சேலம் – ஆக்ரா : 006
” South சரி. தமிழ் ன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க ? ”
அந்த கல்லூரி பெண் பேச தொடங்கினாள்.
” மீசை. தமிழர்களுக்கென்று மீசை அடையாளம் ஒன்று இருக்கும். இலேசாக அது மலையாளிகளிடம் எனக்கு குழப்பும். But தமிழ் மக்களை தனியாக கண்டுபிடிக்க முடியும் ”
” ஒரு வேளை மீசை இல்லாது இருந்தால் ? ”
” The way they behave – certainly more polite than the North over here ”
மனதிற்கு மகிழ்வாக இருந்தாலும் பொள்ளாச்சியை நினைத்து வருத்தம் வந்தது.
மூன்றரை மணி நேர பயணம். AC. சிறிய தூக்கம். சட்டென ஓர் விழிப்பு. பின் மீண்டும் தூக்கம். இரயிலில் தூங்குவதை போல சுகம் வேறு எதுவும் உண்டா என்று தெரியவில்லை ? Horizontal ஆக ஆடும் தொட்டில் அது. ஒரு வித மௌன மூச்சுக்காற்று முனகலுடன் நகரும் அந்த இராட்சத மரவட்டை நிச்சயம் ஆச்சர்யம் தான் !
TTR checking காக எழுப்ப, வைத்திருந்த DL ஐ எடுத்து கொடுத்தேன். பார்த்துவிட்டு சிரித்தார்.
“தமிழ்நாடு ? ”
சொன்னேன்.
” ஒரு முறையாவது பார்க்க வேண்டும் ”
இதுதான் இந்தியா. இங்கேயே பிறந்து, இங்கேயே வாழ்ந்து, இங்கேயே மடிந்து போன பலர் இந்தியாவை பார்க்காமலேயே செல்வது தான் ஆச்சர்யம். தான் பிறந்த நாட்டின் நீள அகலங்களை காணாமல் ஒருவன் இறந்தால் அதை தேசிய குற்றமாக கூட அறிவிக்கலாம். ( இப்போதிருக்கும் நிலையில் அறிவித்தாலும் அறிவிப்பார்கள் ☺️☺️! ). தன் நாட்டின் பிரம்மாண்டத்தை ஒருவன் ஒருத்தி காண முடியும் எனில், அவனின் அவளின் பார்வை முற்றிலும் மாறிவிடும். ஆம். முற்றிலும்.
ஆக்ரா வந்து இறங்கிய போது குளிர ஆரம்பித்தது. எனக்கு இது ஆச்சர்யம். மார்ச் இல் ஓரளவிற்கு வெய்யில் வந்துவிடும். 16 degrees என்பதெல்லாம ஆச்சர்யமே. ( இரவில் 12 . ஒரு பெரிய தலையணையை இறுக்கமாக கட்டிக்கொண்டு தூங்கியது நினைவில் ! )
நட்பு ஒன்றின் வீட்டில் தங்கும் ஏற்பாடு. கணவனும் மனைவியும் கீழே வந்து பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி ..
” எங்கே ஜெய் சார் ? ”
சிரித்து கொண்டே நின்றேன்.
60 ஆம் நாளில் சர்க்கரை அற்ற வாழும் வாழ்க்கைக்கு அப்படி ஒரு feedback கிடைக்காதா என்ன ?
Kirthika Tharan க்கு நன்றிகள். அவருக்கே இந்த பதிவை present செய்கிறேன் !