Q and A 013
அண்ணா , குழந்தைகளை நன்றாக வளர்க்கிறேனா என்ற கேள்வி என்னுள் எப்பொழுதும் ஒலித்துகொண்டே இருக்கிறது. தேவையில்லாத பொருட்களை வாங்கி கொடுத்தால் பணத்தின் , உழைப்பின் அருமை தெரியாதென்று அதை தவிர்த்தேன்.தேவையானதை வாங்கி கொடுப்பதில் ஒரு குறையும் வைப்பதில்லை.ஒரு கட்டத்தில் ,அவளுக்கு தேவையானவற்றை ( corbonated drink , junk food , slaim, small small play doughs) அவள் நண்பர்களிடமிருந்து கேட்டு வாங்க பழகிக்கொண்டாள் .ஆனால் ஒரு கட்டத்தில் அவளே என்னிடம் அனைத்தையும் சொல்லி விட்டாள் .அதற்கு ” Dont ask your friends , i will buy for you if you needed .But onething you should know, these are all unwanted bad things .Still you wanted those things , definitly i will buy” . இப்பொழுதெல்லாம் அவள் கேட்ப்பதை வாங்கிகொடுக்கிறேன். ஆனால் குற்ற உணர்ச்சி வாட்டுகிறது.இப்பொழுது அவள் நண்பர்களிடம் ஏதும் கேட்ப்பதில்லை . – Personal Message
சில நாட்களுக்கு முன் #zenlpteensleadership program இல் சொன்னவற்றை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் .
* நிறைய செய்கிறோம் குழந்தைகளுக்கு. ஆனால் .. செய்வதை educate செய்வதில்லை நாம். ( குத்தி காண்பிப்பது வேறு ! அதை அழகாக செய்கிறோம் )
* Benz Car வாங்கி தருவதில் பிரச்சினை இல்லை. ஆனால் பேருந்தில் பயணம் செய்தும் அவன் பழக வேண்டும். ( அதற்கு நாம் முதலில் அப்படி செல்ல நினைக்க வேண்டும். ).
* Junk food வாங்கி கொடுக்கலாம். ஆனால் அவற்றின் Nutrients Chart பற்றி educate செய்தால் அவர்களே அழகாக முடிவெடுப்பார்கள். சர்க்கரை பற்றி நான் பேசிய பின் teen ஒன்று எனக்கு வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறது.
* நம் பிரச்சினையே அவர்கள் கேட்கும்போது போதிக்கும் mode க்கு செல்வதுதான். மற்ற நேரங்கள் தான் போதனைக்கு ஏற்ற நேரங்கள். இன்னும் சரியாக சொல்லப்போனால் நம்மில் எத்தனை parents – சர்க்கரை யை விட்டு வெளியேறி வாழ்கிறோம் ? தவறு என்று தெரிந்தும் .. சாப்பிட தானே செய்கிறோம் .என் தங்கை மகன் அவனின் நண்பனிடம் சொன்னான் ” மாமா சர்க்கரை சாப்பிட மாட்டாங்க. நானும் ஒரு நாள் வளர்ந்த உடனே நிறுத்திடுவேன் “. இங்கே இருக்கிறது Becoming a Sample. அப்படி ஆனால் பேசவே தேவை இல்லை.
* Educate செய்யாமல் தடுக்கப்படும் விஷயங்களை ( sex உள்பட ) அவர்கள் நிச்சயமாக வேறு வழிகளில் தொட்டு விட முயற்ச்சிப்பார்கள். அங்கே தான் தேவையற்ற நட்புக்கள் உள்ளே வரும். ஆக .. கிடைக்கும் இடங்களில் எல்லாம் Being a Sample ஆக இருந்து Educate செய்வது தான் Parenting.
உங்களின் கேள்விக்கு பதில் அளித்து இருப்பேன். இன்னும் கேள்விகள் இருப்பின் கேட்கவும் .