சேலம் – ஆக்ரா : 003
என்ன புத்திசாலித்தனம் என்றே தெரியவில்லை. இருக்கை confirmed. Seat number confirmed. ஆனாலும் மக்கள் queue வில் நிற்கும் அதிசயம் இருக்கிறதே ? என்ன சொல்வது ? பொதுவாக விமான பயணங்களில் கடைசி ஆளாக bus இல் ஏறுவது நான் தான். அதில் ஒரு வசதி இருக்கிறது. முதல் ஆளாக இறங்கி விடலாம்.
Booking போதே ஜன்னல் இருக்கை வேண்டும் என்று கேட்டிருந்தேன். அப்படியேயும் கிடைத்தது. இருக்கை அருகே சென்றால் இரு பெண்களும் ஓர் குழந்தையும். அந்த பெண் ( அம்மாவாக இருக்க கூடும் ) .. ” குழந்தைக்கு ஜன்னல் வேண்டும் என்று அடம் பிடிக்கிறது. ஆகையால் … ” .. குழந்தையை கவனித்தேன். முகம் முழுக்க ஆர்வம். அதே நேரம் எழச் சொல்லி விடுவேனோ என்கிற பயம். அதுவே புகைப்படமாய் இருக்க சிரித்து நகர்ந்தேன்.
விமான பயணங்களில் அழகாக இரண்டு மூன்று மணி நேரங்கள் கிடைக்கும் அதுவும் .. netwrok disturbance இல்லா நேரங்கள் அவை. புத்தகம் ஒன்றை படிக்க ஆரம்பித்தேன். அடுத்த இரண்டு மணி நேரங்கள் எனக்கும் புத்தகத்திற்குமானவை. இருவரும் இணைவது இருவற்கும் வரம்.
எனக்கு அருகே வயதான தம்பதியர். எனக்கு parallel ஆக just married தம்பதியர். விமானம் உயரே எழும்பும்போது இரு தம்பதியினரும் ஒருவர் கையை மற்றவர் பிடிக்க பயணிப்பதுதான் வாழ்வின் தத்துவம். இடையில் அடித்துக்கொள்கிறோம். வாக்குவாதம் செய்கிறோம். ஆனால் ஆரம்பத்தில் .. இறுதியில் .. ஒரு கை தேவைப்படுகிறது. அது மனைவியாக இருப்பின் பலம். நட்பாக இருப்பின் மிகப்பெரும் பலம்.
இறங்கும்போதும் மனிதர்கள் மீண்டும் எழுந்து நின்று கொள்கிறார்கள். எனக்கு மீண்டும் மீண்டும் உதிக்கும் ஓர் கேள்வி தான் அது.
” அப்படி என்னதான் அவசரம் உங்கள் அனைவருக்கும் ? “