சேலம் ஆக்ரா 12
ஹோலி ஒரு வித்தியாச பண்டிகை. தென் இந்தியாவில் இருந்து ஹோலியை பார்ப்பதற்கும், வட இந்தியாவில் இருந்து ஹோலியை பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. தென் இந்திய பார்வை என்பது ஆட்டம். வட இந்திய பார்வை என்பது மகிழ்வு. ஒரே நாட்டில் தான் எத்தனை பார்வைகள் !
நட்பின் அழைப்பின் பேரில் ஹோலியை கொண்டாட camera உடன் சென்று இருந்தேன் . உள்ளே செல்லும்போதே பாடலும் ஆடலுமாய் 200 பேருக்கு மேலாக. அனைவரும் ஏதோ ஒரு நாட்டின் பிரதிநிதிகள். அவரவர் முகத்தில் இனம் புரியா ஆனந்தம். கண்கள் முழுக்க குழந்தைத்தனமாய் தேடும் பாங்கு. தேடியவர் தேடியவள் கிடைத்தவுடன் .. அவர் அவள் மீது வீசி அடிக்கும் வண்ண பூச்சு, வண்ண நீர், வண்ண பூக்கள் … அட்டகாசமான உலகம் அது !

வழக்கமான Trainer பார்வையில் இருந்து, விலகி, ஒரு புகைப்பட ஆர்வலனாக அங்கே சுற்றியது மறக்க முடியா நினைவில். ( ஹேய் photographer .. இங்கே வா.. எங்களை photo எடு. ஒழுங்கா எடுக்கணும் என்ன ? ) சிரித்த வண்ணம் அங்கே உலவிக்கொண்டு இருந்தேன்.
வயது, ஆண், பெண், இந்திய, வெளிநாட்டு வேற்றுமைகள் எல்லாம் அங்கே இல்லை. ஆட்டம் மற்றும் வண்ண வீச்சுக்கள் மட்டுமே அங்கே உலகம். புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தபோது … ஒரு பெண் சொன்னாள் .. ” இதை நான் sweden இல் கொண்டாட என்ன செய்ய வேண்டும் ? ” . நான் சிரித்து கொண்டே சொன்னேன்.. “Just கொண்டாட வேண்டும் அவ்வளவு தான் ” .

இந்த பண்டிகைகள் இந்த நாட்டிற்கு மட்டுமே என்று சொல்ல வாய்ப்பில்லை. பண்டிகைகள் தங்களின் பின்னே மறைத்து நிற்கும் நோக்கம் மனிதம் என்பதால் யாதும் பண்டிகையே யாவரும் கொண்டாடுவோம் … என்பதே எம் நிலை. Christmas என்பது இன்னாருக்கு மட்டுமே என்பதே தவறு. அந்த பண்டிகை சொல்ல வருவது என்ன என்பதை எடுக்க முடியும் பட்சத்தில்.. அனைத்து பண்டிகையும் நம்முடையதே !

மொத்த புகைப்படங்களின் video link இங்கே இணைத்திருக்கிறேன். அனைத்து புகைப்படங்களையும் video வில் ரசிக்கலாம்.


ஹோலி ஒரு வித்தியாச பண்டிகை. தென் இந்தியாவில் இருந்து ஹோலியை பார்ப்பதற்கும், வட இந்தியாவில் இருந்து ஹோலியை பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. தென் இந்திய பார்வை என்பது ஆட்டம். வட இந்திய பார்வை என்பது மகிழ்வு. ஒரே நாட்டில் தான் எத்தனை பார்வைகள் !



