Q & A 008
பல நேரங்கள்ல மனசுக்குள்ளேயே பேசிக்கொள்கிறோமே… அதை கட்டுப்படுத்த தடுக்க என்ன செய்யனும் ? – Prema Venkatesh
கட்டுப்படுத்த வேண்டுமா ? ஏன் ? ஆச்சர்யமான கேள்வி இது. ஆனால் மிக முக்கியமான கேள்வியும். கவனிப்போம்.
Inner Dialogue எனப்படும் ஆழ்மனக்குரல் நாம் உணர்வுக்கு வந்த நாள் முதல் இறக்கும் வரை நம்முடன் பயணிக்கும் ஒன்று. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் எனில் நம்முடைய எண்ணங்களின் தொகுப்புகளின் Audio Representation என்பதே inner Dialogue தான்.
ஒரு விஷயத்தை நாம் செய்யும் முன் – ஆழ்மனக்குரல் நம்முடன் பேசும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? உதாரணத்திற்கு காலையில் எழும் போது ” எழுந்திருக்கலாம், சரியாக முழிச்சாச்சு ” என்று அது பேசும். அல்லது .. ” இன்னும் கொஞ்சமா தூங்குவோம் ” என்றும் அது பேசும். அதாவது எண்ண வீச்சு எப்படியோ அப்படித்தான் ஆழ்மனக்குரலும். நான் Alarm வைத்தாலும் .. 365 நாட்களில் கிட்டத்தட்ட 350 நாட்கள் நானே எழுந்து Alarm ஐ off செய்வேன். அப்போது எம் ஆழ்மனக்குரல் சொல்லும் வார்த்தை .. ” Hello Machine .. நான் தான் ஜெயித்தேன் “.
நாம் தவறு செய்யும்போது ஆழ்மனக்குரல் மட்டுமே நம்மை முதலில் எச்சரிக்கும் உண்மையான நண்பன். இந்த உலகின் அனைத்து தவறுகளும் நடக்கும் முன்பு, அதை பற்றி எச்சரித்த ஒரே ஒரு நட்பு எனில் அது அவரவர் களுக்கு உள்ளே ஒலிக்கும் ஆழ் மணக் குரல் மட்டுமே.
” வேண்டாம் இது சரியல்ல ” என்று சொல்லும் அதை மீறி செய்யும்போது தான் நாம் குற்ற உணர்வுக்கு வருகிறோம். ஆக .. தவறுகள் போது நம்மிடம் முதலில் பேசுவது ஆழ்மன குரல் மட்டுமே. ஆழ் மனக் குரலை கேட்டதால் நல்ல உயரம் பெற்ற மனிதர்களும் உண்டு. கேட்காமல் நல்ல உயரத்தில் இருந்து விழுந்தவர்களும் உண்டு. ” அப்பவே நினைச்சேன் ” என்று பேசுகிறோமே… அந்த ” அப்பவே நினைச்சேன் ” சத்தியமாக உங்களின் ஆழ் மனக் குரல் பேசிய உண்மை மட்டுமே !
ஆழ்மனக்குரல் Excellent ஆக வர நாம் எண்ண செய்ய வேண்டும் ?
தீதும் நன்றும் பிறர் தர வாரா – என்பது போல .. நல் எண்ணங்கள் உள்ளே செல்ல செல்ல ஆழ் மனக் குரல் .. நம்முள் செழிக்க ஆரம்பிக்கும். ( எண்ணங்களின் Audio Representation தான் ஆழ் மனக் குரல் – என்பது ஞாபகம் இருக்கட்டும் ! ). நல் எண்ணங்கள் உள்ளே செல்ல செல்ல .. ? ஆம். இங்கேதான் மனிதர்களை படித்தலும், புத்தகம் படித்தலும் முக்கியமாக மாறுகிறது. இது இரண்டில் இருந்து பெறப்படும் நேர்மறை எண்ணங்களே .. ஆழ் மனக் குரலை வலுப்படுத்துகின்றன.
ஆக .. ஆழ்மனக் குரலை கட்டுப்படுத்த தடுக்க வேண்டியதில்லை. அதை ஒழுங்காக முழுமையாக கேட்பதே நல்லது. சிறப்பான ஆழ் மனக் குரலுக்கு நல் எண்ணங்களை உள் செல்லுதல் மிகவும் நல்லது. ஆழ் மனக் குரல் நம்முடைய மிகச் சிறந்த நட்பு. நம்மின் அட்டகாச பலம்.
அதை கேட்க ஆரம்பிப்போம். முழுமையாக. எதிர்ப்பு உணர்வின்றி. ஏன் எனில்.. அங்கே தான் .. நம் வாழ்வின் எதிர்காலம் design செய்யப்படுகிறது.





