நம்பிக்கை மனிதர்கள் 003
அசத்தலாக இருக்கின்றன பொம்மைகள். என்னவோ செய்கின்றன உள்ளே. கன்னம் கிள்ளவா என்று கேட்க வைக்கின்றன.

Software இல் பணி புரிந்தாலும் மனம் முழுக்க தனக்கு பிடித்தமானவற்றை தயாரித்து வாழ் வாழ்க்கையில். ஒரே நாள் முடிவில் மொத்த உலகமும் மாறிப்போகிறது Nesha விற்க்கு. பொம்மைகள் உலகில் இந்திய பொம்மைகளை பார்க்க வேண்டும் எனில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தவிர்த்து குறிப்பாக எனக்கு தெரியவில்லை. ( ஆனால் barbie இங்கே பிரபலம் ! ). அப்படி ஒரு உலகில் Sri Kolhapuri Dolls என்று ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்த தனி தையிரியம் வேண்டும்.

” தோன்றியது .. உடன் வெளியே வந்துவிட்டேன். இப்போது ஒவ்வொரு step ஆக வைக்கிறேன் “என்று படபடப்பாக சொன்னவர் தான் ஒன்று தயாரிப்பு factory க்கு இடம் போதவில்லை என்று பெரிய இடம் பார்க்கிறார். சிறு முயற்சி பெரும் மாற்றம். இரு சக்கர வாகனத்தில் பொம்மைகள் கொண்டு வந்து உதவி செய்த கணவர் இப்போது அத்துணை உதவிகளையும் செய்யும் ஆதரவில் .. இன்னும் தீர்க்கமாக முன்னேறுகிறார்.

” கனடா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து .. என்று பொம்மைகள் பறக்கின்றன. மகிழ்வாக இருக்கிறது “. தன்னை நம்பினால் உலகமே களம் தானே ? “என் team க்கு ஒரு பயிற்சி வேண்டும். நட்பாக இல்லை. ஒரு பயிற்சியாளராக ” என்று கேட்கும் தன்னம்பிக்கை தான் இங்கு புத்தி கொள்முதல். இந்த team உடன் இணைவதில் மிக்க மகிழ் நிறை எனக்கு.

” ஒரு நாள் வரும். அந்த நாளில் நட்சத்திரங்களை விலை பேசுவேன் ” என்று புதிய தொழிலை தொடங்கிய ஒருவர் zenlp தன்னம்பிக்கை வகுப்பில் பேசியது ஞாபகத்தில் !

ஆக அந்த நாளும் வரும். பொம்மைகள் உலகம் நட்சத்திர உயரத்தை அடையட்டும். மனம் நேர்மையாக மகிழும் எதுவும் நல்ல முன்னேற்றமே !

வீடுகள் அலுவலகங்கள் பிறந்த நாள்கள் பண்டிகைகளை அடையட்டும் இப்பொம்மைகள். மகிழ்ச்சி யின் இன்னொரு வடிவம் உலகிற்கு புரியட்டும்.





