள் தான் நம் வாழ்வின் ஸ்வாரஸ்யமே. கிளம்பினேன், வந்தேன் என்பதில் ஒரு நிறைவு இருந்தாலும் monotonous என்ற ஒரு boring factor நமக்குள் இருப்பதை மறுக்க இயலாது. பிறந்து, வளர்ந்து, இறக்கும் இந்த பூமியில் .. பார்க்க வேண்டிய இடங்களை, கணங்களை இழந்துவிட்டு … வாழ்ந்து நிறைவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் ?. வீடு அலுவலகம் என்று 365 நாட்களும் வாழ்ந்து சேர்த்தவைகள் ஒரு நாள் நமக்கு இல்லை என்பது உண்மை தானே ? வீடு அலுவலகம் இன்னொரு உலகம் என்று வாழ்ந்து சேர்த்தவைகளும் ஒரு நாள் நமக்கு இல்லை என்பது உண்மையே. ஆனால் நிறைவு என்று ஒன்று இருக்கிறதே ? அந்த நிறைவு monotonous வாழ்வில் வருவதில்லை.
நேற்று De-tour எடுத்த போது சந்தித்த ஒரு மனிதர் சொன்னார் .. ‘ இந்த பக்கம் பொதுவாக யாரும் வருவதில்லை. 100 120 என்று பறக்கும் மனிதர்களுக்கு இவ்வளவு அழகாய் இருக்கும் பகுதியை காண நேரம் ஏது ? ஒரு ஓரமாய் வாகனத்தை நிறுத்திவிட்டு கொஞ்சம் அமர்ந்தால் .. கிடைக்கும் யதார்த்த அமைதியை அவர்கள் எங்கே கண்டுபிடிக்க இப்படி பறக்கிறார்கள் என்று தெரியவில்லை ” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். சரியென்று படுகிறது எனக்கு. கால தாமதம் ஒரு காரணம் என்று சொன்னாலும், ஏறினால் இறங்குவது என்று ஒரு drive என்ன மாதிரியான drive என்று யோசிக்க தோன்றுகிறது. நாம் பிரயாணம் செய்வதில்லை. பிரயாணம் கடக்கிறோமோ என்று ஒரு கேள்வி எழுகிறது ?
அடுத்த பயணத்தில் ஒரு சிறிய de-tour … அதன் அனுபவங்கள்.. அதன் pause effect.. மற்றும் அங்கு சந்தித்த மனிதங்கள் .. என்று ஒரு பகிர்வை அளிக்கும்போது அநேகமாய் மொத்த நட்புக்களும்… ஓடும் ஓட்டத்தை நிறுத்திவிட்டு திரும்பி பார்க்க கூடும். அங்கே இருக்கிறது.. ஒரு தொலையாத, நிதானமான, யதார்த்த வாழ்க்கை !
யோசிப்போம்.