நகரும் புல்வெளி : 017
நேற்று Practitioner course காக, Live Program, Phoenix Mall ல் நடந்தது. Rathinavelu Muthu subramanian என்கிற Excellence ன் கற்றுக்கொள்ளும் பயணத்தின் இன்னொரு நிலை நேற்று தொடங்கியது. Phoneix Mall ஒரு தனி உலகம். கிட்டத்தட்ட ஒரு குளிரூட்டப்பட்ட, ஒளியூட்டப்பட்ட பெரு மனிதர்கள் வாழும் கிராமம் போல். பதினொன்று மணிக்கு ஆரம்பித்த வகுப்பு, மாலை 08 மணிக்கு முடிவுக்கு வந்தது. Rathinavelu Muthusubramanian ஒரு அருமையான excellence. கவனிக்கும்போது முழுமையாகவும், கற்றலின் போது இயல்பாகவும் இருக்கிறார். Trainer உலகத்தில், அடுத்த திறமை, கற்றலை மய்யம் கொண்டு தன் வரவை பறை சாற்ற காத்திருக்கிறது. வாழ்த்துக்கள் உங்களின் திறமைக்கு .. முத்து சுப்ரமண்யன் !
மதிய உணவிற்கு எங்கே செல்லலாம் என யோசித்த போது, ஒரு சிறு தேடலுக்கு பின், Nando’s போகலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தோம். Nando’s என்ற பெயர் எனக்கு தமிழ் பெயராக தெரிந்தது. சென்றோம். உள்ளே சல்லும்போதே .. ‘ பெரி பெரி சிக்கன் இல்லை ‘ என்று சொல்லவும், புரியாமல் நான் பார்த்தேன். பின் உள்ளே சென்று .. உணவு வகைகளை அறிந்து கொண்டு எங்களுக்கு தேவையானவற்றை order செய்த பின் .. அந்த ‘ பெரி பெரி சிக்கன் ‘ என்பது என்ன என்று கேட்டேன். ‘ பெரி பெரி சிக்கன் ‘ அந்த நிறுவனத்தின் special. அந்த நிறுவனம் தென் ஆப்பிரிக்க நிறுவனத்தின் உணவு நிறுவனம். ‘ பெரி பெரி சிக்கனுக்கு ‘ தேவையான sause தென் ஆப்பிரிக்கா வில் இருந்து வரவில்லையாம். அதனால் தயாரிக்கவில்லையாம். ஆச்சர்யமாக இருந்தது. ஒரு ‘ sause ‘ இல்லை என்பதால் அவர்களின் best product உற்பத்தியை/ விற்பனையை நிறுத்தி வைத்திருப்பது ஆச்சர்யமான ஒன்று. நிறைய பேர் வந்து ‘ பெரி பெரி ‘, கேட்டு திரும்பி சென்றது பார்க்க முடிந்தது. அதேபோல் menu card அட்டையில் வரைந்திருந்த ஓவியங்கள் அந்த நாட்டின் இயற்கை ஆர்வலர் ஒரு போராட்டத்தின் காரணமாக சிறையில் இருந்த போது வரைந்த ஓவியங்கள். மீண்டும் ஆச்சர்யமாக இருந்தது. நாங்கள் சுவைத்த உணவும் சுவையாக இருந்ததால் .. மீண்டும் வர வேண்டும் என முடிவெடுத்து வந்தோம். ‘பெரி பெரி‘ மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
மறுநாள் பழவேற்காடு ஏரியை நோக்கிய பயணம். அதிகாலையில் (04.45) ஆரம்பித்த பயணம், ஏரியை நோக்கி அழகாக நகர்ந்தது. வழியில் ஒரு பனை மரத்தின் மேல் படர்ந்த இன்னொரு மரம், ஒரு பறவைகள் சரணாலயம் – தீவாக ஒரு ஏரி, நீலம் மஞ்சள் கலந்த வண்ண கடல் ..
என்று பயணம் தொடர்ந்தது. கடல் எப்போதுமே அழகு. கடலினை எப்போது பார்த்தாலும், மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவதே அதன் சிறப்பு. ஒரு பாலத்தால் அந்த பக்க தீவும், கடலும் … இணைக்கப்பட்டு இருக்கிறது. பாலத்தில் பயணிக்கையில், நிலமற்ற நீரில் பயணிக்கும் ஒரு இனம் புரியா உணர்வு.
ஒரு பயணம் கொண்டு வரும் யதார்த்த பாடங்கள் அழகானவை. எதிர்பார்க்காமல் நடப்பதில் இருந்து, கற்றதை practice செய்வது ஒரு புது அனுபவம். அப்போது … Nuances of Learning – என்று சொல்லப்படும் நுணுக்கங்கள் அழகாக மனதில் பதியும். புத்தகங்கள் தேவையற்ற மனநிலையில், எதிர்ப்படும் மனிதர்கள் / சூழ்நிலைகள் .. பாடங்களாகி, Live Lessons அகத்தில் இருக்கை போட்டு அமர்ந்து கொள்ளும். Reprogrammed Mind சட்டென எழுந்து, அதன் தேடலை வேகமாக தொடங்கும். நாம் ஒரு witness ஆக இருந்தால் போதுமானது.
ஒரு வித்தியாச பயணம், வித்தியாச வகுப்பு, கற்றுக்கொள்ளும் மனநிலையில் உடன் பயணித்த excellence, யதார்த்த சூழ்நிலை மாற்றங்கள், ஆங்காங்கே கடந்த மனிதர்கள் .. என்று இரண்டு நாட்கள் வேகமாய் கரைந்து போயிருந்தது.
அடுத்த வகுப்பின் பயணத்தில், வரப்போகும் அனுபவங்கள் ஏற்படுத்த போகும் renewal காக, அமைதியாக ஆர்வமாக காத்திருப்பதும் … ரசனையாகத்தான் இருக்கிறது.
எனக்கு பக்கத்தில் இரண்டு நாட்களாய் காத்திருந்த புத்தகம் இப்போது என்னை ஆசையாக பார்ப்பதால் …
சென்று மீண்டும், மீண்டும் வருகிறேன்.