சேலம் to ஆக்ரா 014
தாஜ் மஹால் – ( நாம் மஹால் என்று அழைக்கிறோம். ஆனால் மெஹல் என்பது வட இந்தியர்களின் அழைப்பு விதம் ) பற்றிய வரலாறு எல்லாம் இருக்கட்டும். யதார்த்த உலகில் தாஜ் எப்படி இருக்கிறது, எப்படி கவனிக்கப்படுகிறது, வருகிறவர்கள் மனநிலை என்ன .. என்று கவனிப்போமா ?

தாஜ்க்கு பல முறை வந்திருக்கிறேன். பலருடன். கடைசியாக இருமுறை தனியாக. முதல் முறை வந்தபோது யமுனா நதி பார்த்து அதிர்ந்து நின்றேன். எருமை மாடுகளும், சாக்கடையுமாய் நாற்றத்தில் இருந்தது அது. யமுனை நதிக்கரையில் என்று படித்தது கண் முன்னே வேறு மாதிரி தெரிய .. தாஜ் ன் சுற்றம் பிடிக்கவில்லை அப்போது. சில வகைகளுக்கு பின் அது மாறுவதை கவனித்தேன். இப்போது ஓரளவிற்கு பரவாயில்லை.

இத்தனை முறை வந்ததில், ஒரே ஒரு முறை தாஜ் இல் பழுது வேலைகள் நடந்து கொண்டு இருந்ததால் புகைப்படம் எடுக்க முடியாது போனது. அப்போது just அமர்ந்து பார்த்து விட்டு சென்றேன். புகைப்படம் எடுக்கலாம் என்றாலும் பழுது வேலை பார்க்கும் Taj ஐ புகைப்படம் எடுக்க மனம் வரவில்லை !

எப்போதெல்லாம் terrorist பிரச்சினைகள் வருகிறதோ அப்பொதெல்லாம் taj இல் கெடுபிடி அதிகமாகும். நேற்றும் அப்படியே. ( விமான பயணம் புலவாமா க்கு பின் அப்படியே இப்போது ! ). Aadhaar Card must என்று யாரோ கத்திகொண்டே இருந்தார்கள். நான் ஆக்ரா வில் இருப்பதால் வெறும் கையாக சென்று விட்டேன். ஆனாலும் cellphone கைகொடுத்தது. ஆக Aadhar card வைத்திருப்பது நலம். ( வெள்ளி தாஜ் க்கு எப்போதும் விடுமுறை ! ).

நீண்ட queue நேற்று. இதற்கு முன் நான் சென்ற அனைத்தும் காலை வேளை. முதலில் சென்று விடுவேன். ஆகையால் இது எனக்கு புதியதாக இருந்தது. 500 ரூபாய் கொடுத்தால் நேராக உள்ளே சென்று விடுகிறேன் என்று திரியும் Guide கள். வெளிநாட்டு பயணிகளிடம் 5000 ரூபாய் வாய் கூசாமல் கேட்பதும் நடந்து கொண்டே இருக்கிறது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த இலஞ்சம் ஒழிவதில்லை. இந்த இலட்சணத்தில் அரசியல்வாதிகள் வாய் கிழிய பேசுவது தான் .. எரிச்சல். Chowkidhaar எங்கே பா ? என்று மக்களிடம் அங்கே தெரியும் கிண்டல் தான் ஆளும்கட்சிக்கு weak link. ஒரு விஷயத்தை நாம் சரியாக செய்யும் முன் எதற்கு அப்படி ஒரு பெயர் என்று எனக்கும் புரியவில்லை. ( file ஐ கண்டுபிடிக்க சொல்லுப்பா அவரை ! – என்பது இந்தியா முழுக்க common tone ஆக இருப்பது ஆச்சர்யம் ! )

மாலை சூரிய வெளியில் தாஜ் பார்ப்பது சிறப்பான அனுபவம். Mobile இல் சில settings செய்து இந்த முறை எடுத்திருக்கும் படங்கள் வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன்.

தாஜ் என்பது காதலர் symbol என்று சொல்லப்படுவது இருக்கட்டும். அங்கே வந்திருந்த ஜோடிகள் பேசுவதை கொஞ்சம் கவனிப்போமா ?
” சீக்கிரம் வா. பார்த்துட்டு போகணும். நீ பாக்கலை ன்னு சொன்னே அதனால தான் கூட்டிட்டு வந்தேன் ” – நடுத்தர வயது தம்பதி.
” இப்போ மாதிரியே எப்பவும் இருப்பியா ? ” புது மண தம்பதி.
” ஒரு kiss. அதை அப்படியே ஒரு selfie ” ஒரு வெளிநாட்டு இள வயது தம்பதி.
” நீ இங்கே இல்ல. இருந்தா சந்தோஷப்படுவேன். ” என்று யாருடனோ பேசிக்கொண்டிருக்கும் நடு வயது ஆடவன்.
” மடியில் கொஞ்சமா படுத்துக்கவா ? ” என்று சிரித்து கேட்கும் பெண். கொஞ்சம் எரிச்சலாக ” சரி ” என்று சொல்லும் ஆண்.
” பையன் பத்திரம் ” என்று மனைவியை அதட்டும் கணவன்.
” நீ கொஞ்ச நேரம் தூக்கிட்டு வா “என்று குழந்தையை கொடுக்கும் நடு வயது தம்பதி ..
இவ்வளவுக்கும் இடையில் .. தாஜ் ஐ அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த பெண்ணை கவனித்தேன். வெளிநாட்டு பெண். சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்த அவளிடம் ..
” How is it ? ” என்று கேட்டேன்.
” Nothing to add. Nothing to delete. ” என்று சொன்னாள். தாஜ் ஐ பார்த்துக்கொண்டே.
” First Time ? ”
” No. 4th time. ”
மெதுவாக சொன்னாள்.
” She is just beautiful. Just as she is. I would love to watch her again and again. ”
ஆம். அழகு என்பது இருப்பதை ரசிப்பது. இப்படி இருந்திருந்தால் என்று பேசுவது அல்ல. அப்படியே accept செய்வதில் இருக்கிறது அழகு. முழுமையாய். நிறைவாய்.

Video link :





