Q and A – 010
ஒரு ஆண் அன்பாக இருக்க வேண்டுமெனில் பெண் எப்படி இருக்க வேண்டும்?
ஒரு பெண் அன்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்
Kirthika
இதில் ஆண் பெண் எல்லாம் எங்கே வந்தது ?
இரண்டு Survival Beings. அவ்வளவே. Together என்ற ஒற்றை வாழ்விற்காக தமக்குள் ஏகப்பட்ட adjustments செய்து கொள்வதற்கு அன்பு என்று எப்போது பெயரிட்டோமோ அப்போதே அன்பை கொன்று விட்டாயிற்று.
அன்பு என்பது என்னை பொறுத்தவரை unconditional understanding கில் மட்டுமே கிடைக்கும். ( கடவுள் அப்படித்தானே நம்மை ஏற்க வேண்டும் என்று விரும்புகிறோம் ! ) மனித உறவில் அன்பு என்பது போலிகள் நிறைந்த Mask களுக்கு பின்னே இருப்பதாக நீங்கள் நம்பினால் உங்களின் ஏமாற்ற உலகிற்கு எம் முன் வாழ்த்துக்கள்.
ஆண் பெண்ணெல்லாம் இங்கே இல்லை. சம பாலினம் கடினப்படும்போது உதவுவதும், முன்னேறும்போது ரசிப்பதும் மட்டுமே தேவை. எப்போது சுயநலம் இதில் சேர்கிறதோ அப்போதே அன்பு bye சொல்லி விடுகிறது.
உங்களின் கேள்விக்கு பதில் கிடைத்து இருக்கலாம். இன்னும் கேள்விகள் இருப்பின் கேட்கவும்.





