படம் சொல்லும் பாடம் 009
ஒரு church. அதை மூடிவிடலாம் என்று நிர்வாகம் கருதுகிறது. விற்பதற்கு என்று முடிவான பின்பு, சில பர்மா அகதிகள் அங்கே வருகின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டிய நிலை அந்த churchன் Pastor க்கு. ஒரு சிந்தனை வருகிறது. Church சுற்றி இருக்கும் நிலத்தில் உழவிட்டு, சம்பாதித்து, ஏன் church ஐ காப்பாற்ற கூடாது ? பர்மா அகதிகளுக்கும் அது ஒரு சிறப்பான எதிர்காலமாக இருக்ககூடும் என்கிற எண்ணமும். நிர்வாகத்திடம் விவாதமிட்டு அனுமதி பெறுகிறார். விவசாயம் அவ்வளவு எளிதல்ல. இருந்தும் செய்கிறார். ஏகப்பட்ட கடின சூழ்நிலைகள். கடைசியில் என்ன ஆனது என்பதே கதை.
ஒரு உண்மைக்கதை என்று தெரிந்தவுடன் இன்னும் மரியாதை கூடுகிறது அந்த Pastor இன் மேல். அவரின் மனைவி character – யோசிக்க வேண்டிய ஒன்று. கணவன் ஒரு இலக்கை எடுத்தபின், தனக்கு அதில் விருப்பம் இல்லை எனினும், அவனுடன் உறுதியாக பயணிக்கும் அவரின் வார்த்தைகள் படம் முழுக்க அவருக்கு தையிரியம்.
படம் முழுக்க வரும் characters ஒவ்வொருவரும் ஆச்சர்யம். சிறு சிறு வார்த்தைகளால் உடல் மொழியால் அசத்துகிறார்கள். அதிலும் அந்த பர்மிய குழுவுக்கு தலைவர் போன்ற charater. அவரின் பர்மிய சிரிப்பு ஆயிரம் பேசுகிறது.
Pastor ன் மகன் கேட்கும் ஒரு கேள்வி .. ” விவசாயம் செய்ய வைத்த கடவுள் ஏன் வெள்ளத்தை கொண்டு வர வேண்டும் ? ” – மிகவும் யோசிக்க வைக்கும் கேள்வி இது. பல நேரங்களில் நமக்குள் எழும் ” எனக்கு ஏன் இப்படி ” கேள்வியின் மறு வடிவம் தான் இது. அதே போல Pastor சொல்லும் .. ” எனக்குள் கேட்ட குரல் என் குரலா ? அல்லது கடவுளின் குரலா ? ” என்ற கேள்வியும் யோசிக்க வைக்கிறது. படம் முழுக்க இப்படி சிறு சிறு யோசிக்க வைக்கும் கேள்விகள் / வார்த்தைகள். இலக்கை நோக்கி பயணிக்கும் அனைவருக்கும் ஏற்படும் challenging சூழ்நிலைகள் ஆங்காங்கே மனதில். Pastor இன் மனைவி ஓரிடத்தில் தன் கணவனை பார்த்து .. படுக்கை அறையில் “யார் நீ ? எங்கே என் கணவன் ” என்று கேட்கும் கேள்வி இலக்கில் தொலையும் கணவனை தேடும் மனைவியின் குரலாக இருக்கிறது. ஆழமான பார்வைகள் -ஆனால் யதார்த்தமாக ! அதுதான் படத்தின் பலம்.
செய்த விவசாயம் என்னவோ ஆகட்டும்.. ஆனால் ஒரு community கிடைத்திருக்கிறது என்று pastor சொல்லும்போது … community யின் சிறப்பு புரிகிறது. நம்மிடம் இருக்கும் community நம் பலம் . அதுவும் நல்ல நோக்கங்களுக்காக உருவாகும் அனைத்து பிரிவும் கலந்த மனிதர்கள் கொண்ட community – ஒரு வரம். (10K Steps Club, தீரா உலா, Read Dot Review .. என்று communities இருக்கிறது. நீங்கள் உள்ளே வந்தால், உங்களின் திறமையை அடுத்த நிலைக்கு கொண்டு சென்று விடுவார்கள் அங்கே இருக்கும் திறமைகள் ! )
ஒரு feel good படம். இயேசு வை promote செய்கிறதோ என்று யோசிப்பது போல இருந்தாலும், உணர்வுகளை தொடும்போது இது வழக்கமான படம் அல்ல என்று புரிகிறது.
Relax ஆக பார்க்க வேண்டிய படம். மிகவும் relax ஆக ஆகவைக்கும் படமும்.