படம் சொல்லும் பாடம் 004
Match Point :
தர்மம் வெல்லும் என்று வாய் கிழிய கத்திக்கொண்டு இருக்கும் நமக்கு அருகிலேயே இன்னொரு குரல் கேட்கும் . .. ” luck குய்யா அவனுக்கு / அவளுக்கு “. நீதி நியாயம் நேர்மை எல்லாம் கடந்து அதிர்ஷ்டம் என்று ஒன்று இருக்கவே செய்கிறது !
யாரோ ஒரு ஆசிரியர் ஏதோ மனநிலையில் திருத்திய வினாத்தாளின் மதிப்பெண்களே நம்முடையவை. ஏதோ ஒரு அறிமுகத்தில் யாரோ செய்த promotion தான் நம் வேலை. யாரோ பாராட்ட இருப்பதாய் நம்பி வெளிவந்த பொக்கிஷம் தான் நம் திறமை. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் பலரின் வாழ்க்கை. இதற்கு முன் தருமம் நியாயம் நேர்மை என்ற பூச்சுகளையும் நாம் பேசுவதுண்டு. ஆனால் நமக்குள் இருக்கும் நமக்கு தெரியும் நாம் எப்படி வந்தோம் என்று ! இந்த படத்தின் கதை முடிச்சு அங்கே விழுகிறது. Match Point இல் இருக்கும் போது net இல் பட்ட பந்து எந்த பக்கம் விழுகிறதோ .. அதன் எதிர்ப்பக்க ஆட்டக்காரர் வெற்றி பெறுவது போல பல நேரங்களில் திறமை இரண்டாம் இடத்தையும் luck முதல் இடத்தையும் பெற்றுக்கொண்டே இருக்கிறது.
Tennis ஆட்டத்தில் சாதிக்க ஒன்றும் பெரியதாக இல்லை என்று உணர்ந்தவுடன், தன் அனுபவ அறிவை கொண்டு பயிற்சியாளராக மாறும் கதாநாயகன் / அவன் வாழ்க்கை தான் இங்கே கதை. Tennis பற்றி எதுவும் சொல்லாமல் அதன் luck theory எடுத்துக்கொண்டு .. வாழ்க்கையை அலசுவதே கதை.
Tennis பயிற்சி பெற்றவரின் தங்கை தன்னை விரும்ப அந்த culture இன் dating முறையில் வாழ்க்கை ஆரம்பமாக, தங்கையின் சிபாரிசில் அப்பா அவரின் தொழிலில் ஓர் வேலை கொடுக்க, அந்த வேலையில் சிறப்பாக செயல்பட, வாழ்க்கை அழகாக settle ஆகிறது.
இதற்கிடையில் பயிற்சி பெற்றவரின் காதலிக்கும், ( நடிகையாக முயற்சி செய்யும் ), Hero வுக்கும் ஓர் பார்வைத்தீ பற்றிக்கொள்ள, அவள் உடைந்த ஓர் கணத்தில் இருவரும் இணைகின்றனர். பயிற்சி பெற்றவரும் அவரின் காதலியும் வேறு காரணங்களுக்காக பிரிய, காதலிக்கும் hero வுக்குமான உறவு குழந்தை வரை செல்ல …. தன் சொந்த மனைவியும் கர்ப்பம் அடைய ஆரம்பமாகிறது பிரச்சினை.
பொதுவாக நம் நீதி நூல்கள் சொல்லிக் கொடுத்தபடி hero மாட்டிக்கொள்ள வேண்டும். காதலியை கொலை செய்யும் வரை செல்லும் அவன் நீதியின் தண்டனையை பெறுகிறானா அல்லது luck அவனை காப்பாற்றுகிறதா என்பதே கதை !
ஒரு சிறு மாற்றம் தான் .. வாழ்க்கையே மாறிப்போய்விட்டது – என்று பலரின் வாழ்க்கையை கவனிக்கிறோமே அதுவே இங்கு கண் எதிரில். தண்டனை பெற வேண்டும் அவன் என்று நாம் நினைக்க luck அவனை என்ன செய்கிறது என்பது நம் கண் எதிரில் நடக்க .. நம்ப முடியாமல் கொஞ்சம் கோபம் வருகிறதே அங்கே இருக்கிறது படத்தின் வெற்றி.
நீதி நேர்மை நியாயம் அனைத்தும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவதில்லை. பல இடங்களில் luck முக்கிய கதாபாத்திரமாக செயல்படுகிறது. அரசியல் வாழ்வில் இதை நாம் நேரடியாகவே உணரலாம். நீலக்காட்சிகள் அங்கும் இங்குமாக இருப்பதால் குழந்தைகள் தவிர்த்து பார்க்கலாம்.
தவறு செய்து குற்ற உணர்வில் தடுமாறும் மனங்களுக்கு ” இப்படியும் ஒன்று உண்டோ ” என்று யோசிக்க வைக்கும் / அதே சமயம் / ஏதோ ஒரு luck நம்மை காப்பற்றிக்கொண்டே இருக்கிறது என்ற ஆழ் மன உணர்வும் ஒலித்துக்கொண்டே இருப்பது தான் இந்த படத்தின் positive பாதிப்பு.