நகரும் புல்வெளி : 023
சாலையோர பயணங்களில், ஒரு break தேவைப்படும். Monotonous என்று சொல்லப்படுகிற ஒரு வித இயலில் இருந்து வெளிவரவே அந்த break.
CCD பயணங்களில் ஒரு எழுதப்படா நிறுத்தம் ஆக மாறிக்கொண்டிருக்கிறது. ” காபி அங்கே நல்லா இருக்காதே ? விலையும் அதிகம் ? ” என்று சொல்பவர்களுக்கு .. CCD என்பது என்னை பொறுத்தவரை ஒரு relaxation space. ஒரு Glorified Drawing room. Power point ஆங்காங்கே இருப்பதால், இருபது நிமிடங்களில் mobile ம் recharge ஆகிவிடுகிறது. இலேசாக கண் அயர்ந்து, எழுந்து, முகம் கழுவி, towel ல் துடைத்துக்கொண்டு .. ( முடிந்தால் ஒரு facewash ), குளிரூட்டப்பட்ட இடத்தில், இருக்கையில் அமர்ந்து, ஏற்கெனவே order செய்த காபி யை பருகும்போது .. அந்த சூடு உள்ளே ஏதோ செய்வது உண்மை. ( சக்கரையை காபியில் சேர்த்தே கொடுக்க சொல்வேன். தனியாக கொடுத்து கலப்பதற்குள் ஆறிப்போகும். அதேபோல் .. சூடாக இல்லை எனில் வேண்டாம் என்றும் ஆர்டர் செய்யும்போதே சொல்லிவிடுவேன் )
பொதுவாக பயணங்களில் washroom ஒரு பிரச்சினை. Clean Washrooms கண்டிப்பான தேவை. ( சில CCD க்கள் இதில் மோசம். அங்கே செல்வதை தவிர்க்கலாம். ). அநேக CCD க்கள் clean washrooms உடன் வரவேற்கின்றன. இந்தியா முழுக்க பயணம் செய்யும்போது ஒரே brand மேற்ச்சொன்ன விஷயங்களுடன் பயணிப்பது நல்ல விஷயமும் கூட. சில CCD க்களில் இருக்கும் ஊழியர்களுக்கு நான் ஒரு வாடிக்கையாளராக நன்கு பரிச்சயம். ” எங்கே சார் கிளம்பியாச்சா ? ” என்ற கேள்வியும்.. ” எங்க சார் ரொம்ப நாளாக் காணோமே ? ” என்ற கேள்வியும் என்னிடம் அடிக்கடி வரும் கேள்விகள்.
Coimbatore Race Course CCD யில் தான் .. Soul Of Wanderer ன் சில பகுதிகளை எழுதினேன். அங்கே இருந்த ஊழியர்களின் service அட்டகாசமானது. ஏதோ ஒரு CCD யில் ஒரு இந்தியா பாகிஸ்தான் 20/20 கிரிக்கெட் மேட்ச் பார்த்த ஞாபகம் இருக்கிறது. நிறைய business meets இங்கே நடந்த நினைவுகள் உண்டு. Sessionsம் இங்கேயே சில சமயங்களில் நடத்துகிறேன். ஹூப்லி யில், NH ல் இடது கைப்பக்கம் வரும் CCD அமைதியாக இருக்கும். தர்மபுரி அருகில் வரும் CCD அட்டகாசமாக இருக்கும். Mumbai பகுதிகளில் high class look நிறைந்து இருக்கும். பெங்களூரில் கேட்கவே வேண்டாம். அழகாக, சுத்தமாக இருக்கும். Hyderabadத்தில் இன்னும் அழகு. இதற்கு இணையாக இந்திய அளவில் இன்னொரு brand இல்லை. அந்த business space இன்னும் வெற்றிடமாகவே இருக்கிறது.
ஒரு மழைக்காலத்தில் வெளியே இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது. அந்த தூரல்கள் கண்ணாடிக்கு வெளியே விழுந்து கொண்டிருந்தபோது, CCD Glow Sign Board வித்தியாசமாக அழகாக தெரிந்தது. ஒரு பயணியாக எனக்கு relaxation space கொடுக்கும் CCD க்கு என் நன்றிகள்.
இவ்வளவு வசதிகள் சொன்னாலும், இருந்தாலும், உணர்ந்தாலும் .. சில சாலையோர filter coffee க்கு இணை இன்னும் வரவே இல்லை. வரப்போவதுமில்லை.
பயணிப்போம்.