Q and A 011
Jayasekaran Zen சகோ எல்லோரும் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மனம் அவர்களின் மனோநிலை அல்லது சூழ்நிலை பற்றி யோசிக்க மறுப்பது ஏன்?
தனக்கு சாதகமானதை பற்றிக் கொண்டு அது தான் நியாயம் என்று போராடுவது ஏன்? Parvatham Siva
Flexibility அற்ற மனம் தான். ஒரு பக்க பார்வை ஒரு வியாதி. தன் பக்க நியாயம் இருந்தபோதும், எதிர்ப்பக்க நியாயம் தெரிய mind flexibility தேவை. பொதுவாகவே நாம் இறுக்கமாகவே வளர்கிறோம். நம் பள்ளிக்கூட ஜன்னல்கள் மூட மட்டுமே பயன்படுகின்றன. திறக்க பயன்படுவது இல்லை.
இன்னொரு பக்க நியாயம் கேட்பதற்க்கே பதறும் நிறைய மனிதர்களை கவனிக்கிறேன். நம் பக்க கருத்தை சொல்ல வேண்டும். அதை மற்றவர்கள் கேட்க வேண்டும். இது மட்டுமே அவர்களின் உலகம்.
நான் பொதுவாக எம் பக்க நியாயங்களை சொல்லி வருடங்கள் ஆகிறது. ஆனால் எனக்கு தெரிந்து என்னிடம் பேசும் யாரும் எம் பக்க நியாயம் என்ன என்று கேட்டதில்லை. மாறாக .. ‘ இவர் அமைதியாக கேட்கிறார் ‘ என்று தம் பக்க நியாயங்களை கொட்டிக்கொண்டே இருப்பதை கவனிக்கிறேன்.
ஆபிரகாம் லிங்கன் சொன்னது உங்களுக்கு பயன்படலாம். ” எனக்கு அவரை / அவர் சொல்வதை பிடிக்கவில்லை. அவரை பற்றி இன்னும் நான் தெரிந்து கொள்ள வேண்டும் ”
நமக்கு தெரிந்த சிற்றரிவில் உலகை அளந்து நீள அகலங்களை சொல்ல முயற்ச்சிக்கும் மனிதர்களை சிரித்து கடக்கிறேன்.
பொதுவாக மூன்று உண்மைகள் உண்டு.
1. நாம் சொல்வது
2. அவர்கள் சொல்வது
3. உண்மை.
ஆக .. flexibility இருப்பின் அந்த மூன்றாம் பாகம் கண் வசப்படும்.
உங்களின் கேள்விக்கு பதில் சொல்லி இருப்பதாக நம்புகிறேன். கேள்விகள் இருப்பின் கேட்கவும் .





