நகரும் புல்வெளி : 034
சிறு பெண். கல்லூரிக்கு செல்ல காத்திருக்கும் பெண். மற்றவர்கள் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்க, இந்த excellence TED x ன் representative ஆகியிருக்கிறது. முதல் முயற்சி. அருமையான பேச்சாளர்கள். அவர்களின் சாதனைகள். அதற்கு பின் இருக்கும் கடுமையான உழைப்புகள். எல்லாவற்றையும் அருகாமையில் இருந்து பேச்சை கேட்டு, கேள்விகள் கேட்டு, அனுபவம் பழகும் வாய்ப்பு. ஒரு சிறப்பான ஞாயிறு.
வயது வென்ற பாட்டி ஒருவர் என் கவனத்தை ஈர்த்தார். கடைசியில் ‘அம்பிகா கண்ணு’ வின் பாட்டி அவர். ” பேத்தி நல்லா பண்றாங்க ” சொன்னவுடன் பாட்டிக்கு மகிழ்ச்சி. கண்கள் முழுக்க. ” முடிஞ்சா exams ஐ cut செய்திடு, TED x நல்லா செய் ‘” என்று உற்சாகப்படுத்தும் அப்பா. என்ன ஒரு குடும்பம் !
அருமையான ஏற்பாடு. இன்னும் சரியாக செய்யலாம் என்று சொன்னாலும், முதல் முயற்சி என்பதால் அத்தனையையும் மறந்து பாராட்ட தோன்றுகிறது. கடைசியாக, தனக்கு உதவி செய்த அத்தனை excellence ஐயும் அழைத்து மேடையில் நன்றி சொன்ன போது கண் கலங்கியது எனக்கு. ” இந்த பெண்ணை சிறு பெண் என்று வியந்தோமே ” என்று தோன்றியது. ” அடுத்த முறை திருத்திக் கொள்கிறேன் ” என்று சொல்லும்போது இன்னும் உயர்கிறாள் அந்த பெண். பெற்றால் இப்படி ஒரு பெண் பெற்கவேண்டும். அல்லது இப்படி ஒரு பெண்ணை உருவாக்க வேண்டும். நிச்சயம் எம் நிகழ்வில் விரைவில் வந்து விடும்.
வாழ்த்துக்கள் பெண்ணே. இன்றைய தினம் நிச்சயமாக உன் தினம்.