நகரும் புல்வெளி : 013
திடீரென்று, தான் ஒட்டி வந்த சைக்கிளை விட்டுவிட்டு.. என்னை நோக்கி ஓடிவந்தான் அவன். தங்கையின் மகன். நிதேஷ். முகம் பதட்டத்தில்.
” என்னடா ? ”
” நாய் மாமா. பயமா இருந்துச்சி. சைக்கிளை விட்டுட்டு ஓடி வந்திட்டேன். ”
அவனை கவனித்தேன். படபடப்பா இருந்தான். நாயை கவனித்தேன். வாலை ஆட்டிக்கொண்டு நின்றது.
” ஏன் சைக்கிளை விட்டுட்டு வந்துட்டே ? நாய் என்ன பண்ணிடும் ? ”
” கடிச்சிடும் மாமா ”
” நிதேஷ். நாயோட வாலை கவனி. அது அழகா ஆடிட்டு இருக்கு. பொதுவா நாய் வாலை ஆட்டிட்டு இருந்தா குழையுதுன்னு சொல்வாங்க. அன்பா இருக்குன்னு அர்த்தம் ”
” பயமா இருக்கு மாமா ”
” எழுந்திரு ” தீர்க்கமான குரலில் சொன்னேன்.
எழுந்தான். ” left right சொல்லு ”
சொன்னான்.
” கையை காலை வீசி நட ”
நடந்தான்.
” இப்போது சைக்கிளை நோக்கி நட ”
” கொஞ்சம் பயமா இருக்கு மாமா ”
” போ பார்த்துக்கலாம் ”
நடந்தான். கிட்டே போயிட்டு திரும்ப ஓடி வந்தான்.
” போ பார்த்துக்கலாம் ”
திரும்ப போனான். இப்ப கைவீசி நடந்தான். Left Right என்ற சத்தத்துடன். நெருங்கிப் போய் சைக்கிளை எடுத்தான். இவன் போன வேகத்திற்கு வாலாட்டிய நாய் அந்த பக்கம் நகர்ந்தது. பின் ஓடியது. சைக்கிளை எடுத்துக்கொண்டு, ஒட்டி, என் அருகே வந்து நிறுத்தி, கிட்டே வந்து கட்டிப்பிடித்து கொண்டான்.
” ஆமா மாமா. நாய் பயந்து நகர்ந்துச்சி. அப்புறம் ஓடிச்சி ”
நான் அமைதியா இருந்தேன்.
பிறகு சொன்னேன் ..
” வாலை ஆட்டிட்டு இருந்தா பயப்பட வேண்டாம். Straight ஆ இருந்தா கோபமா இருக்குன்னு அர்த்தம். அப்ப கிட்ட போக வேண்டாம் ”
” சரி மாமா ” சொல்லிட்டு சைக்கிளை மீண்டும் ஓட்டினான்.
அவனின் முகம் தீர்க்கமான சிரிப்புடன் இருந்தது இப்போது.
ஒரு பயத்தின் pattern அழிக்கப்பட்டு இருக்கிறது. குழந்தைகள் உலகம் இதுபோன்ற pattern களால் ஆனது. அந்த pattern காலம் முழுக்க தொடரும். Change of Behaviors – Change of patterns – Change of results.
யோசிப்போம்.