தூக்கமது கண் விடேல் : 001
#தூக்கமதுகண்விடேல் – முன்னுரை.
” Busy யா இருக்கேன். தூங்கவே நேரம் இல்லை ” என்று பெருமையாக சொன்ன அதே நான் தான் இந்த புத்தகம் எழுத முனைகிறேன். ஆம். எம் வாழ்வில் நான் எப்போதும் கடைசி Choice ஆக வைத்திருக்கும் ” தூக்கம் ” பற்றி நான் படிக்க ஆரம்பித்த பின் தான் புரிய வந்தது – தூக்கம் கொடுக்காது எம் சொந்த உடலை எவ்வளவு கெடுத்திருக்கிறேன் என்பது ! தூக்கம் நாம் நினைப்பது போல கடைசி Option அல்ல. அதுவே முதல் Option.
வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை நாம் தூங்கி கழிக்கிறோம். அதாவது 60 வருடம் வாழ்ந்தால், இருபது வருடம் தூக்கத்தில் ! இது இயற்கையின் கணக்கு. ஆனால் நாம் … பொருள் சேர்க்கும், புகழ் சேர்க்கும், பணம் சேர்க்கும் ஆசையில்.. முதலில் கைவைப்பது இந்த தூக்கத்தின் மேல்தான் ! 5 மணி நேர தூக்கம் தான் கொடுக்க முடியும் அதற்கு மேல் எல்லாம் கொடுக்க முடியாது என்று திமிராக பேசிய அதே நான் தான் இப்போது ஒரு சிறு கணக்கு சொல்கிறேன் .. ” இரண்டு மணி நேரம் விழித்து இருந்தால், ஒரு மணி நேரம் தூங்க வேண்டும் “. அதாவது காலை 06 மணிக்கு எழுந்து, இரவு 10 மணிக்கு தூங்கினால், 16 மணி நேர கணக்கு. இதற்கு நாம் 08 மணி நேரம் தூங்க வேண்டும். கட்டாயமாக !
தூக்கம் என்று வந்தபின் முதலில் நாம் இழப்பது – காட்சிகளை. பின் ஒலியை. பின் வாசனை மற்றும் சுவையினை. பின் தூங்குகிறோம் என்று கூட உணராத அளவிற்கான உணர்வை. ஆக 5 புலன்களும் நம்மில் இருந்து விலகும் நிகழ்வே தூக்கம். ( அதே சமயம் .. Auto Pilot Mode இல் அவை இயங்கிக்கொண்டே இருக்கின்றன. சிறு சத்தம் கேட்டால், யாராவது விளக்கை on செய்தால், புது வாசனை வந்தால், அருகே யாராவது நடமாடினால் .. நாம் சட்டென விழிப்பது அந்த Auto Pilot mode ஆல் தான் ! )
தூக்கம் Release செய்யும் Hormones களால் தான் 1. உடல் வளர்ச்சி 2. Cell Damage எனில் திருத்துதல் 3. தசைகளின் கட்டுமானத்தை சரி செய்தல் போன்றவை நிகழ்கின்றன. தூக்கம் இல்லை எனில் முதலில் பாதிப்படைவது இவை தான். இதில் Cell Damage சரி செய்யப்படவில்லை எனில் .. வரப்போகும் நோய்கள் பற்றி எல்லாம் இந்த தொடர் கற்றலில் கவனிக்க போகிறோம்.
தூக்கத்தின் போதுதான் நம் ” Learning & Memory ” improve ஆகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? நாள் முழுக்க நாம் சேகரிக்கும் தகவல்களை, ஆராய்ந்து அதில் தேவையான / தேவையற்ற வை பிரித்து, தேவையானதை Memory க்கு அனுப்பி, மீண்டும் Retrieval அதாவது …. நினைவு படுத்த தேவையான Coding ஐயும் செய்து… நாம் அனைவரும் அசந்து போகும் இயற்கையின் தொழில் நுட்பம் இது ! இதை அலட்சியப்படுத்தி விட்டு .. நாம் பெறுவதே ..
1. ஞாபக மறதி
2. கற்றல் குறைபாடு
3. பகுத்து ஆராய்தலில் குழப்பம்.
என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா ?
இன்றைய இளம் தலைமுறை 8 மணி நேரம் தூங்குவதற்கு பதில் 04 மணி நேரம் அளவே தூங்குகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?
வியாபாரம், பணம் சேகரிப்பு, புதிய முயற்சிகள் போன்றவற்றில் … நாம் இழக்கும் தூக்கம் ஏற்படுத்தும் பின் விளைவுகளை எவ்வளவு பணம் இருந்தாலும் பெற முடியாது என்று நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும் ?
தூக்கத்திற்கும் Cancer க்கும் இருக்கும் தொடர்பு ?
தூக்கத்திற்கும் உணவிற்கும் இருக்கும் தொடர்பு ?
தூக்கம் சார் பிரச்சினைகள் ?
கவனிப்போம். ஒவ்வொன்றாக கற்போம்.
இந்த தொடர் நிறைவடையும் போது .. அநேகமாக நீங்களும் உங்கள் குடும்பமும் 08 மணி நேர தூக்கத்தை அடைந்து இருக்க கூடும். அல்லது தூக்கத்தில் உள்ளவற்றை அடுத்த தலைமுறைக்கு சொல்ல தயாராக கூடும்.
பயணிப்போம். ஒரு Community யாக. நல் இரவு தூக்கம் நோக்கி !