தெரிந்ததும் தெரியாததும் 013
” மூணு தடவை சொல்லிட்டு வரலை. இந்த முறை கண்டிப்பா வரணும். ” வைபவ் சொன்னது மனதிற்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. செல்ல வேண்டும், சந்திக்க வேண்டும், எங்காவது பயணிக்க வேண்டும் என்கிற நிறைய வேண்டும் கள் .. அப்படியே காற்றில் போய் விடுகின்றன. மீண்டும் அவற்றை அதே காற்று கொண்டு வந்தும் கொடுக்கிறது.
சரி ஒரு drive போகலாம் என்று random ஆக தொடங்கிய போது … சாலையில் ஒரு Railway Crossing. Gate போடப்பட்டதால் காத்திருத்தல் என்று ஒன்று நிகழ்ந்ததை நினைத்து பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இரயில் நம்மை கடக்கும்வரை காத்திருந்த நாம் தான் இப்போது NH இல் பறக்கிறோம் – நிற்க முடியாமல் அல்லது விரும்பாமல். Railway crossing ஐ கடக்க முயன்ற வயதான பெரியவரிடம் ” ஐயா இரயில் வருகிறது ” என்று சொன்னவுடன்.. கை கூப்பி பின்னே வந்தார். வயதான காலங்களில் பல பழைய நினைவுகள் மனதில் வரும்போது எதிரே இரயில் வருவதும் கூட தெரியவில்லை !
காத்திருந்து இரயில் கடப்பதை பார்க்கும் அனுபவம் இன்னுமே சிலிர்ப்பான ஒன்றுதான். பெட்டிகள் வரிசையாக கடக்க, ஜன்னல் வழியாக யாரோ மனிதர்கள் கை காட்டுவதற்கு நாமும் கை காட்டி சிரிப்பது இன்னுமே தொடர்கிறது. அடுத்த தலைமுறைக்கு இந்த அனுபவத்தை கொடுத்தாயிற்றா என்ற கேள்வியும் நம்மிடம் எஞ்சி நிற்கிறது.
அருகில் இருந்த ஒரு ஏரிக்கு பயணித்தோம். சூலூர் ஏரியை நாம் கடந்திருப்போம். ஆனால் .. ஏரி க்கு அருகே இருக்கும் 1.5 Km நீள குறுகிய ஒற்றை சாலையில் நீங்கள் பயணித்தது உண்டா ? அங்கே தான் பயணம் ஆரம்பித்தது. குறுகிய சாலை தான். ஒரு வாகனம் சென்றால் எதிரே இன்னொரு வாகனம் வரமுடியாது என்கிற அளவிற்க்கான பாதை அது ! ஆனால் அழகான பாதை. பெரு மரங்கள் குடையாக, பறவைகள் மாலையாக, நீர்ப்பரப்பு தரையாக .. என்ன ஒரு அழகான பகுதி அது! இடது பக்கம் தென்னை தோப்பு. வலது பக்கம் நீர்ப்பரப்பு. இடையில் ஒற்றை பாதை.
எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் எளிதாக நம்மை கடந்து செல்ல முடியா பாதை தான் அது. ஆனால் அந்த பாதை நமக்குள் கொண்டு வரும் உணர்வு தான் இந்த பயணத்தின் highlight. எப்போதும் யாரும் வரலாம், அப்படி வந்தால் நாம் பின்னோக்கி செல்ல வேண்டும் என்னும் challenge தான் இங்கு thrill லே.
ஏதோ ஒரு பெரும் பறவை, அழகான ” பறத்தல் ” ஒன்றை கண் முன்னே நிகழ்த்துகிறது. அப்படி பறந்த பறவை எதற்காகவும் பயப்படாமல் பறந்தது தான் இந்த ஏரி ஏற்படுத்தும் பாதுகாப்பு உணர்வு.
தீரா உலா jump க்கு வைபவ் வை தயார்படுத்தி, jump ஒன்றை புகைப்படம் எடுத்து பார்த்தால் அழகாக வந்திருந்தது.
ஏரி யை பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து பின் திரும்பி வர ஆரம்பித்த போது … வைபவ் தூங்கிப்போனான். காலை பள்ளிக்கு சென்று, பள்ளி முடிந்து, இந்த சிறு உலாவில் கலந்து கொள்ளவென்று அவன் ” கருப்பு உடை “, ” shoe ” தேர்ந்துடுக்கப்பட்ட பாடல்கள் என்று அவன் தயாராக இருந்தான். மரண mass பாடலும், top tucker பாடலும் அவனின் fav. 6th Gear / 100 க்கு மேல் வேகம் என்று அவன் பேசியது எல்லாம் சிறு சாலைகளில் சென்றவுடன் காணாமல் போனது. சிறு சாலைகளை அடுத்த தலைமுறை பழகினால், வாகனத்தில் வேகம் என்பது காணாமல் போய்விடும் !!