Q & A – 003
Q no 004 :
எதையும் சிந்தித்து பேசவேண்டும் என்பதும், நாம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எதுவும் பேசக்கூடாது எனவும் தெரிகிறது… ஆனால் உணர்ச்சி வசப்படும் போது சிந்தனை பின்னுக்கு தள்ளப்படுவதும் பேச்சுகள் நம் எண்ணப்படி அமையாததுமான நிலைதான் உள்ளது…இதனை சரி செய்வது எவ்வாறு? மேலும் சிலர் உணர்ச்சியை அடக்குதலும் தவறாகும் என்கிறார்களே… – Kumar
ரௌத்ரம் பழகு – என்று தான் பாரதி சொன்னார் . ரௌத்ரத்தை விட சொல்லவில்லை. பழகு என்றால் .. வார்த்தைகளால், நடவடிக்கைகளால், behavior ஆல் .. பழகுவது.
எனக்கு கோபம் வரும்போது நான் என்ன செய்கிறேன் என்பதை சொல்கிறேன். அது உதவி புரிவதாக இருந்தால் .. எடுத்துக்கொள்ளலாம். கையறு நிலையில் தான் பெரும்பாலும் கோபம் வருகிறது. அப்பொதெல்லாம் நான் எனக்குள் ஒரு கேள்வியை செலுத்துகிறேன். ” இன்னும் நான் எதில் முன்னேற வேண்டும் ? “. அந்த கேள்விக்கான பதிலை நோக்கி என் கோபத்தை செலுத்துகிறேன்.
கடைசியாய் கோபம் அடைந்த பொழுதினை உடல் நலம் நோக்கி திருப்பி இருக்கிறேன். இதன் உச்சம் என்ன என்பதை கவனித்த பின் அது என் இயல்பாகிப் போகும். அதற்கு முன் வந்த கோபம் தினசரி 10000 steps நடப்பதில் கரைந்து இன்னும் கரைந்து கொண்டே இருக்கிறது. ஆக .. . உணர்ச்சி வசப்படுதல் … என்பது நல்லது – அது நம்மை அடுத்த நிலை நோக்கி நகர்த்தினால் !
கோபம், உணர்ச்சி வசப்படுதல் எல்லாம் … constructive ஆக திருப்ப படுவதால் … அது அடக்கப்படுவதில்லை.
உங்களின் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறேன் என நம்புகிறேன்.
இது சம்பந்தமாக வேறு கேள்விகள் இருந்தால் comment இல் பதிவு செய்யவும் .





