சேலம் to ஆக்ரா 015
ஆக்ராவில் காலை 05.21 க்கு டெல்லி நோக்கி Train. 04.55 க்கெல்லாம் தயார். 05 நிமிடத்தில் station அடையலாம் என்றாலும் 20 நிமிடம் முன்னதாகவே station ஐ அடைந்தாயிற்று. 05.21 க்கு வர வேண்டிய train 05.40 க்கு வந்தது. அங்கே எனக்கு முன்னமே நின்று கொண்டிருந்த வயதான அம்மா சொன்னது காதில் விழுந்தது.
” நான் சீக்கிரம் வரும் போது தான் train late ஆக வரும் “
வாழ்க்கை அப்படித்தான் surprise வைத்திருக்கும். நாம் சரியாக இருப்போம். இன்னொரு பக்கம் தவறு நடக்கும். நாம் தவறு செய்வோம். அப்போது எதிர்ப்பக்கம் எல்லாம் சரியாக நடக்கும்.
மூன்று மணி நேர டெல்லி பயணம். எடை குறைந்த பின்பு எந்தப் பக்கவாட்டிலும் அழகாக படுத்துக் கொள்ள முடிகிறது. இதமான தூக்கம். மென் குளிர். சில தருணங்கள் கொடுத்து வைத்த பக்கங்கள்.
மெட்ரோ பயணம் இன்னும் அசத்தல். அவரவர் அவரவர் இருக்கையில். அழகான அறிவிப்புகள். யாரிடமும் எதுவும் கேட்க வேண்டிய நிலை அற்ற தொழில் நுட்ப உதவி.

NDRS இல் இறங்கிய பின், ஆட்டோ, ola, uber எல்லாவற்றையும் தவிர்த்து, மெட்ரோ வுக்கு சென்றால் அழகான 20 நிமிட பயணம். முதல் முறை டெல்லி பயணிப்போர் terminal தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். Terminal 2 மற்றும் 3 என்றால் மெட்ரோ நேராகவே இறக்கி விடும். Terminal 1 என்றால் இறங்கிய பின் 15 நிமிட மெட்ரோவின் bus பயணம்.
இதே போல நகரங்களுக்கு இடையில் metro வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
வரும்போது படித்த கதை ஒன்றுசொல்லிய சிறு புரிதல்.
” தவறு செய்தவர்களை விட்டுவிட்டு, பொதுவாக எல்லோரையும் தண்டிப்பது எப்படி நியாயமாகும் ? ”
நியாயமான கேள்வி. இல்லையா ?
Airport ஒரு வித்தியாச உலகம். பக்கத்தில் இருப்பவரிடம் பேசினால் மானம், கவுரவம், சொத்து எல்லாம் போய்விடுமோ என்றபடி திரியும் மனிதர்கள். அவர்களின் வான் பார்த்த பார்வை. செயற்கை ஆங்கில பேச்சு. ஏன் இப்படி என்று கேட்க வைக்கும் மாறுவேட போட்டி. பொதுவாக நமக்கு ” நாமாக ” இருப்பதில் தான் பிரச்சினை. வேறு ஒன்றாக இருப்பதை சிறப்பாக செய்யும் வித்தியாச மனிதர்கள் நாம் !





