காட்சிக்கவிதைகள் 006
இமயமலை முழுக்க ஆங்காங்கே monasteries நிறைந்து இருக்கின்றன. அவற்றில் monks தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து, தாங்கள் வாழ்ந்த இடம் தெரியாமல் மறைந்து போகின்றனர். நாம் இங்கே ஒரு வீடு கட்டி, அடுத்த தலைமுறைக்கு அதை கொண்டு போய் கொடுப்பதற்குள் … நீரில் நனைந்த பஞ்சு போல பிரிந்து போகிறோம். இரண்டு வாழ்க்கைகளும் பூமியில் தான் இருக்கின்றன !
வழக்கமான பயணங்களை, tourist spot களை நான் தேடி செல்வது இல்லை. அதை போன்ற ஒரு கொடுமை எதுவும் இல்லை. Random Drives எனப்படும் drives மட்டுமே எனக்கு காட்சிகளை அள்ளி வழங்கி இருக்கிறது !
ஒரு முறை நான் சந்தித்த யோகி ஒரு கதை சொன்னார் …
” தண்ணீருக்குள் குதித்த தவளை ஒன்று, சிறிது நேரம்… நீருக்குள் மூழ்கி இருந்தது. பின் நீருக்கு வெளியே வந்து சத்தமின்றி இருந்தது. பின் மெதுவாய் சத்தம் போட்டது. பின் அதிக சத்தம் போட்டது. அப்போது வந்த பாம்பு ஒன்று அந்த தவளையை கொத்தி கொன்று விழுங்கியது ”
சொல்லிவிட்டு சொன்னார்.
” மூழ்குதலோ, வெளிவருதலோ …சத்தமில்லாமல் செய். மௌன நண்பனை அருகில் வைத்துக்கொள். இருக்குமிடம் தெரியாது வாழ்ந்து மடி. சத்தம் போட வேண்டுமா ? வாழ்த்தை போல எதிர்ப்புக்கும் தயாராகிக்கொள் ”
சொல்லிவிட்டு என்னை பார்த்து சிரித்தார்.
பின் சொன்னார் ..
” மேற்சொன்னவைகள் மட்டும் அர்த்தம் இல்லை இந்த கதைக்கு. நீயாக யோசித்துப்பார் ”
இன்னும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கதை இது. இந்தக் கதையை நிறைய யோசித்து இருக்கிறேன். நிறைய பரிமாணங்கள் மனதில். உங்களால் யோசித்து share செய்ய முடிந்தால் செய்யலாம்.
இந்த வருட ஆகஸ்ட் drive க்கு தயாராகலாம். ஒரு 20 நாட்களை இப்போதே prepare செய்து கொள்ளலாம். மாதம் 5000 வீதம் deposit செய்தால் வரும் தொகையை வைத்துக்கொண்டு அழகாக பயணிக்கலாம். இங்கிருந்தே drive செய்வதால் இந்தியாவின் இருதய பகுதிகளையும் காண முடியும். @தீரா உலா வின் இந்த ஏற்பாட்டினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வந்து திரும்ப வரும்வரையிலான risk உங்களுடையதே. என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் !. இது இவரால் தான் நடந்தது, இதனால் தான் நடந்தது என்று சொல்லும் மனிதர் நீங்கள் எனில் இதில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை. உங்களுக்கு எம் முன் வாழ்த்துக்கள். Be a Grown up in facing troubles, if any !
யாருமற்ற விரிந்த நிலத்தில், படுத்துக்கொண்டு, கண்ணுக்கெட்டிய நீள, அகலமெல்லாம் நட்சத்திரங்களை பார்க்க நீங்கள் தயாரா ? .. வாருங்கள் நீங்களும் நானும் வேறு வேறல்ல !