சேலம் – ஆக்ரா : 001
காலை 05.30 க்கு Train. அப்படி எனில் 05 மணிக்கு Station இல் இருக்க வேண்டும். அப்படி எனில் 04.45 க்கு வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும். ( எனக்கு வீட்டில் இருந்து station just 15 minutes ). ஆக 04.15 க்கு எழுந்தால் போதுமானது. இரவே Packing செய்தாயிற்று. காலை குளித்தவுடன் அணிய வேண்டிய ஆடையையும் எடுத்து வைத்தாயிற்று. எழுந்தால் குளித்து உடன் கிளம்ப வேண்டியது தான். ஆக எதற்கும் இருக்கட்டும் என்று 04 மணிக்கு Alarm வைத்து, ஆனால், மன alarm 03.55 க்கே எழுப்பியதில் ஓர் தனி மகிழ்வு. காலையே மகிழ்வுடன் ஆரம்பம்.
தயாராகி, ஆடை அணிந்து, Selfi ஒன்று எடுத்து … வெளியே வந்தால் .. 04.35 மணி. Gate மூடி இருக்கிறது. அருகே சென்று verify செய்தால், Locked. Watch Man ஐ காணோம் ! இங்கும் அங்கும் நடந்து பார்த்தால், காணோம். Cellphone இல் அழைத்தால் no response. 04.45 என்ன செய்யலாம் ? சரி காத்திருப்போம். 04.50. இல்லை .. காத்திருக்க முடியாது. அனைத்து பக்கமும் நடந்து பார்த்தாயிற்று, ஆளை காணோம். Gate ஐ இழுத்து பார்த்தால், உனக்கும் எனக்கும் ஆகாது என்று திமிராய் நின்றது. “Watchman ” – கத்தி பார்த்தாலும் பயனில்லை. எங்கே போயிருப்பார் ? மணி 05.00 AM.
மனம் சிறு அவசரத்தை இறக்குமதி செய்தது. என்ன செய்யலாம் ?. What is the worst outcome ? என்று யோசித்த போது…. ஒருவேளை train miss செய்தால், Car இல் சென்று விடலாம் option blink ஆனது. சரி இப்போது என்ன செய்யலாம் ? வேறு வழியே இல்லை. சுவர் ஏறி குதிக்க வேண்டியதுதான் ! பார்த்தால் பெரும் சுவர். நல்லவேளையாக ஒரு பெரும் tile ஒன்று நேராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது கால் வைத்து ஏற உதவியது. நான் ஏறிவிடலாம் ? Luggage என்ன செய்வது ? 05.05 AM.
சரி முதலில் வெளியே சென்று ஒரு Auto பிடிப்போம். Auto வுடன் வருவதற்குள் Watchman வந்தால் fine. இல்லை எனில் Automan உதவியுடன் luggage ஐ வெளியே எடுக்க வேண்டியதுதான். ஒரு #slogging ஆரம்பித்து, சாலை வந்தபோது ஆச்சர்யமாக auto ஒன்று காத்து கொண்டு இருந்தது. சூழ்நிலையை சொல்லியவுடன் அவரின் வேகம் இன்னும் அதிகமானது. ” Time சரியா இருக்குமே சார் ” என்று படபடத்தார். 05.12 AM.
மீண்டும் அபார்ட்மெண்ட் வரும்போது Watchman வந்துவிட்டார். எங்கோ urgent ஆக செல்ல வேண்டி இருந்தது.. sorry sir என்று அவரும் படபடத்தார். கேட்க நேரமில்லை. Luggage எடுத்துக்கொண்டு .. Auto வில் ஏறி, station அடைந்து, Platform check செய்து, 04 ஐ அடைந்த போது 05 30 ! ( பணம் அப்புறம் கூட வாங்கிக்கறேன் னு சொன்ன Automan முகம் இன்னும் மனதில் ! )
Train கொஞ்சம் தாமதமாக … எம் Coach நிற்குமிடம் நோக்கி நடந்து, இப்போது எம் இருக்கையில் Crocodile Posture இல் படுத்துக்கொண்டு உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன்.
பயணங்களில் சில பாடங்களை கற்றல் முக்கியமானது.
1. இரவே Watchman இடம் நம் காலை நேர பரபரப்பை சொல்லி விடுவது நல்லது.
2. Auto வுக்கான / ola வுக்கான / Bus க்கான சரியான அல்லது சில்லறை தொகை கையில் இருத்தல் நல்லது.
3. இருக்கை அடைந்த பின், Driving Licence ஐ எடுத்து வைத்துக்கொண்டு படுப்பது அல்லது அமர்வது நல்லது. Check செய்ய வரும்போது இலகுவாக காண்பிக்க உதவும்.
04. Crocodile Posture – படுக்கை இருக்கையில் மிக நல்லது. இரு கால்களும் மேலே தூக்கிய வண்ணம், வயிறு இருக்கையை அழுத்திய வண்ணம், முதுகை Relax செய்து கொள்ள இது அழகாக உதவும்.
Train நகர்ந்துகொண்டு இருக்கிறது. கைபேசியில் உங்களுடன் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். Technology தான் எவ்வளவு வசதி ! நினைப்பவற்றினை பகிர முடிகிறது. இப்போதைக்கு இலக்கு – கோவை இரயில் நிலையம். அங்கே இருந்து ?…. அதை அப்போது பார்ப்போம்.
இன்னும் பேசுவேன். பேசுவோம். Dot.