படம் சொல்லும் பாடம் : 001
” எனது கடவுள் உனது statistics ஐ விட பெரியவர் ” என்று சொல்லும் ஒற்றைத்தாயின் வாழ்க்கை பார்வை தான் படத்தின் பலம்.
Clint Eastwood ன் Million Dollar Baby – படம் பார்த்தவர்களுக்கு தெரியும். Action movie போல தெரியும் இந்தப்படம், மெல்லிய உணர்வை பின்னால் அழகாக தைத்து வெளிவரும். ஒரே ஒரு நொடியில் மாறும் வாழ்க்கையை அழகாக கொண்டு வந்திருப்பார் அந்த படத்தில்.
மூன்று சிறுவர்கள் – பள்ளி நிர்வாகம் அவர்களை ஏதேதோ பெயர் சொல்லி கண்டித்துக்கொண்டே இருக்கிறது. அவர்கள் சரியில்லை என்பதற்கான காரணங்களை மட்டும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறது. பெற்றோர்கள் அவர்களை அணைத்துகொண்டே இருக்கிறார்கள். மூவரின் வாழ்விலும் அவர்கள் விரும்பியதை நோக்கி நகர்கிறார்கள். கிடைத்தது ஆனால் கிடைக்கவில்லை கதை தான். ஆனாலும் நட்பை தொடர்கிறார்கள். ஆங்காங்கே தோல்வி. விரக்தி. ஆனாலும் ஒரு magic நடக்கும் என்று காத்திருக்கிறார்கள்.
ஒரு பயணம் அவர்களின் வாழ்வை மாற்றுகிறது. அந்த பயணத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் அவர்களை தேசிய அளவிற்க்கான hero க்களாக மாற்றுகிறது. அணைத்த அம்மாக்கள் முன் .. ஏதோ ஒன்றை செய்த மனிதர்களாக நிற்கிறார்கள்.
என்னவோ ஒரு நிறைவு படம் பார்க்கும் நமக்கு.
மூன்று சிறுவர்களும், மூன்று இளைஞர்களுமாக படத்தின் சுவாசம் நகர்கிறது. Action படம் போல poster பேசினாலும், அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்யும் படம். அதில் அவர்கள் உயரம் அடையும்போது கவிதை மாதிரி ஏதோ ஒன்று உள்ளே நுழைகிறது.
சில படங்களில் இயக்குனர்கள் படம் மூலம் பேசிவிட்டு சென்று விடுவார்கள். நமக்கு உள்ளே அந்த குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.
Smoothie ஒன்றை வாங்கி செல்லும் வீரனிடம் பேசிவிட்டு, அதற்கு பணம் வேண்டாம் என்று சொல்லும் அவர்களில் ஒருவன் ..
” இப்போ நீ தான் smoothie க்கு பணம் கொடுக்கணும் ” என்ற சக தொழிலாளியின் வார்த்தைக்கு ..
” worth it ” என்று பார்க்கும் பார்வை .. அந்த பார்வை ” பணத்தை விட அவன் கற்றுக் கொடுத்தது நிறைய ” என்று சொல்லும் வார்த்தை நிரம்பி வழியும்.
அதே தான் படத்திற்குமான feedback.
https://www.primevideo.com/detail/0N8YO5CF6V1EXSCHIKLLMVA1RA/ref=atv_dp_share_mv