சேலம் ஆக்ரா 011
ஒரு பள்ளி. அதில் படிக்கும் மாணவர்களில் ஒருவருக்கு எழுத்து திறமை இருப்பதை கண்டுபிடிக்கிறது. அவரை மீண்டும் மீண்டும் எழுத வைக்கிறது. பொதுக்கூட்டங்களில் அழைத்து அவரின் எழுத்துக்களை படிக்கிறது. அந்த சிறு எழுத்தாளனின் நம்பிக்கையை அதிகப்படுத்தி கொண்டே இருக்கிறது. இறுதியாக அவனின் புத்தகத்தையும் அழகாக வெளியிடுகிறது. ஒரு விழாவாக. நிறைய எழுத்தாளர்களின் முன்னிலையில் ! வரும் April 11 ஆம் தேதி அன்று !
பள்ளிகளை நான் அடையும்போது கவனிக்கும் சில நிகழ்வுகள் மனதிற்கு மகிழ்வு கொடுப்பவையாக இருக்கின்றன. இந்த standee யை பார்த்தவுடன் அந்த student பற்றி விசாரித்தேன். அவரை பார்க்க வேண்டும் என கேட்டேன். ” Exam எழுதி கொண்டு இருக்கிறார் 12 மணிக்கு பார்க்க முடியும் “. இதை விட பெருமை இருக்க முடியுமா என்ன ஒரு திறமைக்கு ? Exam எழுதிக்கொண்டு இருக்கும்போது appountment கேட்பது !

10 வயதில் புத்தக வெளியீடு என்பதெல்லாம் வரம். அதுவும் தான் படிக்கும் பள்ளி எடுக்கும் முன் முயற்ச்சியில் புத்தக வெளியீடு என்பது திறமைக்கான மிக முக்கிய அடையாளம்.
சரியாக 12.40 க்கு அக்க்ஷர் மிஷ்ரா அவர்களை சந்தித்தேன்.
” உங்களின் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் சொல்ல அழைத்தேன். என் பெயர் ஜெய். தமிழ்நாடு ”
” நன்றிகள் சார் ”
” இந்த வயதில் புத்தகம் வெளிவருவது பெரும் வரம். வாழ்த்துக்கள் சார். ”
” நன்றிகள் சார் ”
அமைதியான அடக்கமான பார்வைப் பையன் அவர். அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்கும் மற்ற மாணவர்களை கவனிக்கிறேன். எழுத்து போல ஒரு திறமை உள்ளே வந்தால் .. அதுவும் சிறு வயதில் …? அமைதியும் கூடவே வந்து விடுமோ !? இன்னொரு சிறு Rehman ஆகவே எனக்கு தெரிந்தார் !
அவரின் ஆசிரியையை சந்தித்தேன்.
” அமைதியாக இருப்பார். பேச மாட்டார். கதைகளை அவ்வளவு அழகாக சொல்வார். எழுதுவார். சிறப்பாகவும் படிப்பார். ”
புகைப்படம் எடுத்துக்கொண்டு விடை பெறும்போது கவனித்தேன். மிகவும் குறைவாக பேசக்கூடிய, shy யாக நிற்கும் அந்த திறமையை ! வாழ்க்கையில் திறமையை உணர்ந்து விட்டால் … அங்கே அமைதி அழகாய் வந்து சேர்ந்து விடும்போல !
எழுத்தை ஆள்வதால் எழுத்தாளர் என்கிறோம். எமக்கு இன்னொரு பார்வை இருக்கிறது. எழுத்தாளர் என்பது என்னை பொறுத்தவரை .. எழுத்தை வாழ்வதால் !





