தெரிந்ததும் தெரியாததும் 010
தெரிந்ததும் தெரியாததும் 010 :
NH இல் இருந்து ஒரு 12 Km க்குள் இருக்கிறது அழகாய் ஒரு அணை. 1986 இல் கட்டப்பட்டு அந்த பகுதிக்கு நீர்க்கைகளால் உதவிக்கொண்டிருக்கிறது. காவேரி தான் உடல்.
செல்லும் வழியின் இருபுறங்களிலும் மேடு பள்ள காடு அமைப்பு. காட்டின் புறங்களில் சூரியக்கதிர் ஊடுருவ, இலைகள் நகர்ந்து, தரைக்கு செல்ல வழிவிட்டு ஒன்றுமறியா குழந்தை போல .. வானம் பார்த்து ஆடிக்கொண்டிருக்கின்றன. போகும் வழியின் அழகை வேண்டும் என்றே படம் எடுக்காமல் விட்டிருக்கிறேன். செல்பவர்களுக்கு visual விருந்து காத்திருக்கிறது. காடு என்பதால் கொஞ்சம் கவனமும் வேண்டும் !
அணை என்பது ஒரு static river ன் இன்னொரு வடிவம். சட்டென ஓடி மறையும் ஆறாக இல்லாமல் … நின்று, நிலம் நனைத்து, வேர்களுக்கு விருந்தாகி, சுற்றி நிற்கும் மரங்களை வளர வைத்து, பச்சைகளின் உலகத்தை வரவழைத்து .. மீண்டும் பயணம் தொடங்கும் ஆறு .. அணை என்று பெயரிடப்படுவது இங்கே தான்.
குளிக்கும் சிறுவர்களை பார்க்க ஆசையாக இருக்கிறது.
” அண்ணா வாங்கண்ணா .. குதிங்கண்ணா .. ஆழம் இங்க இல்லண்ணா ” என்று கேட்கும் ஆர்வத்தில் குதிக்கவே தோன்றுகிறது. குதித்த பின் .. தெரிகிறது அந்த நீரின் தூய்மை. தலை முடி shampoo இல்லாமல் பஞ்சு பஞ்சாக … இயற்கை எப்போதும் வாரி வழங்குவதாகவே இருக்கிறது என்றே தோன்றுகிறது. இந்த இயற்கையை விட்டுவிட்டு shampoo தேடும் நம்மை, அடுத்த தலைமுறை முடி மன்னிக்காது !
தோணி ஒன்றின் யதார்த்த மனிதர் சிரித்து கொண்டே பேசினார் ..
” மீன் பிடிப்போம். அக்கரையில் கொஞ்சம் அதிகமா இருக்கும். மனிதர்கள் இருக்கும் இடத்தை அது தவிர்க்கும். நம்மன்னா அதுங்களுக்கு பிரச்சினை தான் ! ”
தர்மபுரியில் இருந்து 12 Km சென்றால் வரும் நாகவதி அணை பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். யாரும் அற்ற அணை நோக்கி செல்லும் காட்டு வழி தான் இந்த அணையின் top class. Tar சாலை இடையில் வைத்து காட்டு பார்வை வைக்கும் பகுதிகள் மிகவும் குறைவு. அப்படி ஒரு பகுதி இது.
செல்வோமா ?