சேலம் to Agra 016
Airport ஒரு அட்டகாச உலகம். ( ஆங்கிலம் எங்கும். இங்கே ஹிந்தி யை காணோமே .. ?☺️! ). யதார்த்த மனிதர்கள் ஒரு புறம். செயற்கை மனிதர்கள் ஒரு புறம். பேசினால் கவுரவம் போய்விடும் என்ற மனிதர்கள் இன்னொரு புறம். பேசினால் நுனி நாக்கு ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவேன் என்று அடம் பிடிக்கும் adam eve இன்னொரு புறம். ( Tis fli goes t Mumbai .. isn’t ? ).

இந்த செயற்கை தனங்களை கடந்தால் நியாயம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் விலைப்பட்டியல் ! Minimum என்பது சராசரியாக 100 க்கு மேல். இந்தியா வளர்ந்ததாக இங்கு வேண்டுமானால் சொல்லி கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. அநியாய விலைகளில் தொலைந்து போகும் இயற்கை முகங்கள். 
விடுமுறை வந்துவிட்டால் Airport களை கட்டும். மற்ற நாட்களில் இதே இருக்கைகள் அநாதைகளாயும், விடுமுறைகளில் நிறைந்தும் இருப்பது வாழ்க்கை யதார்த்தம். ஒன்று கிடைக்கும்போது ஒன்றை இழக்கவும் தயாராக வேண்டும்.

வான் வெளி பயணத்தில் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒன்று மேகக் கூட்டங்கள். வீசப்பட்ட வெண் சில்லறைகளாய் அவை நகராமல் நின்று பேசும் மௌன மொழி என்னவாக இருக்கும் என்று ஒரு நாளாவது கண்டுபிடித்து விட வேண்டும்.

Diet இல் கிடைத்த இன்னொரு பலன் பழைய சட்டைகள் ( use செய்யாது போன புது சட்டைகள் அவை !☺️ ) .. மீண்டும் உடல் வலம் வரத் தொடங்கி இருப்பதே. நீண்ட நாளாயிற்று நான் ” Tug In ” செய்து. இன்றைய நாள் அதில் கொஞ்சம் special எனக்கு. இன்னும் சில வாரங்களில் அல்லது மாதங்களில் பழைய உடலை, அமைப்பை பெற முடியும். நிச்சயமாக !

வைபவ் வழக்கம் போல உற்சாக வரவேற்பு கோவையில். எனக்கு என்ன தேவையோ அதை அழகாக செய்து கொடுக்கும் அன்பு, அதில் அவன் விரும்புவதை கூட என்னிடம் கேட்டு சேர்க்கும் பாங்கு… பல பெரியவர்கள் சிறியவர்களிடம் பாடம் கற்க வேண்டும் – விருந்தோம்பலில் !
மீண்டும் இப்போது கோவை சேலம் இரயிலில் அமர்ந்து இருக்கிறேன். பத்து நாட்களாக நிறைய அனுபவங்கள். காட்சிகள். பயணங்கள். மனிதர்கள். பாடங்கள். பொதுவாக Car இல் பயணிக்கும் நான் இம்முறை நேரம் காரணமாக விமான பயணம் எடுக்க நேர்ந்தது. இந்த பயணத்தில் என்னால் முடிந்த வரை அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்ததாய் உணர்கிறேன். அடுத்த பயணத்தில் மீண்டும் பகிர்தல் தொடரும்.
இந்த இரயில் பயணத்தில் இப்போது எனக்கு மிகவும் பிடித்த ” சுந்தரி கண்ணால் ஒரு சேதி ” பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். சில பாடல்கள் மனதிற்கு நெருக்கமானவை. நெருக்கமான காரணங்கள் இன்று மாறி இருந்தாலும், பாடல்கள் ஏற்படுத்தும் மீள் அனுபவங்கள் மாறுவது இல்லை.
“வாள் பிடித்து நின்றால் கூட, நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும் ” –
என்ன மாதிரியான வரிகள் !
எப்போதும் !





