சேலம் – ஆக்ரா : 005
டெல்லி ஆக்ரா பயணம் இரயிலில். Upper Birth எனக்கு. மெதுவாக என் படுக்கையை அடைந்து, luggage களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து நிமிர்ந்த போது அமர்ந்திருந்த கல்லூரி மாணவி சிரித்து வரவேற்றார்.
” தமிழா ? ”
சிரித்தேன் நான்.
மனிதனுக்கு என்று வண்ணங்கள் இருக்கிறது. தலைமுடி, கண்கள், தோல்… என்று அந்த வண்ணங்கள் அவன் யாராக இருக்கக்கூடும் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றன. நம்மை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று நினைப்பதை விட முட்டாள்தனமான status update இருக்க முடியாது !
காலையில் இருந்து இரு Green Tea மட்டும் தான் எடுத்திருக்கிறேன். ஆனாலும் பசியில்லை. இந்த Train நகர ஆரம்பித்தால் மூன்று மணி நேரம் ஆகும். Train உணவை பற்றி சொல்லவே வேண்டாம். அதுவும் வடக்கில் ! ஆக ஏதாவது அல்லது என்ன சாப்பிடலாம் என்று யோசித்துக்கொண்டே நகர்ந்தேன்.
கொய்யா ஓர் அற்புத உணவு. கிடைத்தது. நான்காக பிளந்து, கொஞ்சம் மிளகு தூவி .. ம்ம்ம்ம். சில படைப்புகள் diet க்காகவே படைக்கப்பட்டு இருக்கும் என நம்புகிறேன். கொய்யா விற்கும் அம்மாவிடம் ” Dhanyavaad ” என்றேன். கொஞ்சம் ஆச்சர்யம் கலந்து சிரித்தாள். ” இதில் என்ன நன்றி ” என்று அவள் அந்த சிரிப்பில் தெரிவித்தாலும்…மகிழ்கிறாள் என்று புரிந்தது. எங்கு சென்றாலும், எதை பெற்றாலும், கொடுத்தாலும், ” நன்றி “என்கிற ஒற்றை வார்த்தையின் மதிப்பே வேறு !. அதை தொடசர்ச்சியாக சொல்பவர்களுக்கு மட்டுமே அது புரியும். அதுவும்… நேர்க் கண் பார்த்து, சிரித்து …!!
திரும்ப வரும்போது கண்ணில் பட்டது அந்த புத்தக கடை. எம்மை இழுக்கும் இந்திய காந்தம் புத்தகங்கள். அருகில் சென்று கவனித்து இரண்டு புத்தகங்களை எடுத்துப் பார்த்தேன். உடனே அந்த கடைக்காரர் சொன்னார் …
” கொஞ்சம் பொறுங்கள். இன்னொரு புத்தகம் தருகிறேன் ”
கீழே குனிந்து எதையோ தேடி .. கடைசியாக இரு புத்தகங்கள் கொடுத்தார். ஒன்று Nobel பரிசு வென்றது. இன்னொன்று உலக அளவில் நன்கு விற்பனையாவது. எப்படி இவர்களுக்கு நம் ரசனை புரிகிறது ? வாங்கி கொண்டேன். பேரம் பேசவில்லை.
” Best Prize சொல்லுங்கள். உடன் கொடுத்து விடுகிறேன் ”
சொன்னார்.
” அந்த பணத்திற்கு இன்னொரு புத்தகம் கொடுங்கள். நீங்கள் சொன்ன பணத்தை கொடுக்கிறேன் ”
சிரித்து முகம் கவனித்து பலமாக சிரித்தார்.
பின் ஒரு புத்தகம் கொடுத்தார். பேரங்களை புத்தகங்களாக பெறலாம். அதை போல அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை இந்த உலகில் இல்லை !
திரும்ப வந்த பின் … அந்த கல்லூரி மாணவியிடம் கேட்டேன் ..
” South என்பது fine. தமிழ் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள் ”
…
பேசுவோம்.
இந்த பதிவை Prema Venkatesh அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
( ஒவ்வொரு பதிவையும் ஒவ்வொருவருக்கு present செய்கிறேன். ஏதோ ஒரு செய்தி உங்களுக்கு இதில் இருக்கலாம் ! )