படம் சொல்லும் பாடம் : 002
எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது. என்ன …ஒரு சிலரால் மட்டுமே அதையும் ” கடந்து ” செல்ல முடிகிறது ! மொத்தமே 10 plus characters. வாழ்க்கையின் பயணத்தில் முன்னும் பின்னுமாக மாறிப்போகும் பார்வைகளே படம்.
காதலிக்கும் வரை மனிதர்கள் தெரிவதில்லை. மனிதர்கள் தெரிய ஆரம்பித்த பின், காதல் இருப்பதில்லை. இது என்னுடைய பார்வை. ஒரு கட்டத்தில் எதையெல்லாம் காதல் விரும்பியதோ, அதையே இன்னொரு கட்டத்தில் வேண்டாம் என்கிறது. ( இதில் ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை ! ). சிரித்து பேசிய அதே அவனின் சிரிப்பு இப்போது எரிச்சலாவதும், குழந்தையை போல கொஞ்சி விளையாடும் அவளை கண்டு இப்போது ஆத்திரப்படுவதும் … வாழக்கையின் பயணங்களில் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அதையும் கடந்து செல்ல யாரோ ஒருவர் அல்ல.. அந்த இருவருமே விட்டு கொடுக்க வேண்டி வருகிறது.
இரண்டு பறவைகள். இரண்டுக்கும் அப்படி ஒரு காதல். ஆனால் ஒன்று கூண்டில் வாழ destined. இன்னொன்று சுதந்திரமாக பறக்க விரும்புவது. காதலிக்கும்போது இரண்டு பறவைகளுக்கும் இது தெரிவதில்லை. காதலித்த பின் தன் இயற்கையான ஆளுமையை இழக்க விரும்பவில்லை. Bye சொல்கின்றன. ஆனால் இரண்டுமே சிறப்பாக வாழ்கின்றன. அங்கே தான் வாழ்க்கையும், காதலும் பரிமளிக்கிறது. படத்தில் சொல்லப்படும் இந்த கதையில் இருக்கும் அர்த்தம் அழகு. ( இரண்டு பறவைகளும் வெவ்வேறு திசையில் பறக்க விரும்பினாலும் இதே கதையே ! ).
நிறைய divorce களுக்கு பின் உயர்ந்த எண்ணங்கள் உண்டு. அனைத்து divorce களும் அடித்துக்கொண்டு, வன்மத்துடன் செய்யப்படுவது, பெறப்படுவது, கொடுக்கப்படுவதில்லை. நிறைய counseling இல் கவனித்திருக்கிறேன், அந்த கோபத்திற்கு பின் இருக்கும் – மெல்லிய காதல் இன்னும் அழகாக வாழும் வாழ்க்கையை. ஆண் சில தருணங்களில் ” சுதந்திரமாக இரு ” என்றும், பெண் சில சமயங்களில் ” உனக்கு இதுவல்ல வாழ்க்கை ” என்றும் divorce செய்வதும் கவிதையே.
வயதான தம்பதியர், just married தம்பதியர், காதலில் பிரிந்து கைக்குழந்தையுடன் இன்னொரு பெண்ணை ஏற்றுகொண்டு வாழும் தம்பதி, ஒரு பிரிவுடன் வாழும் எழுத்தாளர், அதே போன்ற ஒரு பிரிவுடன் வாழும் பாடகர் … இதற்குள் வழியும் கதை. என்ன ஒரு பார்வை இயக்குனருக்கு !
பிரிய வேண்டி முடிவெடுப்பவர்கள் … இந்த படத்தை பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம். ஒன்று தவற்றை உணர்ந்து மீண்டும் சேர்தலும், அல்லது, அழகாகப் புரிவதும் அநேகமாய் சில மணி நேரங்களில் நடக்கக்கூடும்.
” நீ எதை இழந்திருக்கிறாய் என்று உனக்கு புரியாது ”
இந்த மௌன வரி மனதுக்குள் ஒலிக்காத பிரிவுகள் இல்லவே இல்லை. அது உண்மை என்று நிரூபிக்கப்படுவதும்… இதே உலகில் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கிறது.
கடைசியாக ஓர் வரி ..
சிலரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய ஆர்வக் கேள்விகளுக்கு இந்த படம் perfect பதிலாக இருக்கக்கூடும்.
https://www.primevideo.com/detail/0K64TN5KN3T909NOLQ97VTHV3D/ref=atv_dp_share_mv