சேலம் – ஆக்ரா : 004
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து NDLS New Delhi Railway Station செல்ல வேண்டும். Ola வில் check செய்தால் 484 ரூபாய் / 58 நிமிட பயணம் என்று காட்டியது. சிரித்து கொண்டே அருகில் இருப்பவரிடம் கேட்டேன்.
” Metro station எங்கே இருக்கிறது ? ”
” மஞ்சள் காலடிகளை follow செய்து கொண்டே செல்லவும் ”
60 ரூபாய் ticket, 20 நிமிட பயணம். அழகாய் வந்து இறங்கியாயிற்று.
Boys படத்தில் செந்தில் சொன்னது நினைவில். ” Information is Knowledge “.
NDLS – கசகசவென்று. பொதுவாக என்னிடம் ஓர் பழக்கம் உண்டு. என் Shoe வுக்கு நானே polish செய்து கொள்வது. ஆனால் அதே நான் அந்த shoe polish செய்யும் வயதான மனிதனை கண்டால் என் shoe polished ஆக இருந்தாலும் அவரிடம் கொடுத்து போட சொல்வேன். அவருக்கு அந்த வருமானத்தில் கிடைக்கும் மகிழ்வை நான் ரசிப்பதுண்டு. பேரம் பேசாமல் கொடுக்கும் அந்த பணம் என்னை பொறுத்தவரை உதவி. அவரை பொறுத்தவரை தொழில் !
” நான் பிஹாரி. வந்து 20 வருடமாக இங்கே தான் இதே தொழில். என் கிராமத்தில் வேலை இல்லை. அதனால் வந்தேன். வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாக போய்விடும். ஆனாலும் யாரிடமும் நிற்க வேண்டியதில்லை. காலையில் வருவேன். இரவில் அறைக்கு சென்று விடுவேன். ”
அறைக்கு என்ற வார்த்தை உதைத்தது எனக்கு. 20 வருட தொழில் … இன்னும் வீடில்லை இந்த மனிதனுக்கு !
” எல்லோருடைய கால்களைத்தான் பார்த்துக்கொண்டே இருப்பேன். செருப்பு பிய்ந்து போனால் எனக்கு கொண்டாட்டம். ஆனால் … ஒருமுறை நிறை மாத கர்ப்பிணி யின் செருப்பு பிய்ந்து போய்விட்டது. தைத்து கொடுத்தேன். என்னவோ தெரியவில்லை பணத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எங்க வீட்டில் நான் ஒரே பையன். எனக்கு அக்கா தங்கை இல்லை ”
மனிதர்கள் பேச்சுக்காக ஏங்குகிறார்கள். யாராவது தன் மகிழ்வை, துக்கத்தை, ஏமாற்றத்தை, மன்னிப்பை … கேட்க மாட்டார்களா என்று காத்திருக்கிறார்கள். அந்த மனிதனிடம் பேசினால் அவ்வளவு மகிழ்ச்சி அவருக்கு.
” எங்கே போகிறீர்கள் ”
சொன்னேன்
” 4 ஆவது platform. இப்படி எல்லாம் போகாதீர்கள். அதோ அங்கே கடைசியில் … அங்கே போய் queue வில் நின்று escalator இல் ஏறி செல்லுங்கள். எளிதாக இருக்கும். ”
மனிதர்களின் கதைகளை உங்களால் கேட்க முடிந்தால் அவர்களின் உதவிகள் உங்களை தேடி வரும். அழகாக. எதிர்பார்ப்பின்றி.
விடைபெரும்போது கேட்டார் …
” ஒரு Tea சாப்பிடுவோமா ”
” Lemon Tea – சர்க்கரை இல்லாமல் ” …
அவர் வாங்கி கொடுத்த அந்த துவர்ப்பு / கசப்பு டீ இன்னும் சுவைக்கிறது. ஆழ் மனதில்.