நகரும் புல்வெளி : 021
அந்த சிவப்பு போக்ஸ்வகன் போலோ கார், மெதுவாக வேகம் குறைந்து, இடப்பக்கம் மஞ்சள் indicator காண்பித்து, வெள்ளை கோட்டுக்குள் மென்மையாக நின்றது. ஜன்னல் கண்ணாடி கீழிறங்கி, கதவு திறந்து, black leather shoe அணிந்த ஒரு கால் வெளிவந்து, இன்னொரு காலையும் வெளி இழுத்தது. இறங்கிய பெண் சிரித்தாள். சராசரி உயரம். சிரித்த முகம். Black jeans, Black T Shirt, கழுத்தில் ஒரு வித்தியாசமான chain … அந்த மாலை நேரத்தில், எதிரே கடக்கும் காரின் headlight ஒளியில் மின்னியது.
” நல்ல மழை வரும்போல இருக்கு ”
இறங்கிய blue Jeans Yellow TShirt அணிந்த இன்னொரு பெண் சிரித்துக்கொண்டே சொன்னாள்.
” மின்னும். இடிக்கும். அப்படியே அடங்கிரும். அப்படி ஒன்றும் வராது. ”
” இன்னும் ஐந்து மணி நேரத்தில் போய்விடலாம். ” – Yellow ட் shirt.
” இல்லை. நான்கு மணி நேரம் போதும். Service நல்லா செய்திருக்காங்க. பறந்துடலாம் ” – Black T Shirt.
காரில் இருவரும் சாய்ந்து நின்று பேச, கடந்து செல்லும் கார்களின் வாகன ஓட்டிகளின் பார்வை அவர்கள் மேல் விழுந்து கொண்டே இருந்தது.
” இன்னைக்கு Traffic எதிர்பார்த்தேன். அப்படி ஒன்றும் இல்லை ” Black T Shirt.
“ம்” மஞ்சள் தலையாட்டியது.
வானம் இருட்டியது. ” இதுவே நம் வாழ்க்கை ” என்று சாலை ஓரமாக settle ஆகியிருந்த புழுதியை காற்று அப்படியே இடமாற்றம் செய்தது. ஒரு சிறு ஊதுவத்தி புகை சுருள் போன்ற சூழல், தூசியை அழகாக இடமாற்றம் செய்தது. ஓரிடத்தில் இருந்தது வேறிடத்தில். இதுவே நிரந்தரம் – சட்டென மாறிவிடும் எல்லாம்.
மஞ்சளும் கருப்பும் கண்ணை மூடிக்கொண்டது. சிறு புயல் ஓய்விற்கு வந்தது.
” ஒரு selfi எடுக்கலாம் வா ” மஞ்சள், கருப்பை அழைத்தது.
மேலே, வலது, உயரத்திற்கு, செல்போன் சென்றது. முகம் சிரித்து, உதடு சுழித்து, முறைத்து .. எடுத்துக்கொண்டார்கள். ( எத்தனை முக பாவனைகள் ! Selfie ஒரு கையடக்க Director தான். சட் சட்டென மாறும் முகபாவனைகளின் உரிமையை அது வைத்திருக்கிறது போலும் ! )
“ஒரு காபி சாப்பிட்டு கிளம்புவோம் ” கருப்பு மஞ்சளிடம் சொல்லியது.
இருவரும் coffee shop ப்புக்குள் வந்தனர். சாலையோர shop அது. ஒரு சிறிய மேல் தடுப்பு – நிழலுக்கு. இரண்டு table. எட்டு chair. எல்லாம் சுத்தமாக இருந்தது.
” இரண்டு காபி ” மஞ்சள் சொல்லியது.
” ம். நீண்ட நாள் கனவு. இப்படி ஒரு long drive போகணும்னு. வீட்டிலே விட மாட்டாங்க. நல்ல வேளை .. இந்த கல்யாணம் காரணமாக வந்தது. இல்லேன்னா .. ” கருப்பு சிரித்தது.
” நல்லா drive பண்றே. செம்ம ” இது மஞ்சள்.
” இந்த மாதிரி drive ஒரு விதமான சுதந்திரம்.
கார் ஒரு கதவு மூடிய சின்ன உலகம். நமக்கு பிடிச்ச பாட்டு .. அதில சேருதா .. அது போதும் ”
இருவரும் சிரித்தார்கள்.
” இரண்டு காபி ” கடைக்காரர் சொல்லிவிட்டு வைத்தார்.
கூடவே எனக்கும் ஒரு காபி வைத்தார்.
” ஒருமுறை பெங்களூரில் இருந்து மும்பை drive பண்ணினேன். அதை நீ பண்ணனும் சீக்கிரம். எல்லாம் இப்பவே பண்ணினா தான் உண்டு. Marriage க்கு அப்புறம் இந்த driver seat ம் போயிடும் ” சிரித்தது மஞ்சள்.
கருப்பு அமைதியா இருந்தது.
” காபி நல்லாருக்கில்ல .. ? ” மஞ்சள் கேட்டது.
“ம். Marriage பண்ணிக்கணுமான்னு தோணுது. இவதான் பாவம். மாட்டிக்கிட்டா. எவ்வளவோ resist பண்ணியும் அவளால தடுக்க முடியல ” கருப்பு மேல்கூரையை பார்த்து பேசியது.
அநேகமாக அந்த marriage நோக்கி தான் இருவரும் செல்கிறார்கள் போலும். Coimbatore ஆக இருக்குமோ ?
” அது முடியாது. எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் ஆண் தான் ஜெயிப்பான். Marriage அவனுக்காகவே எழுதப்பட்டது ” மஞ்சள், கருப்பை பார்த்து சொல்லியது. சிரித்தது. பின் ஒரு வாகனம் அற்ற சாலை போன்ற அமைதி.
ஒரு பெருமூச்சு வந்தது இருவரிடமும்.
காபிக்கு பணம் கொடுத்து கிளம்பினார்கள்.
” நீ drive பண்றியா ? ” கருப்பு மஞ்சளிடம் கேட்டது.
” இல்லை. சந்தோஷமா drive பண்றே.. நீயே பண்ணு. நான் regularஆ பண்றதுதான் ”
காரை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
” Marriage அவனுக்காகவே எழுதப்பட்டது ” மீண்டும் மீண்டும் உள்ளே ஒலித்தது.
காபிக்கு பணம் கொடுத்துவிட்டு எழுந்தேன்.
வீட்டிற்கு வந்ததும், தெரிந்த குடும்பத்து நண்பர் வந்தார்.
” மகளுக்கு திருமணம். பத்திரிக்கை வைக்க வந்தேன் ”
அமர்ந்து பேச ஆரம்பித்தோம்.
” நல்ல மாப்பிள்ளை. பாப்பா முடியாதுன்னு சொல்லுச்சு. அதுக்கென்ன தெரியும் ? சின்ன பொண்ணு. கலியாணம் வேணாமாம். சுதந்திரமாக இருக்கணுமாம். முடியாதுன்னுட்டேன். அதெல்லாம் உன் பிள்ளைக்கு நீ பாதுக்கன்னு சொல்லிவிட்டேன். கொஞ்சம் முறுக்குச்சு. அப்புறம் சரின்னுடுச்சு. கலியாணத்துக்கு நீங்க வரணும் ” சிரித்து கொண்டே சொன்னார். பத்திரிக்கை பார்த்தேன். முறுக்கிய பின் சரி என்று ஒப்புக்கொண்ட பெண்ணின் பெயர் ஜோதி என்று எழுதி இருந்தது. ஏனோ தெரியவில்லை, மாப்பிள்ளையின் பெயரை பார்க்க பிடிக்கவில்லை.
வருகிறேன் என்று சொன்னேன்.
அவர் எழுந்து சென்றார். நடையில் திருமண பெருமிதம். அவர் சென்றதும், கதவை சாத்திவிட்டு திரும்ப வந்து அந்த பத்திரிக்கையை கவனித்தேன்.
மனம் இன்னும் அந்த வரியில் சுழன்று கொண்டே இருந்தது.
” Marriage அவனுக்காகவே எழுதப்பட்டது “