Zenlp Practitioners @ Coimbatore
www.zenlpacademy.com
ஒரு உலகம் இருக்கிறது. நம்முள். எப்போதாவது அங்கே எட்டிப்பார்க்கும் நாம், அங்கே நம் உண்மை முகத்தை பார்த்தவுடன், அங்கே இருக்க பிடிக்காமல் .. உடனே வெளியே வந்துவிடுகிறோம். அந்த உலகத்திற்கு ஓர் சாவி இருக்கிறது. அது நம்முடன் மட்டுமே இருக்கிறது. அந்த சாவியை கையில் எடுக்கும் தைரியத்திற்கு, தேவைப்படுகிறது .. இன்னொரு சாவி !
ஒரு முறை Practitioner Course முடித்த ஒருவர் சொன்னார் ..
” நிறைய சாதித்துவிட்டேன் என்று பெருமையாக, நிறைய திமிராக இருந்தேன். இங்கே வந்தவுடன் .. ‘ இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று தோன்றுகிறது. ” என்று சொல்லிவிட்டு என்னை ஓர் கேள்வி கேட்டார்.
” இருபது வருடங்களாக மனிதர்களை சந்தித்தும் .. இன்று தான் முதன் முதலாக சந்திக்க போகிறேன் – என்று நீங்கள் சொல்வதன் ரகசியம் இதுதானா ? ” என்று கேட்டார்.
ஆம். வெற்றியும் தோல்வியும் 24 மணி நேரத்திற்குள் முடிந்துபோகின்றன. நாம் தான் காலம் முழுக்க தலையில் வைத்து, காலம் முழுக்க அதை கொண்டாடுகிறோம். அதற்கு அதுவே பின் Ego என்று பெரிடுவதையும் உள்ளே வைத்துக்கொண்டு ரசிக்கிறோம் !
அறுவை சிகிச்சையில் வலி இருக்கும். வலியற்ற சிகிச்சை ” மருந்துகளால் “மட்டுமே சாத்தியம். ஆனாலும் மருந்துகளின் காலம் முடிந்ததும் மீண்டும் வலி தெரிய ஆரம்பிக்கும். மன அறுவை சிகிச்சை அப்படி அல்ல. வலி கண்டிப்பாக இருக்கும். ” மாற்ற எண்ணங்கள் ” தான் அவற்றிற்கு மருந்து. அங்கே தான் Zenlp Practitioner Course வருகிறது.
இரண்டு நாட்கள்.
நான்கு முறை.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை.
ஒரு வருட காலம்.
இப்போதிருக்கும் உங்களை மீண்டும் நீங்கள் .. மீண்டும் பார்க்க வாய்ப்பில்லை !
” என்னை குறை கூறிக்கொண்டே, மற்றவர்களை குறை கூறிக்கொண்டே, புலம்பிக்கொண்டே, உலகம் சரியில்லை என்று சொல்லிக்கொண்டே, எனக்கு மட்டும் ஏன் இப்படியோ… என்று சொல்லிக்கொண்டே … இப்படியே இருந்துவிடுகிறேன் என்று நினைக்கும் உங்களுக்கு இங்கே வாய்ப்புகள் இல்லை.
அப்படியான எண்ணங்களை தூக்கி எறிய நான் தயாராகிறேன் – என்று சொல்லும் ஆளுமையா நீங்கள் ?
சந்திப்போம். கோவையில்.