சேலம் – ஆக்ரா : 007
சில நட்புக்கள் என்னுடன் வருடக்கணக்கில் பயணிப்பவர்கள். ஏன் அப்படி ? காரணம் மிகவும் எளிது. அவர்கள் Perceptual Position இல் எனக்கு என்ன தேவை என்று யோசிப்பவர்கள். மற்றவர்கள் ?. அவர்களின் அன்பை மதிக்கிறேன். அவ்வளவே.
ஆக்ரா நட்பு வீடு என்னை கேட்ட முதல் கேள்வி
” எங்கே ஜெய் சார் ? ”
அதே நேரம் கேட்ட இரண்டாம் கேள்வி ..
” என்ன மாதிரியான Diet உணவு வேண்டும் சொல்லுங்க சார் ”
இந்த இரண்டாம் கேள்வி முக்கியமானது. சமூக பொறுப்பு நமக்கு இருக்கிறது. நம்மில் யாரோ ஒருவர் Diet இல் இருக்கும்போது அதை கெடுக்கும் முதல் நபராக நாம் இருப்பதை போன்ற நம் அன்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ( அவரின் குடும்பத்திற்கு அந்த உடல் நல் நிலையில் நீள் நாட்கள் தேவைப்படக்கூடும் ! ). Guest க்கு நாம் விரும்புவதை சமைத்து பரிமாறுவது சிறப்பான பார்வையாக இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் .. அவருக்கு அவளுக்கு என்ன தேவை என்று பரிமாறுவதே சிறப்பான விருந்து என்பது என் பார்வை. ஆம். தாழ்மையான பார்வை அது அல்ல. கொஞ்சம் திமிரான சுய நலம் சேர்ந்த பார்வை.
” Adamance in achieving Goals is a beautiful Lifestyle. ”
Let’s think about it
நேபாலில் இருந்து சமைக்கும் இருவரில் ஒருவர் எனக்காக அமர்த்தப்பட்டு அவர் நேரத்திற்கு கொடுத்த உணவினை இங்கே புகைப்படமாக பகிர்கிறேன். காலை Green Tea பரிமாறிவிட்டு அந்த சமையல் மனிதர் சொன்னார்.
” Weight குறைஞ்சிருக்கீங்க. போன முறை பார்த்ததுக்கு வயிறை காணோம். ஆனால் இன்னும் குறைக்கணும். 10 நாளில் குறைத்துவிடுவோம். என்ன வேண்டுமோ சொல்லுங்க ”
இந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. தவம். வரம். ஆழ் மன குரல்.
Green Tea cup ஐ படிக்க சொல்லிவிட்டு சிரித்து சென்ற நட்பு சொல்லாமல் சொல்லிய வரி ..
” Never Grow old Mr. Jay ”
இயற்கைக்கு எதிராக பயணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. Stay Young never fits with Body – என்பதே என் பார்வை. ஆனாலும் அன்புடன் சொல்லி செல்லும் அந்த நட்பை மௌனமாக பார்க்கிறேன்.
அந்த அன்பைத்தான் செல்லும் இடங்களில் பெற விரும்புகிறேன். பெற்றால் நீங்களும் என்னுடன் பயணிப்பீர்கள்.
SivaKumar SivaShanmugham Meena Raja Anuthama Radhakrishnan Priyanalli Raghavan Karpagaraajen Thiyagarajan Sai Geetha Ssubhachithra Sri Vishnu …இவர்கள் அனைவரும் ( இன்னும் சிலரும் ) இந்த 60 நாட்களில் எனக்கான உணவை எனக்கு கொடுத்தவர்கள். அப்போது என் மனதில் தோன்றுவதை இப்போது உங்களுடன் பகிர்கிறேன்.
” யாதும் ஊரே. யாவரும் கேளிர். என் குடும்பம் மிகப் பெரியது. என்ன தவம் செய்தனை ! ”
இந்த பதிவை Meena Raja அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.