நகரும் புல்வெளி : 40
நட்பு ஒன்றின் குழந்தைகளுடன் ஒரு சிறு Drive.
” Rowdy Baby ” song இருக்கா uncle ? ”
அப்படித்தான் ஆரம்பித்தது அந்த Drive.
“பேட்ட song ? ”
பின்னால் இருந்து நரேன் கேட்டார்.
” இளமை திரும்புதே ”
பாடல் ஓட ஆரம்பித்தது.
குழந்தைகள் விரும்பும் பாடலை போட்டுவிட்டு அவர்களை கவனித்தது உண்டா நீங்கள் ? ஜன்னல் வழி பார்த்துக்கொண்டே அதே பாடலை அவர்கள் humming செய்யும் அழகு எந்த கோவில் தெய்வத்திடமும் கிடைக்காது.
” நீயும் நானும் வந்து .. கண்கள் கோர்த்து கொண்டு ” ..
” இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். ” ஸ்வேதா சொன்னார்.
CCD யில் நிறுத்தினோம். அவர்களுக்கு தேவையானதை order செய்து கொண்டிருந்தபோது … நரேன் கேட்டார் ..
” uncle உங்களுக்கு ? ”
நான் சிரித்தேன். (சிரிப்பு போல நம்மை காப்பாற்றும் அழகு ஏதும் உண்டா ? )
” ஹேய் .. uncle sugar சாப்பிட மாட்டாங்க. Green Tea மட்டும்தான். ” ஸ்வேதா உதவிக்கு வந்தார்.
பேசிக்கொண்டே புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
மீண்டும் Drive.
” Uncle நீங்க நல்லா பாடறீங்க ” ஸ்வேதா
அமைதியாக சிரித்தேன்.
” Uncle .. உங்களுக்கு பிடிச்ச hero யாரு ? ”
” ரஜினி ”
” heroine ? ”
ஒரு நிமிடம் தடுமாறியது ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. யாரை சொல்வது. எம் காலத்து heroines அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
” இப்போ யாரு இருக்கா ? ” கேட்டேன்.
“நயன்தாரா, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ்… ” ஸ்வேதா சொல்ல ..
” ஆண்ட்ரியா ” என்று சமாளித்தேன்.
“Latest படம் எது பிடிக்கும் ? ”
என்ன சொல்வது ? யோசித்து .. Avengers சொன்னேன்.
நரேன் கிட்டத்தட்ட முன் சீட்டுக்கே வந்துவிட்டார். ” Avengers பார்த்தீங்களா ? ”
” ஆமா ”
” நீங்க என்ன சின்ன குழந்தையா ? AVengers லாம் பார்க்கறீங்க ?”
” பின்னே உங்க கூடவெல்லாம் பேசணுமே ”
எல்லோரும் சிரித்தோம்.
” நான் வேணா பெரிய மனுஷனா கொஞ்ச நேரம் இருக்கட்டுமா ? ”
இருவரும் சிரிப்பை நிறுத்திவிட்டு திக் கென்று பார்த்தனர். ( பெரியவர்கள் நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் impact இவ்வளவு தான் ! )
உடனடியாக என் Postures ஐ Rigid ஆக மாற்றினேன். ” பசங்களா சும்மா அடக்கமா உக்காரணும். சும்மா சத்தம் போட்டீங்க கோபம் வரும் எனக்கு. SIde எல்லாம் தொடக்கூடாது ”
ஸ்வேதா உடனடியாக சொன்னாள்…
” Uncle வேண்டாம். நீங்க பழைய மாதிரியே இருங்க ”
மீண்டும் எல்லோரும் சிரித்தோம். ஆம். குழந்தைகள் உலகில் நீங்கள் குழந்தைகளாக இருந்தால் entry card உண்டு. இல்லை எனில் exit தான் அவர்களின் மனதில் இருந்து !
வீட்டிற்கு வந்தபின் … கொஞ்ச நேரம் அவர்களின் அனுபவங்களை நட்பிடம் பகிர்ந்து கொண்டு இருந்த அவர்கள் திடீரென்று காணாமல் போனார்கள்.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்பினேன்.
ஸ்வேதா விடம் சொல்லிவிட்டு செல்லும்போது .. ஒரு Painting ஒன்றை பரிசாக கொடுத்தார்.
” Visit Again ” என்று அழகாக சிரித்தது அந்த ஓவியம்.
” Uncle .. எங்களை மறக்க மாட்டீங்களே ” என்று வழியனுப்பும்போது அவர்கள் கேட்ட கேள்வி இன்னும் உள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது. Window வை மூடாமல் அவர்களை பார்த்துக்கொண்டே City நகர்ந்தது.
குழந்தைகளுக்கு நீங்கள் பரிசு கொடுப்பது இருக்கட்டும். குழந்தைகளிடம் பரிசு வாங்க முடிந்தால் … நீங்கள் சொர்க்கத்தை தரிசித்து வருகிறீர்கள் என்று அர்த்தம்.
திரும்ப வரும்போது Salem City வெறுமையாக இருந்தது. எம் City யும். ஆனால் ஒரு பாடல் மட்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது.
” நீயும் நானும் வந்து .. கண்கள் கோர்த்து கொண்டு ”
கண்களில் கோர்த்திருந்தது .. நீர் மட்டுமல்ல.
” மறக்க மாட்டீங்களே ” என்கிற கேள்வியும் !