காட்சிக்கவிதைகள் : 002
சில புகைப்படங்களை அதன் Angle அசத்தும். சிவ பார்வதி யின் இந்த புகைப்படத்தை அனைவரும் முன் நின்று எடுத்து கொண்டு இருந்த போது, lighting கிற்கு பின்னே இருக்கும் இருளில் இருந்து எடுத்த போது கிடைத்த படம் இது.
சிவா பார்வதி என்பது ஒரு குறியீடாக இந்தியா முழுக்க இருப்பதால், எந்த குறியீட்டின் எல்லைகள் கூட சிவனையும் பார்வதியையும் மனத்தில் நினைவு வைக்க வைத்து விடும். அப்படியும் யோசிக்கலாம்.
* ஒரே புகைப்படத்தினை வேறு வேறு கோணங்களில் எடுத்து பாருங்கள்
* ஒரே புகைப்படத்தினை வேறு lighting இல் எடுத்து பார்க்கலாம். சூரிய ஒளிக்கு சார், எதிர், பக்கவாட்டு .. என்று மூன்று ஒளி அமைப்பில்.
* சக மனிதப் பார்வை யில் எடுக்கலாம்
* தரையில் படுத்து வான் நோக்கி cover செய்ய முயற்சிக்கலாம்.
* ஒரே ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுக்கலாம். உதாரணமாக ” சூலம் ” மட்டும்.
யோசிக்கலாம்.
கேள்விகள் இருப்பின் கேட்கலாம்.
Technical விஷயங்களுக்குள் அதிகம் செல்ல செல்ல ” நான் அசத்துகிறேன் ” ego மட்டுமே வளரும். ஆக அதில் இருந்து விலகலாம்.
யதார்த்த புகைப்படங்களே அழகு.
கலந்துரையாடுவோம்.
உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.