காட்சிக்கவிதைகள் : 001
முதல் படம் :
கன்னியாகுமரியில் எடுக்கப்பட்ட படம். கடலுக்கு அருகாமையில் இருக்கும் பாறையில் தரையில் படுத்து எடுக்கப்பட்ட புகைப்படம். பொதுவாக தரையில் படுத்து எடுப்பது இன்னொரு வித angle களை நமக்கு கொடுக்கும். சட்டென எழும்பும் அலை நமக்கு வேறுவிதமான அழகான காட்சிகளை கொடுக்கும்.
இரண்டாம் படம் ;
ஜெய்ப்பூருக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்ட புகைப்படம். ஒரு குடும்பத்தை சார்ந்த அல்லது பல குடும்பங்களை சார்ந்த மக்கள் ஒரு வண்டியில் பயணிக்கும் புகைப்படம். வேகத்தில் பறக்கும் குடும்ப வாகனங்களுக்கு மத்தியில் மெதுவான வேகத்தில் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சென்ற அந்த வாகனம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. பரபரப்பான உலகில் சட்டென யதார்த்தமாக தெரியும் காட்சிகள் அழகு. அவற்றை படம் பிடிக்க அந்த அழகை ரசிக்கும் கண் தேவை.
மூன்றாம் படம் ;
குஜராத்தில் சாலையில் எடுக்கப்பட்ட படம். என் புத்தக Soul of a Wanderer ன் முன் அட்டையின் புகைப்படம் இது. பொதுவாக நாம் பயணிக்கும்போது .. சில சாலைகளில் மரங்கள் சாலைகளின் மேல்புறம் தங்களை இணைத்துக்கொண்டு அழகான நிழலை கொடுக்கும். இதன் இடைவெளிகளில் விழும் சூரிய ஒளி / கதிர்கள் … அது ஏற்படுத்தும் நிழல் .. இது ஒரு அழகான ஓவியம்.
புகைப்படம் எடுக்க அழகான இடங்கள் வேண்டும் என்று தேட வேண்டியதில்லை. இருப்பதை அழகாக எடுக்க நினைத்தால் போதும். இன்றும் எனக்கு அருகே இருக்கும் ஒரு ஏரியும், சூரிய உதயமும், சூரிய அஸ்தமனமும் … போதும். அதே சமயம் .. பயணங்களில் கிடைக்கும் திடீர் காட்சிகள் போல ஒரு யதார்த்த அழகு எங்கும் இல்லை.
ஒரு park கிற்குள் உங்களால் அழகான புகைப்படங்களை எடுக்க முடியும். ஒரு சாலையில், ஒரு குழந்தையுடன், ஒரு கோவிலில், ஒரு மொட்டை மாடியில், ஒரு கிராமத்தில், ஒரு கிணற்றில், ஒரு மலையில் …. எங்கும் புகைப்படம் எடுக்க முடியும்.
மழை எப்போதும் புகைப்படத்திற்கு மிக நெருக்கமானது. மழை வந்தால், நனைவது முதல் புகைப்படம் எடுப்பது வரை … நான் வேறு ஒரு மனிதனாக மாறுவது இயல்பாக நடக்கும்.
புகைப்படங்கள் வரலாற்று சாட்சிகள். இன்னும் 20 வருடங்கள் கழித்து இந்த புகைப்படங்கள் … வரலாற்றின் முக்கிய சாட்சிகளாக இருக்க கூடும். ஆக …
புகைப்படங்கள் எடுத்து பழகுங்கள். வெறும் நடை / மெத்தோட்டம் / ஓட்டம் நம்மை இயந்திரத்தனமாக மாற்றும். ஆங்காங்கே கிடைக்கும் காட்சிகளை புகைப்படமாக மாற்றுதல் நமக்கும் பிறர்க்கும் அழகு. நிறைவு. புதிய உலகமும் கூட.
வழக்கமான புகைப்படங்களில் இருந்து கொஞ்சம் விலகியும் எடுக்க முயற்சிப்போம். புகைப்பட வாழ்க்கை மிகவும் அழகானது. நீங்களும் புகைப்படமும் பேசிக்கொள்ளும் அழகான conversation போல ஒன்று இவ்வுலகில் இருக்க வாய்ப்பில்லை. மனதுக்கு நெருக்கமான அந்த பேச்சு வேறு யாரின் காதுக்கும் விழப்போவதில்லை. ஆம். எப்போதும் !