காட்சிக்கவிதைகள் : 004
Upper Bhavani யில் நீரில் அடித்த சூரிய ஒளியின், பிரதிபலிப்பு இது.
பொதுவாக நீரில் சூரிய ஒளி ஏற்படுத்தும் பிரதிபலிப்பு ஓவியங்கள் ஒரு illusion அழகு. பலமுறை வெள்ளிக்கம்பியாக பிரதிபலிக்கும் நீரின் மேல்புற பகுதி என்னை ஈர்த்துக்கொண்டே இருக்கும். நீல வண்ண பிரதிபலிப்பு நீரில் வெண் நட்சத்திர பிரதிபலிப்பில் மின்னுவதை பார்த்துக்கொண்டே இருக்கத்தான் எந்த ஒரு புகைப்பட கலைஞனும் நினைப்பான்.
சுத்தமான நீர் அப்படித்தான். உங்கள் முகத்தை நீங்கள் பார்க்க முடிந்த ஒரே இயற்கை கண்ணாடி அதுவே. அதில் பிரதிபலிக்கும் எதுவும் illusion தான். ஆனாலும் அதன் அழகு போல் ஒன்று இல்லை. ஒரு மலை ஒன்று reverse இல் நீரில் தெரிவதை போல .. ஒரு அழகு உண்டா ?
ஒரே ஒரு துளி நீரில் விழுந்து ஏற்படுத்தும் அலையை slow motion இல் உங்களால் பிடிக்க முடியுமானால் .. அந்த நீரின் அழகு உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். பயணங்களில் நீர் போன்ற ஒரு புகைப்பட தோழன் / தோழி யாருமில்லை.
பயணிப்போம்.