Drive with next Gen -001
” Uncle … எப்படி இப்படி happy யாவே இருக்கீங்க ? ”
அந்த சிறு excellence ன் observation ஐ நான் ரசித்து… சிரித்தேன்.
எல்லோருக்கும் பிரச்சினைகள் இருக்கிறது. பிரச்சினைகள் இல்லா மனித இனம் / விலங்கு இனம் / உயிர் இனம் வாய்ப்பே இல்லை. ஆனால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதம் தான் ஒவ்வொருவருக்கும் வித்தியாசம். எம் எதிர்கொள்ளல் வேறு விதம். உடன் பயணிப்பவர்களுக்கு இது புரியும்.
” Uncle உங்களுக்கு கோபம் வராதா ? ”
கண்ணோடு கண் பார்த்து சிரித்தேன்.
கோபம் கண்டிப்பாக வரும். ரௌத்திரம் விடு என்று சொல்லவில்லை பாரதி. பழகவே சொன்னார். நான் கோபத்தை வெளிப்படுத்தும் விதம் அநேகமாய் வேறுபடலாம். சமீபத்தில் ஒரு நட்பு ஒன்று நல்ல விஷயத்தை எழுதியது. ஆனால் அந்த விஷயத்தை பல வருடமாக சொல்லும் இன்னொரு நட்பின் பெயரை குறிப்பிடாமல் எழுதியபோது கோபம் வந்தது. ” இன்னா செய்தாரை ” எம் style ல் / முறையில் உணர்த்தினேன். அது எம் கோபத்தின் வடிவம். எம் அப்பத்தா அடிக்கடி சொல்லும் ஒரு வரி .. ” செய்ய மறந்தவர்களுக்கு செய்து காட்டி விடு “. இதை போன்ற positive கோபம் ஒன்று இருக்க வாய்ப்பில்லை. என்னுடையது கிட்டத்தட்ட ” பாக்கத்தானே போற ” profile.
” Uncle .. எப்படி உங்களால் சகஜமாக எல்லோருடனும் பேச முடிகிறது ? ”
நான் என்னை lite ஆக வைத்திருக்கிறேன். ஆகையால் முடிகிறது. கணம் எப்போதுமே பிரச்சினை. உடலில் பிரச்சினை எனில், மனம் கனத்தால் அது இன்னும் பெரும் பிரச்சினை !. எத்தனையோ மனிதர்களை பார்த்தாயிற்று .. பேச்சு ஒன்று, செயல் ஒன்று, முன் ஒரு பேச்சு, பின் ஒரு பேச்சு, காரியத்திற்கு ஓர் பேச்சு, காரியம் முடிந்தவுடன் ஓர் பேச்சு .. இதேபோல நல்ல மனிதர்களும் .. !. அனைவரையும் பார்க்க முடிந்ததால், இப்போதெல்லாம் சிரிக்க முடிகிறது. ” என்னத்த கொண்டு போகப் போறீர் ? ” என்று எம் தாத்தா அப்போதே சிரித்து எல்லோரையும் கேட்டது புரிய வருவதால் வாழ்க்கை எளிமையாக இருக்கிறது. இன்றைய வாழ்க்கை முக்கியமானது. இதை வாழ்வோம். நேற்றைய நாளைய வாழ்வை அப்புறம் பார்க்கலாம் !
இன்னைக்கு முழுவதும் எப்படி active ஆக இருக்கீங்க ?
” வலி சொல்லும் முனகல்கள் ” என்று எழுதினால் அவ்வளவு எழுதலாம். அத்தனை இருக்கிறது. ஆனால் நான் ” வலி சொல்லும் வலிமைகள் ” என்றே எழுதுகிறேன். வலி உளியால் செதுக்கிய உடல் இது. சிறு வயது ஏழ்மை முதல், இப்போதைய வாழ்க்கை வரை எனக்கு இயற்கை கொடுத்த பலம் ஈடில்லா உழைப்பு மட்டுமே. அதை நன்றியோடு பார்த்து கொள்வதால் .. active ஆக இருக்கிறேன். Active என் வாழ்வின் முக்கிய அச்சாக மாறுகிறது.
எதற்கு இவ்வளவு surprises ?
வாழ்க்கை அப்படித்தானே நம்மை வைத்திருக்கிறது. அடுத்த நொடி தெரியா வாழ்க்கை போல ஒரு surprise உலகில் உண்டா ? அப்படி வாழ்க்கையில் நாமும் surprise கொடுப்பேமே என்று தான் நகர்கிறேன். ஆனால் ஒன்று உறுதியாக மனதில் கொள்கிறேன். Positive Surprises மட்டுமே !
அடுத்த drive எப்போ போகலாம் ?
இயற்கை சொல்லும்போது.
*******************
பிரிவின் போது, நன்றி சொல்லிவிட்டு அந்த சிறு excellence கசித்த சிறு துளிகள் எமக்குள் இன்னும் இருக்கின்றன – ஈரமாய் !
#என்னதவம்செய்தனை !. கற்றுக் கொடுக்க என்று நான் பயணித்தாலும், கற்றுக்கொள்வது நானும் என்பதில் பெரும் மகிழ்ச்சி எனக்கு.
” தோன்றும்போது.. உங்களை கூப்பிடுவேன். பேச வேண்டும். சரியா ? ”
அப்படி ஒரு call காக காத்திருக்கிறேன்.
பெற்றால் தான் பிள்ளையா என்ன ?