நகரும் புல்வெளி : 007
நேற்று xylo வின் பயணத்தில் ஒரு சிறு பிரச்சினை. திடீரென்று வாகனத்தில் ஒரு உதறல். Joint bush மாற்ற வேண்டிய தேவை. ‘ஒரு மணி நேரத்தில் மாற்றி விடலாம் ‘ .. என்று mechanic சொன்ன போதும் மனசு ‘ minimum மூன்று மணி நேரம் ஆகிவிடும் ‘ என்று சொல்லியது. முதலில் நான் check செய்தது அங்கே ஏதாவது power plug இருக்கிறதா என்பதைத்தான்.
” என்ன சார் பார்க்கறீங்க ? ” சிரித்து கொண்டே mechanic கேட்டார்.
“Laptop ல் ஒரு வேலை இருக்கிறது. அதான் .. ”
” sorry சார். இங்கே power point இல்லை. பக்கத்து workshop என் நண்பருடையது. அங்கே இருக்கு. அங்கே நீங்க இருங்க சார் ”
பேசிவிட்டு அங்கே போக சொன்னார்.

ஒரு பழைய இரும்பு நாற்காலி, மேஜை, சிறிய அறை, பழைய டயர்கள் .. என்று சுற்றும் சூழ அந்த அறை என்னை வரவேற்த்தது. வேர்த்ததும்.
இருக்கையில் அமர்ந்த வேகத்தில் சட்டென பின்பக்கமாக அது சரிய, தடுமாறி கீழே விழுந்ததில்.. அங்கே இருந்த இரும்பு plate ஒன்று என்னை பதம் பார்த்ததில்.. முதுகில் ஒரு சிறிய வெட்டு. வலியே வலிக்கிறது என்று சொல்லும் அளவிற்கு வலி. மெதுவாய் மீண்டும் எழுந்து கவனித்த போது இருக்கையின் கால் சரியில்லாது இருந்தது புரிந்தது. ( யாரும் இல்லாத அறை அது. வேறு விதமாய் சொன்னால் பழைய பொருட்கள் வைக்கப்படும் அறை ! ).
என்னை சரிப்படுத்திக்கொண்டு சரியாக உட்கார்ந்தேன். வழக்கமான ஆரம்ப preperations க்கு பின் … படிக்க ஆரம்பித்தேன். ஆம். புத்தகம் படித்தல் என்னுள் வாழும் இன்னொரு மூச்சு. முதுகில் வலி அதிகமாக ஆவதை உணர முடிந்தது.
ஏன் புத்தகம் படிக்க வேண்டும் ? ஏன் புத்தகம் படிக்க நினைத்தும் பலரால் படிக்க முடிவதில்லை ? ஏன் ஒரு சிலர் மட்டும் படிப்பதை சரியாக செய்கிறார்கள் ? ஏன் ஒரு சிலர் படிப்பதே இல்லை ? ..
இரண்டு காரணங்கள் மட்டுமே. 1. எல்லாம் எனக்கு தெரியும். 2. இன்னும் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.
என் தந்தையை கவனித்து இருக்கிறேன். படிப்பதில் முழு கவனம் அவரிடம். Notes எடுப்பதும் கூடவே. ஒரு புத்தகம் உங்களின் வாழ்க்கை பற்றிய Map ஐ மாற்றி விடும். அந்த புத்தகத்தின் ஒரே ஒரு வரி பார்வைகளை வேறு நிலைக்கு கொண்டு செல்லும். நேற்று படித்த ஒரு புத்தகத்தில் ..
” We show our anger at empty boats ” என்று ஒரு வரி படித்தேன். அதாவது கோபப்படும்போது அந்த boat ல் யாரும் இருப்பதில்லை. ( யாரும் இல்லை என்பது நம்மை புரிந்து கொள்ள யாரும் இல்லை என்ற பொருளில் … ). அப்படி ஒரு நிலையில் கோபப்படும்போது .. அது சரியான நபரை சென்று அடைவதில்லை. Empty boat என்பது ஒரு representation. யாருமற்ற boat ஐ நோக்கி எவ்வளவு பேசினாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. கொஞ்சம் யோசிக்க வைத்த வரி அது.
நினைத்ததை விட மேலாக நான்கு மணி நேரம் ஆனது. புத்தகத்தில் 140 பக்கங்கள் முடிந்திருந்தது. Mechanic வந்து சொன்னார். Trial எடுத்தோம். மனதிற்கு இதம். நன்றி சொல்லி, அவருக்கான தொகையை கொடுத்து மீண்டும் பயணம் ஆரம்பித்தது.
ஒரு பிரச்சினை, ஒரு தேடல், ஒரு எதிர்பாரா சிறு காயம், வசதி குறைந்த அறை, வேர்வை, கொஞ்சம் குறைவான வெளிச்சம் … அவ்வளவிற்கும் பிறகும் புத்தகம் படித்தல் தொடர்ந்தது. ஆம். படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் .. ஒரு மரத்தின் வெய்யில் சார்ந்த நிழல் கூட போதும். படிக்க வேண்டாம் என முடிவெடுத்தால் … ஐந்து நட்சத்திர அறையும் உதவப்போவதில்லை.





